ஜிஜே 1132

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜிஜே 1132
நோக்கல் தரவுகள்
ஊழி J2000      Equinox J2000
பேரடை Vela
வல எழுச்சிக் கோணம் 10h 14m 51.77869s[1]
நடுவரை விலக்கம் −47° 09′ 24.1928″[1]
தோற்ற ஒளிப் பொலிவு (V)13.46[2]
இயல்புகள்
விண்மீன் வகைM4[2]
வான்பொருளியக்க அளவியல்
ஆரை வேகம் (Rv)34.66±0.48[1] கிமீ/செ
Proper motion (μ) RA: −1,054.201 மிஆசெ/ஆண்டு
Dec.: +414.512 மிஆசெ/ஆண்டு
இடமாறுதோற்றம் (π)79.3206 ± 0.0182[1] மிஆசெ
தூரம்41.119 ± 0.009 ஒஆ
(12.607 ± 0.003 பார்செக்)
விவரங்கள்
திணிவு0.194±0.005[3] M
ஆரம்0.215±0.009[3] R
ஒளிர்வு0.00436±0.00013[3] L
வெப்பநிலை3,196±71[3] கெ
சுழற்சி122.3+6.0
−5.0
 d
[4]
வேறு பெயர்கள்
RAVE J101451.9-470925, Gaia DR2 5413438219396893568, GJ 1132, L 320-124, LFT 707, LHS 281, LTT 3758, NLTT 23819, PM 10129-4655, PM J10148-4709, GCRV 26265, 2MASS J10145184-4709244, WISEA J101450.66-470919.7 [RHG95] 1608[5]
தரவுதள உசாத்துணைகள்
SIMBADdata
NStEDdata
Extrasolar Planets
Encyclopaedia
data

ஜிஜே 1132 (GJ 1132) என்பது வேலா விண்மீன் தொகுப்பில் பூமியிலிருந்து 41.1 ஒளியாண்டுகள் (12.6 புடைநொடிகள்) தொலைவில் உள்ள ஒரு சிறிய செங்குறுமீனாகும்.[1] 2015 ஆம் ஆண்டில், ஒரு சூடான பாறைவகை புவி அளவிலான கோள் ஒவ்வொரு 1.6 நாட்களுக்குமளொருமுறை விண்மீனைச் சுற்றி வருவது தெரியவந்தது. 2018 இல், இரண்டாவது கோளும் மூன்றாவது கோளும் இருத்தல் சாத்தியமானதென உணரப்பட்டது.[4]

கோள் அமைப்பு[தொகு]

2018 ஜூன் 12, ,நிலவரப்படி, இரண்டு உறுதிப்படுத்தப்பட்ட புறக்கோள்களும் மேலும் ஒரு புறக்கோளும் ஜிஜே 1132 விண்மீனைச் சுற்றி வருகின்றன.

ஜிஜே 1132 பி[தொகு]

ஜிஜே 1132 பி என்பது GJ 1132 விண்மீன்மண்டலத்தின் உள் கோளாகும். அதே போல் இது மிகச்சிறியது. இது 1.13 R ஆரமும் 1.66 புவியளவுப் பொருண்மையும் கொண்டு புவியை ஒத்திருக்கிறது. இது புவியை விட சற்று அடர்த்தியானதும் 30% அதிக மேற்பரப்பு ஈர்ப்பு விசையும் கொண்டதாகும், அதாவது பாறையை உட்கூறாகக் கொண்ட தாகும். புவியுடன் இதன் ஒற்றுமைகள் இருந்தபோதிலும், அதன் 1.6 நாள் வட்டணை அலைவுநேரத்தினால் 19 மடங்கு அதிக சூரிய ஒளியைப் பெறுவதால், அது வாழத் தகுதியற்றதாக மிகவும் வெப்பமாக கருதப்படுகிறது. லாம் ஆண்டில், கோளுக்கு வளிமண்டலம் உள்ளதா என்பது தெளிவாகத் தெரியவில்லை, சில ஆய்வுகள் வளிமண்டலத்திற்கான சான்றுகளைக் கண்டறிந்தன. [6][7]ஆனால் மற்றவை வளிமண்டலத்தின் இருப்பு அல்லது இல்லாமையை முடிவில்லாத ஒரு தட்டையான, சிறப்பற்ற கதிர்நிரலைக் கண்டறிந்தன.[8][9][10]

ஜிஜே 1132 சி[தொகு]

2018, ஜூனில் சிலியில் உள்ள இலா சில்லா ஆய்வகத்தில் ஈசா (ESO) 3.6 மீ தொலைநோக்கியில் உள்ள கார்ப்சு கதிர்நிரல்பதிவி வழி ஜிஜே 1132 சி ஆனது பொன்பில்சு குழுவினரால் அறிவிக்கப்பட்டது. கோளின் கடப்பு எதுவும் கண்டறியப்படவில்லை, ஆனால் இது புவியின் குறைந்த அளவு பொருண்மை சுமார் 2.6 M அளவு கொண்டுள்ளது. மேலும் 300 கெ சமனிலை வெப்பநிலையுடன் புவியையை விட 1.9 மடங்கு சூரிய ஒளியைப் பெறுகிறது. இது ஜிஜே 1132 விண்மீனின் வாழக்கூடிய மண்டலத்தின் உள் எல்லைக்கு வெளியே சுற்றுகிறது (இது புவியின் விண்மீன் பாயத்தை விட 1.6 மடங்கு அதிகமாகும்), ஆனால் கோல் வளிமண்டலத்தின் சரியான பண்புகள் தெரியாததால், அது இன்னும் வாழக்கூடியதாக இருக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், கடப்பு ஏதும் இல்லாததால், அதன் வளிமண்டல பண்புகளைத் தீர்மானிப்பது மிகவும் கடினமாக இருக்கும்.

ஜிஜே 1132 டி[தொகு]

உறுதிப்படுத்தப்படாத குளிர் மீப்புவியும் இந்த விண் அமைப்பில் கண்டறியப்பட்டது, குறைந்தபட்ச பொருண்மை சுமார் 8.4 M. குறைந்த சமனிலை வெப்பநிலை 111கெ ஆகும் இது உறுதிப்படுத்தப்பட்ட கோலாகக் கருதப்படாததால் அடைப்புக்குறியுடன் ஜிஜே 1132 (டி) என பெயரிடப்பட்டுள்ளது. GJ 1132 b மற்றும் c உடன் ஒப்பிடக்கூடிய 0.01% க்கும் குறைவான தவறான எச்சரிக்கை நிகழ்தகவு கொண்ட குறிகை இருந்தபோதிலும், அது விண்மீனின் காந்தச் சுழற்சியின் காலத்திற்கு அருகில் உள்ளது.

GJ 1132 தொகுதி[4][11]
துணை
(விண்மீனில் இருந்து)
திணிவு அரைப்பேரச்சு
(AU)
சுற்றுக்காலம்
(நாட்கள்)
வட்டவிலகல்
b 1.66 ± 0.23 M 0.0153 ± 0.0005 1.6289304(13)[12] <0.22
c >2.64 ± 0.44 M 0.0476 ± 0.0017 8.929 ± 0.010 <0.27
d (உறுதிப்படுத்தப்படவில்லை) >8.4 +1.7
−2.5
M
0.35 ± 0.01 176.9 ± 5.1 <0.53

மேலும் பார்க்கவும்[தொகு]

  • வுல்ஃப் 1061

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 Vallenari, A. et al. (2023). "Gaia Data Release 3. Summary of the content and survey properties". Astronomy and Astrophysics 674: A1. doi:10.1051/0004-6361/202243940. Bibcode: 2023A&A...674A...1G.  Gaia DR3 record for this source at VizieR.
  2. 2.0 2.1 Bidelman, W. P. (October 1985), "G. P. Kuiper's spectral classifications of proper-motion stars", The Astrophysical Journal Supplement Series, 59: 197–227, Bibcode:1985ApJS...59..197B, doi:10.1086/191069.
  3. 3.0 3.1 3.2 3.3 Pineda, J. Sebastian et al. (September 2021). "The M-dwarf Ultraviolet Spectroscopic Sample. I. Determining Stellar Parameters for Field Stars". The Astrophysical Journal 918 (1): 23. doi:10.3847/1538-4357/ac0aea. 40. Bibcode: 2021ApJ...918...40P. 
  4. 4.0 4.1 4.2 Bonfils, X.; et al. (October 2018), "Radial velocity follow-up of GJ1132 with HARPS. A precise mass for planet 'b' and the discovery of a second planet", Astronomy & Astrophysics, 618: 12, arXiv:1806.03870, Bibcode:2018A&A...618A.142B, doi:10.1051/0004-6361/201731884, S2CID 119394477, A142.
  5. "GJ 1132". SIMBAD. Centre de données astronomiques de Strasbourg. பார்க்கப்பட்ட நாள் 2020-08-31.
  6. "Atmosphere around super-Earth detected", phys.org, April 6, 2017, பார்க்கப்பட்ட நாள் April 6, 2017.
  7. Swain, Mark R.; Estrela, Raissa; Roudier, Gael M.; Sotin, Christophe; Rimmer, Paul B.; Valio, Adriana; West, Robert; Pearson, Kyle et al. (2021). "Detection of an Atmosphere on a Rocky Exoplanet". The Astronomical Journal 161 (5): 213. doi:10.3847/1538-3881/abe879. Bibcode: 2021AJ....161..213S. 
  8. Diamond-Lowe, Hannah et al. (2018). "Ground-based Optical Transmission Spectroscopy of the Small, Rocky Exoplanet GJ 1132b". The Astronomical Journal 156 (2). doi:10.3847/1538-3881/aac6dd. Bibcode: 2018AJ....156...42D. 
  9. Mugnai, Lorenzo V.; Modirrousta-Galian, Darius; Edwards, Billy; Changeat, Quentin; Bouwman, Jeroen; Morello, Giuseppe; Al-Refaie, Ahmed; Baeyens, Robin et al. (2021-04-05). "ARES.* V. No Evidence for Molecular Absorption in the HST WFC3 Spectrum of GJ 1132 b". The Astronomical Journal 161 (6): 284. doi:10.3847/1538-3881/abf3c3. Bibcode: 2021AJ....161..284M. 
  10. Libby-Roberts, Jessica E.; Berta-Thompson, Zachory K.; Diamond-Lowe, Hannah; Gully-Santiago, Michael A.; Irwin, Jonathan M.; Kempton, Eliza M.-R.; Rackham, Benjamin V.; Charbonneau, David et al. (2022). "The Featureless HST/WFC3 Transmission Spectrum of the Rocky Exoplanet GJ 1132b: No Evidence for a Cloud-free Primordial Atmosphere and Constraints on Starspot Contamination". The Astronomical Journal 164 (2): 59. doi:10.3847/1538-3881/ac75de. Bibcode: 2022AJ....164...59L. 
  11. "GJ 1132 b Confirmed Planet Overview Page", NASA Exoplanet Archive, பார்க்கப்பட்ட நாள் 2018-06-11.
  12. Kokori, A. et al. (14 February 2023). "ExoClock Project. III. 450 New Exoplanet Ephemerides from Ground and Space Observations". The Astrophysical Journal Supplement Series 265 (1). doi:10.3847/1538-4365/ac9da4. Bibcode: 2023ApJS..265....4K.  Vizier catalog entry
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜிஜே_1132&oldid=3836454" இலிருந்து மீள்விக்கப்பட்டது