வேலா (விண்மீன் குழாம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Vela
வேலா
விண்மீன் கூட்டம்
Vela
வேலா இல் உள்ள விண்மீன்கள்
சுருக்கம்Vel
GenitiveVelorum
ஒலிப்பு/ˈvlə/,
genitive /v[invalid input: 'ɨ']ˈlɔːrəm/
அடையாளக் குறியீடுthe Sails
வல எழுச்சி கோணம்9 h
நடுவரை விலக்கம்−50°
கால்வட்டம்SQ2
பரப்பளவு500 sq. deg. (32nd)
முக்கிய விண்மீன்கள்5
பேயர்/ஃபிளேஸ்டெட் குறியீடு
50
புறவெளிக் கோள்களுடைய விண்மீன்கள்7
> 3.00m ஒளிமிகுந்த விண்மீன்கள்5
10.00 பார்செக் தூரத்திற்குள் உள்ள விண்மீன்கள்3
ஒளிமிகுந்த விண்மீன்γ Vel (1.75m)
மிக அருகிலுள்ள விண்மீண்WISE 1049-5319
(6.6 ly, 2.0 pc)
Messier objects0
எரிகல் பொழிவுDelta Velids
Gamma Velids
Puppid-velids
அருகிலுள்ள
விண்மீன் கூட்டங்கள்
Antlia
Pyxis
Puppis
Carina
Centaurus
Visible at latitudes between +30° and −90°.
March மாதத்தில் 21:00 (மாலை 9.00) மணிக்கு தெளிவாகக் காணலாம்.

வேலா என்பது தெற்கு வானத்தில் காணப்படும் ஒரு விண்மீன் குழுவாகும். இது அர்கோ நாவிஸ் பெரிய வட்டார விண்மீன் குழுவின் ஒரு பகுதியாகும். பழங் காலத்தில் அர்கோ நாட்ஸ் எனப்படும் கப்பலைச் சித்தரிக்குமாறு அர்கோ நாவிஸ் என்ற பெரிய வட்டார விண்மீன் கூட்டம் நிறுவப்பட்டது. அதை மூன்று அல்லது நான்கு பகுதியாகப் பிரித்து வேலா, பப்பீஸ் (puppies, கரீனா எனப் பெயரிட்டு அழைத்தனர்.[1][2][3] இலத்தீன் மொழியில் வேலா என்பது கப்பலின் பாய்மரப் பகுதியைக் குறிக்கும். இது விண் வெளியில் பால்வழி மண்டலத்தில் ஒரு பக்கம் பப்பீஸ், கரீனா வட்டாரங்களுடனும் மறுபக்கம் சென்டாரசுடனும் அமைந்திருக்கிறது. இது ஒரு பெரிய விண்மீன் வட்டாரமாக ஒரு காலத்தில் இருந்து பின்னர் பிரிக்கப்பட்டதால் இதில் ஆல்பா, பீட்டா குறியீட்டுடன் கூடிய விண்மீன்கள் இல்லை. தொலை நோக்கியில் இது 1.8 ஒளிப்பொலிவெண் கொண்ட முதன்மை விண்மீனாக வட்டாரத்தில் நீல நிறத்தில் பிரகாசமிக்கதாகத் தெரிகிறது. புறக் கூட்டிலுள்ள ஹைட்ரஜன் படலங்கள் யாவற்றையும் இழந்து விட்ட காமா 2 என்று குறிப்பிடப்படுகின்ற இது வுல்ப் ராயட் (Wolf Rayet) வகையைச் சேர்ந்த மிகவும் வெப்பமிக்க அரிய விண்மீனாகும். இவ்வட்டாரத்தில் 841 ஒளி ஆண்டுகளுக்கு அப்பாலுள்ள ரீகோர் (Regor) என்ற காமா வேலோரம் பல விண்மீன்களாலான தொகுப்பாகும். வெண் நீல நிறத்தில் ஒளிப்பொலிவெண் 3 கொண்ட காமா -1, ஒளிப் பொலிவெண் 8,9 கொண்ட அகன்ற இடைத் தொலைவுடன் கூடிய இரு உட் துணை விண்மீன்கள் ஆகியன இதில் உள்ளன.

மேற்கோள்[தொகு]

  1. John Scalzi (2008) Rough Guide to the Universe, p. 240 (ISBN 978-1-4053-8370-7).
  2. David H. Kelley, et al. (2011) Exploring Ancient Skies: A Survey of Ancient and Cultural Astronomy , p. 12 (9781441976246).
  3. Emily Winterburn (2009) The Stargazer's Guide, p. 124 (ISBN 978-0-06-197637-7).