ஜிஎல் கன்னிமீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
GL Virginis

A near-infrared light curve for GL Virginis, adapted from Díez Alonso et al. (2019)[1]
நோக்கல் தரவுகள்
ஊழி J2000      Equinox J2000
பேரடை Virgo
வல எழுச்சிக் கோணம் 12h 18m 59.3999s[2]
நடுவரை விலக்கம் +11° 07′ 33.7702″[2]
தோற்ற ஒளிப் பொலிவு (V)13.898[3]
இயல்புகள்
விண்மீன் வகைM5[4]
U−B color index+1.065[5]
B−V color index+1.88[5]
மாறுபடும் விண்மீன்Flare star
வான்பொருளியக்க அளவியல்
ஆரை வேகம் (Rv)5.82[3] கிமீ/செ
Proper motion (μ) RA: −1269.771±0.056[6] மிஆசெ/ஆண்டு
Dec.: 203.444±0.033[6] மிஆசெ/ஆண்டு
இடமாறுதோற்றம் (π)154.6999 ± 0.0445[6] மிஆசெ
தூரம்21.083 ± 0.006 ஒஆ
(6.464 ± 0.002 பார்செக்)
தனி ஒளி அளவு (MV)14.72[7]
விவரங்கள்
திணிவு0.12[7] M
ஆரம்0.16[8] R
மேற்பரப்பு ஈர்ப்பு (மட. g)5.0[9]
வெப்பநிலை3110[9] கெ
சுழற்சி வேகம் (v sin i)17[8] கிமீ/செ
வேறு பெயர்கள்
GL Vir, G 12-30, GJ 1156, LHS 324, LTT 13440, GCTP 2835.0, LP 494-77, 2MASS J12185939+1107338[3]
தரவுதள உசாத்துணைகள்
SIMBADdata

ஜிஎல் கன்னிமீன், ஜி 12-30 என்றும் அழைக்கப்படுகிறது, இது கன்னி ஓரையில் உள்ள ஒரு விண்மீனாகும் . இது சூரிய குடும்பத்தில் இருந்து 10 புடைநொடிகளுக்குள் அமைந்துள்ள 70% க்கும் அதிகமான விண்மீன்களைப் போன்ற ஒரு மங்கலான செங்குறுமீனாகும்; அதன் தோற்றப் பொலிவுப் பருமை 13.898 ஆகும். இதை வெற்றுக் கண்ணால் பார்க்க முடியாது.

21.1 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ள ஜிஎல் கன்னிமீன் M4.5V வகை முதன்மை விண்மீனாகும். மேலும், இது தோராயமாக 3110 கெ விளைவுறு வெப்பநிலையைக் கொண்டுள்ளது. இதன் ஒளிர்வு ( மின்காந்தக் கதிர்நிரலின் புலப்படும் பிரிவில் உமிழப்படுகிறது) சூரியனுடன் ஒப்பிடும்போது பத்தாயிரத்தில் ஒரு பங்கு மட்டுமே. இருப்பினும், அதன் கதிர்வீச்சின் குறிப்பிடத்தக்க பகுதி கண்ணுக்கு தெரியாத அகச்சிவப்பு ஒளியாக உமிழப்படுவதால், அதன் போலோமெட்ரிக் ஒளிர்வு சூரியனை விட 0.5% ஆக அதிகரிக்கிறது. இதன் பொருண்மை சூரியனைப் போல 12% ஆகும். இதன் ஆரம் சூரியனைப் போல 16% ஆகும். இது மிகவும் விரைவான சுழலி ஆகும்: அதன் சுழற்சி வேகம் குறைந்தது நொடிக்கு17  கிமீ ஆகும். இது தன் அச்சில் ஒரு சுழற்சியை முடிக்க அரை நாளுக்கும் குறைவான வட்டணை அலைவுநேரத்தை எடுத்துக்கொள்கிறது. விண்மீன் அடிக்கடி சுடருமிழ்வுகளை வெளியிடுகிறது. 2010 ஆம் ஆண்டில் குறைந்தது ஐந்துலுமிழ்வுகள் கண்டறியப்பட்டன.

ஜிஎல் கன்னிமீனுக்கு மிக நெருக்கமான விண்மீன் அமைப்பு கிலீசே 486, 6.4 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. [10]

மேற்கோள்கள்[தொகு]

  1. Díez Alonso, E.; Caballero, J. A.; Montes, D.; de Cos Juez, F. J.; Dreizler, S.; Dubois, F.; Jeffers, S. V.; Lalitha, S. et al. (January 2019). "CARMENES input catalogue of M dwarfs. IV. New rotation periods from photometric time series". Astronomy and Astrophysics 621: A126. doi:10.1051/0004-6361/201833316. Bibcode: 2019A&A...621A.126D. 
  2. 2.0 2.1 Brown, A. G. A. (August 2018). "Gaia Data Release 2: Summary of the contents and survey properties". Astronomy & Astrophysics 616: A1. doi:10.1051/0004-6361/201833051. Bibcode: 2018A&A...616A...1G.  Gaia DR2 record for this source at VizieR.
  3. 3.0 3.1 3.2 "V* GL Vir". SIMBAD. Centre de données astronomiques de Strasbourg. பார்க்கப்பட்ட நாள் 25 December 2016.
  4. Rodríguez Martínez, Romy; Lopez, Laura A.; Shappee, Benjamin J.; Schmidt, Sarah J.; Jayasinghe, Tharindu; Kochanek, Christopher S.; Auchettl, Katie; Holoien, Thomas W.-S. (2019), "A Catalog of M-dwarf Flares with ASAS-SN", The Astrophysical Journal, 892 (2): 144, arXiv:1912.05549, doi:10.3847/1538-4357/ab793a, S2CID 209323915
  5. 5.0 5.1 Mermilliod, J.-C. (1986). "Compilation of Eggen's UBV data, transformed to UBV (unpublished)". Catalogue of Eggen's UBV Data. Bibcode: 1986EgUBV........0M. http://cdsads.u-strasbg.fr/cgi-bin/nph-bib_query?1986EgUBV........0M&db_key=AST&nosetcookie=1. 
  6. 6.0 6.1 6.2 Brown, A. G. A. (2021). "Gaia Early Data Release 3: Summary of the contents and survey properties". Astronomy & Astrophysics 649: A1. doi:10.1051/0004-6361/202039657. Bibcode: 2021A&A...649A...1G.  (Erratum: எஆசு:10.1051/0004-6361/202039657e). Gaia EDR3 record for this source at VizieR.
  7. 7.0 7.1 "The One Hundred Nearest Star Systems". 2012. பார்க்கப்பட்ட நாள் 25 December 2016.
  8. 8.0 8.1 Reiners, Ansgar; Basri, Gibor; Browning, Matthew (2009). "Evidence for Magnetic Flux Saturation in Rapidly Rotating M Stars". The Astrophysical Journal 692 (1): 538–545. doi:10.1088/0004-637X/692/1/538. Bibcode: 2009ApJ...692..538R. https://ore.exeter.ac.uk/repository/bitstream/handle/10871/10302/Evidence%20for%20Magnetic%20Flux%20Saturation%20in%20Rapidly%20Rotating%20M%20Stars.pdf. 
  9. 9.0 9.1 Lépine, Sébastien (2013). "A Spectroscopic Catalog of the Brightest (J < 9) M Dwarfs in the Northern Sky". The Astronomical Journal 145 (4): 102. doi:10.1088/0004-6256/145/4/102. Bibcode: 2013AJ....145..102L. 
  10. Stars within 15 light-years of Gliese & Jahreiss 1156 (The Internet Stellar Database)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜிஎல்_கன்னிமீன்&oldid=3834913" இலிருந்து மீள்விக்கப்பட்டது