மாறுபடும் விண்மீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஒரு விண்மீனின் தோற்றப் பருமன் அல்லது தோற்றப் பொலிவு (apparent magnitude) புவியிலிருந்து காணும் போது காலத்திற்கேற்ப மாறுபடுமாயின் அந்த விண்மீனை மாறுபடும் விண்மீன் (Variable star) என்று வகைப்படுத்தலாம். தோற்றப் பொலிவு மாறுபாடு அதன் ஒளிர்வில் ஏற்படும் மாற்றத்தினாலோ அல்லது புவியின் வளிமண்டலத்தினால் ஏற்படும் நிகழ்வாகவோ இருக்கலாம். பெரும்பாலான விண்மீன்களின் பொலிவு மாறுபடக் கூடியதே. உதாரணமாக நாம் பகல்வானில் காணும் மிகப் பொலிவுள்ள விண்மீனான நமது சூரியனின் பொலிவு கூட ஒரு 11 ஆண்டு சூரிய சுழற்சியில் 0.1 விழுக்காடு மாறுபடுகிறது.

2008 கணக்கீடின் படிப் பார்த்தால் நமது பால்வழி மண்டலத்தில் 46,000 மாறுபடும் விண்மீன்கள் உள்ளன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாறுபடும்_விண்மீன்&oldid=1580352" இருந்து மீள்விக்கப்பட்டது