ஜாஸ்மின் சாண்ட்லாஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜாஸ்மின் சாண்ட்லாஸ்
பிறப்புஜாஸ்மின் சாண்ட்லாஸ்
ஜலந்தர், பஞ்சாப், இந்தியா
தேசியம்அமெரிக்கன்
பணி
 • பாடகர்
 • பாடலாசிரியர்
செயற்பாட்டுக்
காலம்
2008 முதல் தற்போது வரை
சொந்த ஊர்ஸ்டாஅக்டன் கலிபோர்னியா, அமெரிக்க ஐக்கிய நாடுகள்
இசை வாழ்க்கை
இசை வடிவங்கள்
இசைக்கருவி(கள்)வாய்ப்பாட்டு
வெளியீட்டு நிறுவனங்கள்பிரெஷ் மீடியா ரெக்கார்ட்ஸ்
சோனி மியூசிக் இந்தியா
டி-சீரிஸ்
யுனிவர்சல் மியூசிக் இந்தியா[1]
இணைந்த செயற்பாடுகள்போமியா
ஜிப்பி கிரேவெல்
காரி சாந்து
யோ யோ ஹனி சிங்
பாதுஷா
அம்ரித் மான்

ஜாஸ்மின் கவுர் சாண்ட்லாஸ் (Jasmine Kaur Sandlas) இவர் ஒரு இந்திய பின்னணி பாடகரும், தொலைக்காட்சி ஆளுமையும், கலைஞரும், பாடலாசிரியரும் ஆவார். இவர் முக்கியமாக பஞ்சாபி பாடல்களைப் பாடுகிறார். [2] [3] [4] இவர் டெட் (மாநாடு), [5] எம்டிவி கோக் அரங்கம் மற்றும் ஸ்போகன் வேர்ட் போன்றத் தளங்களிலும் இடம் பெற்றார். ஜாஸ்மின் சாண்ட்லாஸ் ஒரு சுயாதீனமானக் கலைஞர் ஆவார்.

இந்தியாவின் பஞ்சாபின் ஜலந்தரில் பிறந்து கலிபோர்னியாவின் ஸ்டாக்டனில் வளர்ந்த சாண்ட்லாஸ், எப்போதும் பாடலை ஒரு தொழிலாகத் தொடர விரும்பினார். சாண்ட்லாஸின் "முஸ்கன்" (2008) என்ற முதல் பாடல் வெற்றி பெற்றது. 2014 ஆம் ஆண்டில், கிக் திரைப்படத்திற்காக "யார் நா மிலே" என்ற பாடலுடன் தனது பாலிவுட் பின்னணி பாடலைத் தொடங்கினார். , "யார் நா மிலே" வெளியானதும் வைரலாகி தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்தது. மேலும் சாண்ட்லாஸ் தனது பாடும் பாணிக்கு பரந்த விமர்சனங்களையும் பெற்றார். இதற்காக "2016 ஆம் ஆண்டின் மிகவும் பிரபலமான பாடல் - பிடிசி பஞ்சாபி திரைப்பட விருதுகள் " மற்றும் சிறந்த பெண் பின்னணி திரை விருது உட்பட பல விருதுகளையும் பெற்றார். .

இவருடைய பிற்கால பாடல்கள்; ஒன் நைட் ஸ்டாண்ட், சோராவார் மற்றும் நாம் ஷபானா போன்ற படங்களில் இருந்து இஷ்க் டா சுட்டா, ராத் ஜஷ்ன் டி & பேபி பெஷாராம்போன்ற பாட்ல்கள் பெரிய வெற்றி பெற்றது. [6] [7]

இவரது பாடல்கள் பாம்ப் ஜாட் (2017), சிப் சிப் (2018) & மிதி மிதி (2019) ஆகியவையும் பிரபலமடைந்தன.

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் பின்னணி[தொகு]

ஜாஸ்மின் கவுர் சாண்ட்லாஸ் இந்தியாவின் பஞ்சாபின் ஜலந்தரில் ஒரு லபானா, சீக்கிய குடும்பத்தில் பிறந்தார். [8] ஜலந்தரின் எம்.ஜி.என் பப்ளிக் பள்ளியில் படித்தார். இவரது தாயார், சிறு வயதிலேயே இவரை பாடுவதற்கு மேடையில் அமர்த்தினார். பள்ளி நாட்களில் இவர் பல பாடல் போட்டிகளில் பங்கேற்றார். பின்னர் பல பஞ்சாபி நாட்டுப்புற பாடகர்களால் இவர் செல்வாக்கு பெற்றார். தனது 13 வயதில், இவர் தனது குடும்பத்தினருடன், கலிபோர்னியாவுக்கு குடிபெயர்ந்தார். அங்கே மேற்கு கடற்கரை இசையால் ஈர்க்கப்பட்டார். [9] இவர் சொந்தமாக பாடல்கள் எழுதத் தொடங்கியபோது இவருக்கு 16 வயதுதான் ஆகியிருந்தது. [10]

இசை வாழ்க்கை[தொகு]

லாலி கில் எழுதிய 'தி டயமண்ட்' என்ற இசைத் தொகுப்பில் இடம் பெற்ற இவரது முதல் பாடல் 'முஸ்கன்' [11] உலகளவில் பெரும் வெற்றியைப் பெற்றுத் தந்தது. [12] 2012ஆம் ஆண்டில், ராப்பர் போஹேமியாவுடன் 'குலாபி' என்ற ஒரு தொகுப்பை செய்தார். [13] "குலாபி" அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர், இவர் முக்கிய பஞ்சாபி இசைத் துறையிலிருந்து அங்கீகாரத்தைப் பெறத் தொடங்கினார். 2015ஆம் ஆண்டில், ஜாஸ்மின் சாண்ட்லாஸ் ஒற்றை பஞ்சாப் டி ஜாவாக் உடன் வெளியேறினார் . ஜாஸ்மின் வாழ்க்கை 2008ஆம் ஆண்டில் வெளியான 'தி டயமண்ட்' என்ற இசைத் தொகுப்புடன் இவரது வாழ்க்கை தொடங்கியது. இவரது பாலிவுட் பின்னணி பாடல் வாழ்க்கை கிக் என்றத் திரைப்படத்துடன் தொடங்கியது, இதற்காக இவர் யோ யோ ஹனி சிங்குடன் "டெவில்-யார் நா மைலே" என்ற பாடலை பாடினார். [14]

2012: குலாபி[தொகு]

2012ஆம் ஆண்டில், குலாபி இசைத் தொகுப்பை சோனி மியூசிக் நிறுவனம் அறிமுகப்படுத்தியது.

2014: பாலிவுட்டில் நுழைதல்[தொகு]

2014ஆம் ஆண்டில் இவர் யோ யோ ஹனி சிங்குடன் கிக் திரைப்படத்தில் பின்னணிப் பாடகியாக பாலிவுட்டில் அறிமுகமானார். [15]

2016[தொகு]

ஜாஸ்மின் முறையே ஒன் நைட் ஸ்டாண்ட் மற்றும் சோராவர் போன்றத் திரைப்படங்களுக்கு "இஷ்க் டா சுட்டா" மற்றும் "ராத் ஜஷான் டி" ஆகிய இரண்டு தனிப்பாடல்களை வழங்கியுள்ளார்.

எம்டிவி இந்தியாவின் ஏஞ்சல்ஸ் ஆஃப் ராக், [16] [17] என அழைக்கப்படும் பெண்கள்-அதிகாரம் குறித்த தொலைக்காட்சித் தொடரின் ஒரு பகுதியாக ஜாஸ்மின் இருந்தார். ஜாஸ்மின் , மூன்று கலைஞர்களுடன் மும்பையில் இருந்து வாகா எல்லைக்கு இருசக்கர வாகனத்துடன் பயணம் செய்தார். (குஜராத், ராஜஸ்தான், உத்தரபிரதேசம், பஞ்சாப் வழியாக பயணம் செய்தது) இக்குழு கிராமப்புற மற்றும் நகர்ப்புற இந்தியாவில் உள்ள இடங்களை உள்ளடக்கியது. வழியில், இவர்கள் பல்வேறு துறைகளில் தங்கள் சொந்த வெற்றிக் கதைகளை உருவாக்கிய செய்த சில எழுச்சியூட்டும் பெண்களைச் சந்தித்தனர். மேலும் அவசரமாக கவனம் தேவைப்படும் சிக்கல்களைப் பேசவும் விவாதிக்கவும் தங்கள் குரலைப் பயன்படுத்தினார்கள். ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு சிறப்பு பாடலுடன் முடிவடைந்தது. முதல் பருவத்தின் முதல் அத்தியாயம், 2016 சூலை 31 அன்று ஒளிபரப்பப்பட்டது.

குறிப்புகள்[தொகு]

 1. "Jasmine Sandlas released Tere Vangu". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 4 December 2015. பார்க்கப்பட்ட நாள் 25 May 2016.
 2. Singh, Deepali (16 April 2016). "Jasmine Sandlas: Meet Honey Singh's favourite 'phone' recording artist!". DNA India. பார்க்கப்பட்ட நாள் 25 May 2016.
 3. "VOICES TO RECKON WITH: 8) Jasmine Sandlas, 28, California". ஹிந்துஸ்தான் டைம்ஸ். 26 December 2013. பார்க்கப்பட்ட நாள் 25 May 2016.
 4. Venkat, Vaivasvat (29 December 2012). "Ludhiana goes international to ring in New Year...would invite rapper Bohemia, Jasmine Sandlas and DJ Hitesh". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. பார்க்கப்பட்ட நாள் 25 May 2016.
 5. "Jasmine Sandlas Speaks at TEDxSIULavale".
 6. "One Night Stand song Ishq Da Sutta: Sunny Leone delivers yet another foot tapping number!". 17 April 2016.
 7. "Watch: Honey Singh, Jasmine's intoxicating song 'Raat jashan di' from 'Zorawar'". 28 March 2016.
 8. "Jasmine Sandlas". Desi Hip Hop. 15 October 2011. Archived from the original on 23 September 2015. பார்க்கப்பட்ட நாள் 25 May 2016.
 9. Fernandes, Kasmin (18 July 2014). "Jasmine Sandlas: I was a little girl from Punjab with dreams larger than life". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 25 May 2016.
 10. Sen, Debarati S (6 May 2016). "Jasmine Sandlas: Good music comes from great energy". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 25 May 2016.
 11. Rashid, Zaynah. "Jasmine Sandlas Sings Mombatti – Punjab2000.com". Punjab2000.com. பார்க்கப்பட்ட நாள் 25 May 2016.
 12. "Bohemia live-in concert with Jasmine Sandlas". Gulf Digital News – Bahrain, Saudi Arabia, United Arab Emirates, Kuwait, Qatar, Oman. பார்க்கப்பட்ட நாள் 25 May 2016.
 13. Fernandesi, Kasmin S (18 July 2014). "Jasmine Sandlas: I was a little girl from Punjab with dreams larger than life". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 16 May 2017.
 14. N, TN (14 July 2014). "'Devil' song from 'Kick': Nargis Fakhri's hot item number". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 25 May 2016.
 15. "Kick 'Yaar Na Miley' song review: Salman-Nargis dance on Honey Singh's tunes (watch video)". Indiatvnews. 13 July 2014. பார்க்கப்பட்ட நாள் 25 May 2016.
 16. "Angels of Rock". MTV India. Archived from the original on 2016-08-28.
 17. "Singers Jasmine, Shalmali, Akasa, Anusha are MTV India's 'Angels of Rock'". Radioandmusic.com. 25 May 2016. பார்க்கப்பட்ட நாள் 25 May 2016.

வெளி இணைப்புகள்[தொகு]

முகநூலில் ஜாஸ்மின் சாண்ட்லாஸ்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜாஸ்மின்_சாண்ட்லாஸ்&oldid=3848044" இலிருந்து மீள்விக்கப்பட்டது