ஜான் கெர்ரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜான் கெர்ரி
John F. Kerry.jpg
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் (அறிவிப்பு)
பதவியேற்பு
குடியரசுத் தலைவர் பராக் ஒபாமா
முன்னவர் இலரி கிளின்டன்
United States Senator
from மாசச்சூசெட்ஸ்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
சனவரி 2, 1985
Serving with இசுகாட் பிரவுன்
முன்னவர் பவுல் சோங்காசு
பின்வந்தவர் TBD
அமெரிக்க வெளியுறவுத் துறைக்கான செனட் குழுவின் தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
சனவரி 3, 2009
முன்னவர் ஜோ பிடென்
சிறுவணிகம் மற்றும் முனைவு செனட் குழுவின் தலைவர்
பதவியில்
சனவரி 3, 2007 – சனவரி 3, 2009
முன்னவர் ஒலிம்பியா இசுனோ
பின்வந்தவர் மேரி லாந்திரூ
பதவியில்
சூன் 6, 2001 – சனவரி 3, 2003
முன்னவர் கிட் பாண்ட்
பின்வந்தவர் ஒலிம்பியா இசுனோ
பதவியில்
சனவரி 3, 2001 – சனவரி 20, 2001
முன்னவர் கிட் பாண்ட்
பின்வந்தவர் கிட் பாண்ட்
மாசச்சூசெட்சின் துணைநிலை ஆளுநர்
பதவியில்
மார்ச்சு 6, 1983 – சனவரி 2, 1985
ஆளுநர் மைக்கேல் துகாகிசு
முன்னவர் தாமசு பி. ஓநீல் III
பின்வந்தவர் ஈவ்லின் மர்பி (1987)
தனிநபர் தகவல்
பிறப்பு ஜான் போர்பசு கெர்ரி
திசம்பர் 11, 1943 (1943-12-11) (அகவை 79)
அவுரோரா, கொலராடோ
தேசியம் அமெரிக்கர்
அரசியல் கட்சி மக்களாட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) ஜூலியா தோம் (1970–88, மணமுறிவு)
தெரெசா ஹெயின்சு (1995–நடப்பு)
பிள்ளைகள் அலெக்சாண்டர் கெர்ரி
வனெசா கெர்ரி
எச். ஜான் ஹெயின்சு IV (மாற்றுமகன்)
ஆந்த்ரே ஹெயின்சு (மாற்றுமகன்)
கிறிஸ்டபர் ஹெயின்சு (மாற்றுமகன்)
இருப்பிடம் பாஸ்டன், மாசச்சூசெட்ஸ்
படித்த கல்வி நிறுவனங்கள் யேல் பல்கலைக்கழகம் (இளங்கலை)
பாசுட்டன் சட்டக் கல்லூரி (ஜெ.டி)
பணி வழக்கறிஞர்
சமயம் ரோமன் கத்தோலிக்கம்
விருதுகள் Silver Star Medal ribbon.svg Silver Star
Bronze Star Medal ribbon.svg Bronze Star
Purple Heart ribbon.svg Purple Heart (3)
கையொப்பம்
இணையம் kerry.senate.gov
படைத்துறைப் பணி
பற்றிணைவு ஐக்கிய அமெரிக்க நாடு
கிளை United States Navy seal United States Navy
பணி ஆண்டுகள் 1966–1978
தர வரிசை US-O3 insignia.svg Lieutenant
படையணி USS Gridley
Coastal Squadron 1
படைத்துறைப் பணி PCF-44, PCF-94
சமர்கள்/போர்கள் Vietnam War

ஜான் போர்பசு கெர்ரி (John Forbes Kerry, பிறப்பு: திசம்பர் 11, 1943[1]) அமெரிக்க மேலவை (செனட்)டில் மாசச்சூசெட்சிற்சிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். 2004ஆம் ஆண்டிற்கான குடியரசுத் தலைவர் தேர்தலில் அமெரிக்க மக்களாட்சிக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு ஜார்ஜ் வாக்கர் புஷ்ஷிடம் தோற்றவர். அமெரிக்க செனட்டவையில் 23 ஆண்டுகள் அங்கம் வகித்துள்ளார். மேலும் மாசச்சூசெட்சின் துணைநிலை ஆளுநராக மைக்கேல் துகாகிசின் கீழ் பொறுப்பாற்றி உள்ளார். திசம்பர் 21, 2012 அன்று அதிபர் பராக் ஒபாமா கெர்ரியை இலரி கிளின்டனுக்கு அடுத்து வெளியுறவுத் துறை அமைச்சராக அறிவித்துள்ளார்.[2][3][4]

கெர்ரி கொலராடோவிலுள்ள அவுரோராவில் திசம்பர் 11, 1943 அன்று பிறந்தார். யேல் பல்கலைக்கழகத்திலும் பாசுட்டன் சட்டக் கல்லூரியிலும் பட்டப் படிப்பையும் சட்டக் கல்வியையும் முடித்தார். 1970இல் ஜூலியா தோம் என்பவரை மணந்து 1988இல் பிரிந்தார். 1995 முதல் தெரெசா எயின்சு என்பவருடன் இல்லறம் நடத்தி வருகிறார். இவருக்கு இரு மக்களும் இரண்டாம் மனைவியின் மூன்று மக்களும் உள்ளனர். தற்போது பாசுட்டனில் வாழ்ந்து வருகிறார்.

2003ஆம் ஆண்டில் இவருக்கு முன்னிற்கும் சுரப்பியில் புற்றுநோய் இருப்பதாகக் கண்டறியப்பட்டு முற்றிலும் குணமாக்கப்பட்டது.[5]

சான்றுகோள்கள்[தொகு]

  1. "johnkerry.com". 2012-01-27 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2012-12-23 அன்று பார்க்கப்பட்டது.
  2. Mark Landler (December 21, 2012). "Kerry Is Pick for Secretary of State, Official Says". த நியூயார்க் டைம்ஸ். http://www.nytimes.com/2012/12/22/us/politics/kerry-is-pick-for-secretary-of-state-official-says.html. பார்த்த நாள்: December 21, 2012. 
  3. http://abcnews.go.com/blogs/politics/2012/12/john-kerry-to-be-nominated-to-be-secretary-of-state-sources-say/
  4. "John Kerry To Get Secretary Of State Nomination, Reports ABC". Huffington Post. December 15, 2012. December 15, 2012 அன்று பார்க்கப்பட்டது.
  5. "Sen. Kerry 's Surgery A Success". சிபிஎஸ். February 11, 2003. http://www.cbsnews.com/stories/2003/02/11/politics/main540196.shtml. 

வெளி இணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
ஜான் கெர்ரி
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜான்_கெர்ரி&oldid=3573055" இருந்து மீள்விக்கப்பட்டது