சௌரசேனிப் பிராகிருதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சௌரசேனிப் பிராகிருதம்
சௌரசேனி
பிராமி: 𑀰𑁅𑀭𑀲𑁂𑀦𑀻
பிராந்தியம்இந்தியா
ஊழிஅண். பொ.ஊ.மு. 2ம் நூற்றாண்டு
மொழிக் குறியீடுகள்
ISO 639-3psu
மொழிக் குறிப்புsaur1252[1]

சௌரசேனிப் பிராகிருதம் (சமக்கிருதம்: शौरसेनी प्राकृत, Śaurasenī Prākṛta) என்பது ஒரு நடு இந்தோ-ஆரிய மொழியும், நாடகப் பிராகிருத மொழியுமாகும். நடுக்கால இந்தியாவின் வடபகுதியில் நாடகங்களில் சௌரசேனி மொழி முதன்மை மொழியாகப் பயன்படுத்தப்பட்டது. பண்டைய நாடாகிய சூரசேனத்தில் பொ.ஊ.மு. 2ம் நூற்றாண்டிலிருந்து வாய்மொழி வாயிலாகப் பேசப்பட்டு வந்திருக்கக்கூடும் என்றபோதிலும், இம்மொழியிலுள்ள படைப்புகளில் பெரும்பாலானவை 3ம் நூற்றாண்டுக்கும் 10ம் நூற்றாண்டுக்குமிடையில் தோன்றியுள்ளது. பிராகிருத மொழிகளிடையே, செஞ் சமசுகிருதத்துக்கு மிகவும் நெருங்கிய தொடர்புடையது சௌரசேனியாகும். இதன்படி, "செஞ் சமசுகிருதத்துக்கு முதன்மை அடிப்படையாக அமைந்துள்ள, மத்தியதேசத்தின் பண்டை இந்திய [=இந்தோ-ஆரிய] வட்டார வழக்கிலிருந்து இது தோன்றியுள்ளது".[2]:3-4 இம்மொழியின் வழி மொழிகளுள் இந்தி மண்டல மொழிகளும் உள்ளடங்குகின்றன.[3]

மேலும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Nordhoff, Sebastian; Hammarström, Harald; Forkel, Robert ஏனையோர்., தொகுப்பாசிரியர்கள் (2013). "Sauraseni Prakrit". Glottolog 2.2. Leipzig: Max Planck Institute for Evolutionary Anthropology. http://glottolog.org/resource/languoid/id/saur1252. 
  2. Woolner, Alfred C. "Introduction to Prakrit". Calcutta: University of the Punjab. 2 March 2016 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Sauraseni Prakrit - MultiTree". 2008-09-23 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2021-10-19 அன்று பார்க்கப்பட்டது.