அர்த்தமாகதிப் பிராகிருதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அர்த்தமாகதிப் பிராகிருதம்
அர்த்தமாகதி
பிராமி: 𑀅𑀭𑁆𑀥𑀫𑀸𑀕𑀥𑀻
பிராந்தியம்இந்தியா
Extinctகீழை இந்தி மொழிகளாக உருவெடுத்தது. [1][2]
மொழிக் குறியீடுகள்
ISO 639-3pka
மொழிக் குறிப்புNone

அர்த்தமாகதிப் பிராகிருதம் என்பது, தற்கால பிகார்[3] மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய பகுதிகளில் பேசப்பட்டு வந்ததாகக் கருதப்படும் ஒரு நடு இந்தோ-ஆரிய மொழியும், நாடகப் பிராகிருத மொழியுமாகும். மேலும், இம்மொழி சில முற்காலச் சமண மற்றும் பௌத்த நாடகங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது பெரும்பாலும் ஒரு மைய இந்தோ-ஆரிய மொழியாயிருக்கக்கூடும். மேலும், இது பாலி மற்றும் பிற்கால சௌரசேனிப் பிராகிருதம் ஆகியவற்றோடு தொடர்புடையதாயுமிருக்கலாம்.[4]

இது வட்டார மாகதிப் பிராகிருதத்தின் முன்னோடி மொழியாகக் கருதப்பட்டதால் இப்பெயரைப் பெற்றது (பொருள்: அரை-மாகதி).

பாலியுடனான தொடர்பு[தொகு]

தேரவாத பௌத்த மரபு, நீண்டகாலமாக பாலியும் மாகதி மொழியும் ஒத்தவை எனக் கருதி வந்ததோடு, இதற்கும் அர்த்தமாகதி மொழிக்கும் பல ஒப்புமைகள் இருந்துள்ளன. அர்த்தமாகதி மொழி சமண அறிஞர்களால் பெருமளவில் பயன்படுத்தப்பட்டதோடு,[5]சமண ஆகமங்களில் இடம்பெற்றுள்ளது. கௌதம புத்தரும், தீர்த்தங்கரர் மகாவீரரும் மகதத்தில் அறவுரையாற்றியுள்ளனர்.

அர்த்தமாகதிக்கும், பிற்கால மாகதிப் பிராகிருதத்துக்குமிடையில் வேற்றுமைகள் உள்ளதோடு, இவ்வேற்றுமைகள் பாலிமொழியுடனான வேற்றுமைகளுடன் ஒத்துள்ளது. எடுத்துக்காட்டாக, அர்த்தமாகதியில் வரலாற்று ரீதியான, [ல்] ஓசை காணப்படும் அதேவேளை, பிற்கால மாகதியில் [ல்] ஓசை [ர்] ஓசையாக மாற்றம் பெற்றுள்ளது. மேலும், பெயர்ச்சொல் வடிவ மாற்றத்தில், அர்த்தமாகதியில் சொற்கள் [-ஓ] முடிவைப் பெறும் அதேவேளை, மாகதிப் பிராகிருதத்தில் [-ஏ] முடிவு பல இடங்களில் வருகிறது.

பாலி: தம்மபதம் 103:

யோ சகசுசம் சகசுசேன, சங்காமே மானுசே சினே;

ஏகாஞ்ச செய்யமட்டானம் ச வே சங்காமசுத்தமோ.

போரில் ஆயிரமாயிரம் பேரை வெல்லும் மனிதனை விட,
ஒருவன்-அதாவது தன்னை- வெற்றி கொள்பவனே பெரியவன்.

அர்த்தமாகதி: சமன் சூத்தம் 125:

சோ சகசுசம் சகசுசானம், சங்கமே துச்சே சினே.

ஏகம் சினேச்ச அப்பனாம், ஏச சே பரமோ சாவோ.

வெல்லப்படமுடியாத ஒரு போரில், ஒருவன் ஆயிரமாயிரம் எதிரிகளை வெல்லக்கூடும்;
எனினும், மேலான வெற்றி என்பது தன்னை வெல்வதிலே உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Saksena, Baburam (1971). Evolution of Awadhi (a Branch of Hindi). 9788120808553: Motilal Banarsidass Publishers. பக். 7. 
  2. Harrison, Selig S. (2015). India: The Most Dangerous Decades. Princeton University Press. பக். 26. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781400877805. 
  3. "Prakrit".
  4. Cardona, George; Jain, Dhanesh, eds. (2003), "The historical context and development of Indo-Aryan", The Indo-Aryan Languages, Routledge language family series, London: Routledge, pp. 46–66, ISBN 0-7007-1130-9
  5. Constance Jones; James D. Ryan (2006). Encyclopedia of Hinduism. Infobase Publishing. பக். 42. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8160-7564-5. https://books.google.com/books?id=OgMmceadQ3gC&pg=PA42. 

வெளியிணைப்புக்கள்[தொகு]