உள்ளடக்கத்துக்குச் செல்

அசோகர் பிராகிருதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அசோகர் பிராகிருதம்
பிராந்தியம்தெற்காசியா
ஊழிகிமு 268 – 232
ஆரம்ப வடிவம்
ஆதி இந்தோ-ஐரோப்பியம்
  • ஆதி இந்தோ-ஈரானியம்
    • ஆதி இந்தோ-ஆரியம்
      • அசோகர் பிராகிருதம்
பிராமி, கரோஷ்டி
மொழிக் குறியீடுகள்
ISO 639-3

அசோகன் பிராகிருதம் (Ashokan Prakrit or Aśokan Prākṛta) மத்தியகால இந்திய-ஆரிய மொழியின் வட்டார வழக்காகும். கிமு 268 முதல் கிமு 232 வரையிலான அசோகர் கல்வெட்டுக்களில் பிராமி எழுத்தில், பொதுமக்கள் மொழியான பிராகிருத மொழியில் கல்வெட்டுகள் நிறுவப்பட்டது.[1] கௌதம புத்தர் அருளிய அறநெறிகள், பௌத்த தத்துவங்கள், குறிப்பாக தர்மம் மற்றும் அகிம்சை நெறிகள், தெற்காசியா முழுவதிலும் உள்ள பௌத்த நினைவுச் சின்ன தூபிகள் மற்றும் பாறைகளில் உள்ள கல்வெட்டுகளில் பிராகிருத மொழியில் செதுக்கப்பட்டுள்ளது.

அசோகர் காலத்து பிராகிருத மொழியின் பேச்சுவழக்குகள் ஆரம்பகால மத்திய-இந்தோ-ஆரிய மொழியின் உள்ளூர் வடிவங்களை பிரதிபலித்தன.[2]:50[1]

அசோகன் பிரகிருதம், பழைய இந்தோ-ஆரிய மொழிக்கு மிகவும் பழமையான ஆதி இந்தோ-ஆரியன் மொழிக்கு மிகவும் வேறுபட்ட வேத காலத்து சமஸ்கிருத மொழியுடன் நெருங்கிய தொடர்புடையது.

பரத கண்டத்தின் வடமேற்குப் பகுதியில் அசோகர் கல்வெட்டுகளில், அசோகன் பிராகிருதம் மொழியில், பிராமி எழுத்துமுறை மற்றும் கரோஷ்டி எழுத்துமுறை கல்வெட்டுகள் சான்றாக உள்ளது.

வகைப்பாடு

[தொகு]

மாசிகா எனும் மொழியியல் அறிஞர், அசோகன் பிராகிருதத்தை ஆரம்பகால மத்திய-இந்தோ-ஆரிய மொழியாக வகைப்படுத்தியுள்ளார். இது இந்தோ-ஆரிய மொழியின் வரலாற்று வளர்ச்சியில் பழைய இந்தோ-ஆரிய மொழிக்குப் பிறகு ஆரம்ப கட்டத்தைக் குறிக்கிறது. பாளி மற்றும் ஆரம்பகால சமணர்களின் அர்த்தமகாதி மொழி இந்த கட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன.[2]:52

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Thomas Oberlies. "Aśokan Prakrit and Pali". In George Cardona; Dhanesh Jain (eds.). The Indo-Aryan Languages. pp. 179–224.
  2. 2.0 2.1 Masica, Colin (1993). The Indo-Aryan Languages. Cambridge University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-29944-2.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அசோகர்_பிராகிருதம்&oldid=3300347" இலிருந்து மீள்விக்கப்பட்டது