இந்தி மண்டலம்
Appearance
இந்தி மண்டலம் (Hindi Belt அல்லது Hindi Heartland) என்பது கூடுதலானோர் முதல் மொழியாகவோ இரண்டாம் மொழியாகவோ இந்தி மொழியைப் பேசும் நடுவார்ந்த மற்றும் வடக்கு இந்தியப் பகுதிகளாகும். [1] [2][3] எனவே, இந்தி மண்டலம் என்பது இந்தி அலுவல் மொழியாக உள்ள இந்திய இம்மாநிலங்கள் என்றும் கூறலாம்.
உள்ளடங்கியப் பகுதிகள்
[தொகு]இந்தி மண்டலம் கீழ்கண்ட மாநிலங்களைக் கொண்டுள்ளது.[4],[5],[6]:
- பீகார்
- உத்தரப் பிரதேசம்
- மத்தியப் பிரதேசம்
- அரியானா
- இராச்சசுத்தான்
- இமாசலப் பிரதேசம்
- உத்தராகண்டம்
- சத்தீசுகர்
- சார்க்கண்ட்
மாநிலம் | பேசப்படும் மொழி |
---|---|
பீகார் | இந்தி, அங்கிகா, வஜ்ஜிகா, போச்புரி, மகஹி மற்றும் மைதிலி மொழி. |
உத்தரப் பிரதேசம் | இந்தி, (அவதி மொழி, பாகேலி மொழி, புந்தேலி மொழி, போச்புரி, பிராஜ் பாஷா, கனாவுஜி மொழி, கரிபோலி) |
அரியானா | இந்தி, அரியான்வி, பஞ்சாபி மொழி மற்றும் சிலப்பகுதிகளில் இராச்சசுத்தானி |
இராச்சசுத்தான் | இராச்சசுத்தானி |
இமாசலப் பிரதேசம் | பஹாரி |
உத்தராகண்டம் | குமாஊனீ, கட்வளி, இந்தி |
சத்தீசுகர் | சத்திசுகரி மொழி, இந்தி |
சார்க்கண்ட் | சந்தாளி மொழி, இந்தி |
ஒன்றியப் பகுதிகளான சண்டிகர், தில்லி ஆகியவையும் இந்தி மண்டலத்தைச் சேர்ந்தவையாகும்.
இந்திய-ஆரிய மொழிகள் கொண்ட மாநிலங்களான பஞ்சாப் (இந்தியா), குசராத், மகாராட்டிரம், ஒடிசா, மேற்கு வங்காளம், சம்மு காசுமீர் போன்றவைகளில் இந்தி பரவலாகப் பேசப்பட்டாலும் அவற்றின் அலுவல் மொழியாக இந்தி இல்லை.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ B.L. Sukhwal (1985), Modern Political Geography of India, Stosius Inc/Advent Books Division,
... In the Hindi heartland ...
- ↑ Stuart Allan, Barbie Zelizer (2004), Reporting war: journalism in wartime, Routledge, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0415339987,
... located in what is called the "Hindi heartland" or the "Hindi belt" of north and central India ...
- ↑ B.S. Kesavan (1997), Origins of printing and publishing in the Hindi heartland (Volume 3 of History of printing and publishing in India : a story of cultural re-awakening), National Book Trust, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 812372120X
- ↑ 0286-2806514 ITM "BJP sweeps out Congress in Hindi heartland". PTI - The Press Trust of India Ltd. December 4, 2003. http://www.accessmylibrary.com/coms2/summary 0286-2806514 ITM.
- ↑ http://www.indianexpress.com/oldstory.php?storyid=78641
- ↑ http://www.123exp-geography.com/t/18624429910/