மாகதிப் பிராகிருதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வார்ப்புரு:EngvarB

மாகதிப் பிராகிருதம்
மாகதி
பிராமி: 𑀫𑀸𑀕𑀥𑀻
பிராந்தியம்இந்தியா
Extinctகீழை இந்தோ-ஆரிய மொழிகளாக உருவெடுத்தது.[1]
மொழிக் குறியீடுகள்
ISO 639-3
மொழிக் குறிப்புஇல்லை[2]

மாகதிப் பிராகிருதம் (மாகதி) என்பது பாலி மற்றும் சமசுகிருதத்தின் வீழ்ச்சிக்குப்பின் பண்டைய இந்தியாவில் வழங்கி வந்த எழுத்து மொழிகளான மூன்று நாடகப் பிராகிருத மொழிகளில் ஒன்றாகும். இது முற்கால வேதச் சமக்கிருத மொழியைப் பிரதியீடு செய்த வட்டார நடு இந்தோ-ஆரிய மொழிகளுள் ஒன்றாகும்.[3] இன்றைய கிழக்கு இந்தியா, வங்காளத்தேசம் மற்றும் நேபாளம் ஆகியவற்றை உள்ளடக்கிய கிழக்கு இந்தியத் துணைக்கண்டப்பகுதிகளில் மாகதிப் பிராகிருதம் பேசப்பட்டு வந்தது. இது தற்கால வங்காளம், பிகார், கிழக்கு உத்தரப்பிரதேசம் ஆகிய பகுதிகளில் பேசப்பட்டு வந்ததுடன், சில நாடகங்களில் பேச்சு வழக்கு உரையாடல்களில் பயன்படுத்தப்பட்டது. இம்மொழி, முக்கிய சமயத் தலைவர்களாகிய கௌதம புத்தர் மற்றும் மகாவீரர் ஆகியோரால் பேசப்பட்ட மொழியாக நம்பப்படுவதோடு[4] மகத மகாசனபதம் மற்றும் மௌரியப் பேரரசின் அரசவை மொழியாகவும் பயன்படுத்தப்பட்டது. சில அசோகர் கல்வெட்டுக்கள் இம்மொழியில் எழுதப்பட்டுள்ளன.[5]

மாகதிப் பிராகிருதம் பிற்காலத்தில் கிழக்கு இந்தோ-ஆரிய மொழிகளாக உருவெடுத்தது, அவையாவன:[1][6]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 South Asian folklore: an encyclopedia : Afghanistan, Bangladesh, India, By Peter J. Claus, Sarah Diamond, Margaret Ann Mills, Routledge, 2003, p. 203
  2. Nordhoff, Sebastian; Hammarström, Harald; Forkel, Robert ஏனையோர்., தொகுப்பாசிரியர்கள் (2013). "மாகதிப் பிராகிருதம்". Glottolog 2.2. Leipzig: Max Planck Institute for Evolutionary Anthropology. http://glottolog.org/resource/languoid/id/இல்லை. 
  3. Cardona, George; Jain, Dhanesh, eds. (2003), "The historical context and development of Indo-Aryan", The Indo-Aryan Languages, Routledge language family series, London: Routledge, pp. 46–66, ISBN 0-7007-1130-9
  4. Beames, John (2012). Comparative Grammar of the Modern Aryan Languages of India: To Wit, Hindi, Panjabi, Sindhi, Gujarati, Marathi, Oriya, and Bangali. Cambridge: Cambridge University Press. doi:10.1017/cbo9781139208871.003. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-139-20887-1. http://ebooks.cambridge.org/ref/id/CBO9781139208871. [தொடர்பிழந்த இணைப்பு]
  5. Bashan A.L., The Wonder that was India, Picador, 2004, pp.394
  6. Ray, Tapas S. (2007). "Chapter Eleven: "Oriya". In Jain, Danesh; Cardona, George. The Indo-Aryan Languages. Routledge. p. 445. ISBN 978-1-135-79711-9.

வெளியிணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாகதிப்_பிராகிருதம்&oldid=3590936" இலிருந்து மீள்விக்கப்பட்டது