சோர்கன் சீரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சோர்கன் சீரா
தரம்மங்கோலியப் பேரரசின் தளபதி
பிள்ளைகள்சிலவுன்

சோர்கன் சீரா (மொங்கோலியம்: Сорхон Шира) என்பவர் செங்கிஸ் கானின் ஒன்பது மந்திரிகளில் ஒருவர் ஆவார். அசர்பைஜானை ஆண்ட சோபனிடுகள் இவரின் வழித்தோன்றல்கள் தான். இவர் தாய்சியுடு பழங்குடி இனத்தின் சுல்டுசு பிரிவைச் சேர்ந்தவர் ஆவார். தாய்சியுடுகளின் தலைவர் டோடோயேன்-கிர்டேவின் கீழ் இவர் ஒரு விவசாயக் கூலியாக இருந்தார்.

சுயசரிதை[தொகு]

மங்கோலியர்களின் இரகசிய வரலாற்றில், 1177 ஆம் ஆண்டு தாய்சியுடுகளின் பிடியிலிருந்து தெமுசின் தப்பிக்கும் போது சோர்கன் சீரா முதன்முதலில் தோன்றுகிறார். ஆழமற்ற ஆற்றுநீரில் ஒரு சிறுவன் ஒளிந்திருப்பதை அவ்வழியே செல்லும் சோர்கன் சீரா காண்கிறார். ஆனால் அவனைக் காட்டிக்கொடுக்க மாட்டேன் என்று உறுதி அளிக்கிறார். அச்சிறுவனைத் தேடியவர்களை, பலமுறை வேறு இடங்களுக்குச் சென்று தேடுமாறு சோர்கன் சீரா கூறுகிறார். தேடியவர்கள் திரும்பிச் சென்றவுடனேயே, தனக்கு மேலும் ஏதாவது உதவி கிடைக்கும் என்ற ஆவலில் தன்னைக் காப்பாற்றிய அந்த நபரின் கூடாரத்திற்குத் தெமுசின் விரைகிறான். தனக்கு ஏதும் ஆபத்து நேருமோ என்று பயந்து சோர்கன் சீரா தெமுசினுக்கு உதவாமல் இருக்கலாம் என நினைக்கிறார். ஆனால் அவரது மகன்கள் சிலவுன் மற்றும் சிம்பய் இளம் தெமுசினுக்காக நின்றனர்.[1] பின் தெமுசினின் கழுத்தில் மாட்டப்பட்டிருந்த தண்டனைப் பலகையை நீக்கி அதனை அவர்கள் எரித்தனர். சோர்கன் சீரா செம்மறியாட்டுக் கம்பளிக் குவியலில் தெமுசினை மறைத்து வைக்கிறார். தனது மகள் கதானிடம் தெமுசினைப் பார்த்துக் கொள்ளுமாறு கூறுகிறார்.[2]

செங்கிஸ் கான் மீண்டும் 1201 ஆம் ஆண்டு தாய்சியுடுகளுக்கு எதிரான யுத்தத்திற்குப் பிறகு சோர்கன் சீராவைக் கண்டுபிடிக்கிறார். சோர்கன் சீராவும் அவரது மகன்களும் செங்கிஸ் கானின் தளபதிகளாயினர். சோர்கன் சீராவின் மகன் சிலவுன் தாய்சியுடுகளின் தலைவன் தர்குதை-கிரில்துக்கைக் கொன்றார். 1206 ஆம் ஆண்டு செங்கிஸ் கானின் முடிசூட்டு விழாவின்போது மிங்கன் பட்டம் வழங்கப்பட்ட 95 தளபதிகளில் இவரும் ஒருவராவார்.[3]

உசாத்துணை[தொகு]

  1. Grousset, René (1970) (in en). The Empire of the Steppes: A History of Central Asia. Rutgers University Press. பக். 200. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8135-1304-1. https://archive.org/details/empireofsteppes00grou. 
  2. Sneath, David; Kaplonski, Christopher (2010-05-01) (in en). The History of Mongolia (3 Vols.). Global Oriental. பக். 131. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-90-04-21635-8. https://books.google.com/books?id=v_V5DwAAQBAJ. 
  3. Oskenbay, Moldir & Omarbekov, T. & Habizhanova, G. & Galiya, I.. (2016). Turkic genealogical traditions: New insights on the origins of chinggis-qan. 96. 3179-3199.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோர்கன்_சீரா&oldid=2971388" இருந்து மீள்விக்கப்பட்டது