உள்ளடக்கத்துக்குச் செல்

சோம்னியோசிடே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சோம்னியோசிடே (தூங்கும் சுறா)
சோமனியோசசு மைக்ரோசெப்பாலசு
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
காண்ட்ரிக்தியீசு
வரிசை:
இசுகோலிபார்மிசு
குடும்பம்:
சோம்னியோசிடே
உயிரியற் பல்வகைமை
6 பேரினம், 20 சிற்றினம்; உரையினைப் பார்க்கவும்

சோம்னியோசிடே (Somniosidae) என்பது இசுகுலிபார்மிசு வரிசையினைச் சார்ந்த சுறாக்களின் குடும்பமாகும். இது பொதுவாகத் தூங்கும் சுறாக்கள் என்று அழைக்கப்படுகின்றன. "தூங்கும் சுறா" என்ற பொதுவான பெயர் இவற்றின் மெதுவான நீச்சல், குறைந்த செயல்பாட்டு நிலை மற்றும் ஆக்குரோசமில்லா குண இயல்பு ஆகியவற்றின் காரணமாக இடப்பட்டது.[1][2]

பரவலும் வாழ்விடமும்

[தொகு]

சோம்னியோசிடே வரிசைச் சுறாக்கள் கீழ்கண்ட பகுதிகளில் காணப்படுகின்றன.

  • ஆர்க்டிக் முதல் அண்டார்டிக்கா துணைப்பகுதி
  • குளிர்ந்த நீரோட்டப் பகுதிகள்
  • கரையை அடுத்த கடற்பகுதி மற்றும் சரிவுகள்
  • மித மற்றும் வெப்பமண்டல நீர்ப் பகுதி[3]

உணவு

[தொகு]

தூங்கும் சுறாக்களின் வயிற்றிலிருந்து மீட்கப்பட்ட அலகுகளிலிருந்து, இவை மாபெருங்கணவாயினை உணவாக உட்கொள்கின்றன என அறியப்படுகிறது.

பேரினமும் சிற்றினங்களும்

[தொகு]
  • சென்ட்ரோசிம்னசு பார்போசா டு பொக்கேஜ் & பிரிட்டோ கேபெல்லோ, 1864
    • சென்ட்ரோசிம்னசு கோலோலெபிசு பார்போசா டு பொக்கேஜ் & பிரிட்டோ கேபெல்லோ, 1864 (போர்த்துகீசிய நாய் மீன்)
    • சென்ட்ரோசிம்னசு ஓசுடோனி கார்மன், 1906 (ரஃப்ஸ்கின் நாய்மீன்)
  • சென்ட்ரோசெலக்கசு கார்மன், 1913
    • சென்ட்ரோசெலக்கசு கிரெபிடேட்டர் பார்போசா டு பொக்கேஜ் & பிரிட்டோ கேபெல்லோ, 1864 (நீளமூக்கு கம்பளி நாய்மீன்)
  • சிம்னோடலாடியாசு கேரிக், 1956
    • அல்பிகாடா சைமோனோடால்டியாசு டானியுச்சி & கேரிக்கு, 1986 (வெள்ளைவால் நாய்மீன்)
    • சிம்னோடலாடியாசு கரிக்கி குக்குயேவ் & கோனோவலென்கோ, 1988 (அசோர்சு நாய்மீன்)
    • சிம்னோடலாடியாசு ஒலிகோடான் குகுவேவ் & கோனோவலென்கோ, 1988 (இசுபார்செடூத் நாய்மீன்)
    • சிம்னோடலாடியாசு ஷெர்வுடி ஆர்க்கி, 1921 (ஷெர்வுட் நாய்மீன்)
  • சிம்னோடான் பார்போசா டு பொக்கேஜ் & பிரிட்டோ கேபெல்லோ, 1864
    • சிம்னோடான் இச்சிஹரை யானோ & எஸ். தனகா (II), 1984 (ஜப்பானிய வெல்வெட் டாக்ஃபிஷ்)
    • சிம்னோடான் மேக்ராகாந்தசு ரீகன், 1906 (லார்ஜஸ்பைன் வெல்வெட் டாக்ஃபிஷ்)
    • சிம்னோடான் பிளங்கெட்டி வெயிட், 1910 (பிளங்கெட் சுறா)
    • சிம்னோடான் ரிங்கன்சு பார்போசா டு பொக்கேஜ் & பிரிட்டோ கேபெல்லோ, 1864 (நிஃபுடூத் டாக்ஃபிஷ்)
  • சோம்னியோசசு லெசூர், 1818
    • சோம்னியோசசு அண்டார்டிகசு விட்லி, 1939 (தெற்கு ஸ்லீப்பர் சுறா)
    • சோம்னியோசசு லாங்கசு தனகா, 1912 (தவளை சுறா)
    • சோம்னியோசசு மைக்ரோசெபாலசு ப்ளோச் & ஜேஜி ஷ்னைடர், 1801 (கிரீன்லாந்துச் சுறா)
    • சோம்னியோசசு பசிபிகசு பிகிலோ & ஷ்ரோடர், 1944 (பசிபிக் தூங்கும் சுறா)
    • சோம்னியோசசு உரோசுடிராடசு உரைசோ, 1827 (சிறிய மந்தமான சுறா)
    • சோம்னியோசசு எஸ்பி. இன்னும் விவரிக்கப்படவில்லை (நீண்ட மூக்கு தூங்கும் சுறா)
  • ஜாமியசு டிஎஸ் ஜோர்டான் & ஃபோலர், 1903
    • ஜாமியசு இசுகுவாமுலோசசு குந்தர், 1877 (வெல்வெட் நாய்மீன்)

கேக்கரல்

[தொகு]

சோம்னியோசிடே குடும்பத்தின் கிரீன்லாந்துச் சுறாக்கள் ஐசுலாந்தில் உணவுக்காக வேட்டையாடப்படுகின்றன. நவீனக் காலங்களில், ஹேகர்ல் உற்பத்திக்காகப் பயன்படுத்தப்படும் பல கிரீன்லாந்து சுறாக்கள், மீன்பிடி கப்பல்களிலிருந்து வாங்கப்படுகின்றன. இவை மீன்பிடி வலைகளில் சிக்குபவையாக உள்ளன. இச்சுறாக்களின் உடல் ஆழமற்ற குழியில் ஒன்றில் புதைக்கப்பட்டு புளிக்கவைக்கப்படுகிறது. சுறாவின் மேல் கற்கள் இடப்பட்டு, உடலிலிருந்து யூரியா மற்றும் மூன்றுமெதிலாமைன் ஆக்சைடு போன்ற நச்சு திரவங்கள் அழுத்தத்தின் மூலம் வெளியேறுகின்றன. இந்த இறைச்சி பல மாதங்களாகப் பதப்படுத்தப்பட்டு மனித நுகர்வுக்குப் பயன்படுத்தப்படுகிறது.[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Erin McCarthy (December 18, 2014). "7 Cool Facts About Greenland Sharks". MentalFloss.com. பார்க்கப்பட்ட நாள் August 17, 2016.
  2. Bruce A. Wright (December 8, 2000). "Sleeper Sharks Not So Sleepy". Arctic Science Journeys, University of Alaska Fairbanks. பார்க்கப்பட்ட நாள் August 17, 2016.
  3. "Family Somniosidae - Sleeper sharks". Fish Base. பார்க்கப்பட்ட நாள் 29 December 2012.
  4. Wheatley, Gale (20 September 2010). "Iceland's Wild Culinary Traditions: Hákarl and Brennivín" இம் மூலத்தில் இருந்து 6 மார்ச் 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140306161147/http://gourmetwonderland.com/hakarl-brennivin. 

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=சோம்னியோசிடே&oldid=3390638" இலிருந்து மீள்விக்கப்பட்டது