சோமேஸ்வரா கோவில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சோமேஸ்வரா கோவில்
பெயர்
பெயர்:சிறீ சோமேசுவரா கோயில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:கர்நாடகம்
மாவட்டம்:தென் கன்னட மாவட்டம்
அமைவு:சோமேசுவர், உள்ளால், மங்களூர்
கோயில் தகவல்கள்
மூலவர்:சிவன்
சிறப்பு திருவிழாக்கள்:மகா சிவராத்திரி

சோமேசுவரர் கோயில் என்பது தென்னிந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைகளில், அரேபிய கடலின் கரையில் மங்களூரிலிருந்து 13 கி.மீ. (8.1 மைல்) தொலைவில் அமைந்துள்ளது. இந்த கோயில் 'ருத்ரபாத சேத்திரம்' என்று அழைக்கப்படுகிறது. மேலும் இந்த தலத்தில் பித்ரு காரியங்கள் (இறந்த முன்னோருக்கு செய்யும் இறுதிச் சடங்குகள்) நிகழ்த்தும் ஒரு இடமாகவும் உள்ளது.[1]

வரலாறு[தொகு]

இக்கோயில் கி.பி. பத்தாம் நூற்றாண்டில் அலுபா வம்ச மன்னரால் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது. கோயில், பனவாசியின் கந்தம்பாக்களின் நிர்வாக ஆட்சியின் கீழும், 12 ஆம் நூற்றாண்டில் உல்லாலா அரசர்களின் நிர்வாகத்தின் கீழும் இருந்துள்ளது. கோவிலில் காணப்பட்ட இரண்டு கல்வெட்டுகள் 15 ஆம் நூற்றாண்டில் விஜயநகர அரசர் இரண்டாம் தேவ ராயன் காலத்தில் ராஜகுரு ஸ்ரீ கிரியாஷகிருத்ய தேவவாடியா என்பவரால் மறுசீரமைப்பு செய்யப்பட்டது.[1]

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 "Shree Somanatha Temple, Someshwara, Mangalore". rcmysore-portal.kar.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2016-11-13.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோமேஸ்வரா_கோவில்&oldid=3313673" இலிருந்து மீள்விக்கப்பட்டது