உள்ளடக்கத்துக்குச் செல்

சோமா பிசுவாசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சோமா பிசுவாசு

சோமா பிசுவாசு (Soma Biswas) இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் வசிக்கும் ஒரு தடகள விளையாட்டு வீராங்கனையாவார். 1979 ஆம் ஆண்டு மே மாதம் நதியா மாவட்டம் இரணகாட்டு என்ற ஊரில் இவர் பிறந்தார். எப்டாத்லான் எனப்படும் எழுவகைத் தடகளப் போட்டிகளில் சோமா பிசுவாசு நிபுணத்துவம் பெற்றவராவார்.

2002 ஆம் ஆண்டு தென்கொரியாவின் பூசனில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றபோது இவர் புகழ் பெற்றார். 2006 ஆம் ஆண்டு தோகாவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் இவர் மற்றொரு வெள்ளிப் பதக்கமும் வென்றார். இந்த போட்டியின் போது இவர் 110 மீ தடை தாண்டும் ஓட்டப்போட்டி, 200 மீ மற்றும் 800 மீ போட்டிகளில் வென்றார்.குந்தல் ராய் மற்றும் பல வெளிநாட்டு பயிற்சியாளர்களுடன் பிசுவாசு பணியாற்றினார். [1][2]

விருதுகள்

[தொகு]

2003 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கம் மாலதி பாசப்பாவிற்கு அருச்சுனா விருது வழங்கி சிறப்பித்தது. [1] பரணிடப்பட்டது 2008-12-27 at the வந்தவழி இயந்திரம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "இந்திய விளையாட்டு வீராங்கனைகள் இதுவரை வென்றுள்ள பதக்கங்கள் எத்தனை?". BBC Tamil. 25 February 2020. பார்க்கப்பட்ட நாள் 13 July 2021.
  2. "MEDAL WINNERS OF ASIAN GAMES". Athletics Federation of India. பார்க்கப்பட்ட நாள் 13 July 2021.

புற இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோமா_பிசுவாசு&oldid=3782449" இலிருந்து மீள்விக்கப்பட்டது