சோப் ஆறு
சோப் ஆறு ( Zhob River ) பலூசிஸ்தான் மற்றும் பாக்கித்தானின் கைபர் பக்துன்க்வாவில் அமைந்துள்ளது. சோப் ஆற்றின் மொத்த நீளம் 410 கிமீ ஆகும். இது பொதுவாக வடகிழக்கு பாதையில் பாய்கிறது.
சொற்பிறப்பியல்
[தொகு]பஷ்தூ மொழியில், சோப் என்றால் "கசியும் நீர்" என்று பொருள். [1] மொழியியல் ரீதியாக, பெயர் இரானோ-ஆரியன் தோற்றம் மற்றும் சொற்பிறப்பியல் ரீதியாக டைகிரிசு படுகையில் உள்ள லிட்டில் சாப் மற்றும் கிரேட் சாப் ஆறுகளுடன் ஒப்பிடப்படுகிறது.
சோப் ஆறு முஸ்லிம் பாக் அருகே கான் மெக்தர்சாய் மலைத்தொடரில் (சாரி மெக்தர்சாய் கணவாய் எனவும் அறியப்படுகிறது) உருவாகிறது. இது சோப் நகருக்கு மேற்கே 4 கிமீ தொலைவில் செல்கிறது. கோமல் ஆற்றின் துணை ஆறாக இது கசூரி காச் அருகே இணைகிறது. இது சிந்து ஆற்றுப் படுகையின் ஒரு பகுதியாக அமைகிறது.
சோப் ஆறானது வடக்கு பலூசிஸ்தானில் உள்ள நிலத்திற்கு கோமல் ஆற்றுடன் நீர்ப்பாசனம் செய்யப் பயன்படுகிறது. இது விவசாயத்திற்கு வளமான மண்ணை வழங்குகிறது. 1960கள் மற்றும் 1970களில் சோப் கால்வாயின் சீரழிவால் நீர்ப்பாசன பரப்பு குறைந்தது.
தொல்லியல்
[தொகு]சோப் ஆற்றின் ஓரத்தில் கிமு 3000க்கு முந்தைய இராணா குண்டாய், பெரியனோ குண்டாய், ரெஹ்மான் தேரி போன்ற பழங்காலத் தளங்களும், கும்லாவின் அருகிலுள்ள தளமும் உள்ளன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Zhob District". 1 April 2005.