ஈரானிய மொழிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஈரானிய மொழிகள் என்பன, இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தின் ஒரு பிரிவு ஆகும். இம் மொழிக் குழு, இந்தோ-ஆரிய மொழிகளுடன் சேர்ந்து, இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தின் ஒரு கிளையான இந்தோ-ஈரானிய மொழிக் குழுவை உருவாக்குகின்றது. ஈரானிய மொழிக் குழுவைச் சேர்ந்த அவெஸ்தான், பழைய பாரசீகம் என்னும் மொழிகள் இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பத்திலுள்ள மிகப் பழைய மொழிகளுள் இரண்டு ஆகும்.

தற்காலத்தில், ஈரானிய மொழிகளைப் பேச்சு மொழியாகக் கொண்ட 150 - 200 மில்லியன் வரையிலான மக்கள் உள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. 2005 ஆம் ஆண்டில் கணிக்கப்பட்டபடி, 87 வகையான ஈரானிய மொழிகள் இருப்பதாகத் தெரிகிறது. இவற்றுள் மக்கட் தொகை அடிப்படையில் பெரியது 70 மில்லியன் மக்களால் பேசப்படும் பாரசீக மொழியாகும். குர்டிஷ், பாஷ்த்து என்பன ஒவ்வொன்றும் 25 மில்லியன் மக்களாலும், பலூச்சி மொழி 7 மில்லியன் மக்களாலும் பேசப்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈரானிய_மொழிகள்&oldid=1347277" இருந்து மீள்விக்கப்பட்டது