சைபுல் முலுக் தேசியப் பூங்கா
சைபுல் முலுக் தேசியப் பூங்கா | |
---|---|
பூங்காவின் மையத்தில் அமைந்துள்ள சைபுல் முலுக் ஏரி | |
பாக்கித்தானிலுள்ள கைபர் பக்துன்வா மாகாணம்|கைபர் பக்துன்வா மாகாணத்தில் பூங்காவின் அமைவிடம் | |
அமைவிடம் | மன்செரா மாவட்டம், கைபர் பக்துன்வா மாகாணம், பாக்கித்தான் |
அருகாமை நகரம் | பாலாகோட் |
பரப்பளவு | 880 km2 (340 sq mi) |
ஏற்றம் | 10,735 அடி (3,272 m) |
நிறுவப்பட்டது | 2003 |
சைப் உல் முலுக் தேசியப் பூங்கா ( Saiful Muluk National Park ) பாக்கித்தானின் கைபர் பக்துன்வாவின் மன்செரா மாவட்டத்திலுள்ள ககன் பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது. இந்த பூங்கா 2003 இல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. [1] மேலும், அல்பைன் தட்பவெட்பம் சைபுல் முலுக் ஏரியை மையமாகக் கொண்டுள்ளது.
தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள்
[தொகு]மேற்கத்திய இமயமலையின் அல்பைன் ஊசியிலை காடுகளின் மரங்கள், புதர்கள், வற்றாத தாவரங்கள், மூலிகைகள் மற்றும் அதிக உயரமான மேற்கு இமயமலை அல்பைன் புதர் மற்றும் புல்வெளிகள் இங்குள்ள தாவரங்களில் அடங்கும். [1]
பூங்காவிலுள்ள சில விலங்கினங்களில் பனிச்சிறுத்தை, ஆசியக் கறுப்புக் கரடி, மர்மோட், மரநாய், ஐரோவாசியச் சிவிங்கிப் பூனை, இந்தியச் சிறுத்தை, ஆகியவை அடங்கும். பூங்காவின் ஏரிகளும் ஈரநிலங்களும் இங்குள்ள விலங்குகள் மற்றும் புலம்பெயர்ந்த நீர்ப்பறவைகளுக்கு குறிப்பிடத்தக்க சுற்றுச்சூழல் முக்கியத்துவத்தைத் தருகிறது. [1]
பிராந்தியம்
[தொகு]லுலுசார்-துடிபட்சார் தேசியப் பூங்கா, லுலுசார் ஏரி மற்றும் துடிபட்சர் ஏரி, ககன் பள்ளத்தாக்கு போன்ற பகுதிகள் இந்த தேசியப் பூங்காவிற்கு அருகில் உள்ளது. பூங்காக்கள் இணைந்து 88,000 எக்டேர்களை (220,000) பாதுகாக்கின்றன. [1]