சைக்கோ (2020 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சைக்கோ
திரைப்பட விளம்பரச் சுவரொட்டி
இயக்கம்மிஷ்கின்
தயாரிப்புஅருண் மொழி மானிக்கம்
கதைமிஷ்கின்
இசைஇளையராஜா
நடிப்பு
ஒளிப்பதிவுதன்வீர் மிர்
படத்தொகுப்புஎன். அருன்குமார்
கலையகம்டபுள் மீனிங் புரொடக்‌ஷன்
வெளியீடுசனவரி 24, 2020 (2020-01-24)
ஓட்டம்144 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
மொத்த வருவாய்27 கோடி

சைக்கோ (Psycho) என்பது 2020 ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த உளவியல் அதிரடித் திரைப்படமாகும். இயக்குனர் மிஷ்கின் எழுதி இயக்கியுள்ளார். இந்த படத்தை டபுள் மீனிங் புரொடக்‌ஷன் சார்பில் கீழ் அருண் மொழி மாணிக்கம் தயாரித்திருதார். இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின், நித்யா மேனன், அதிதி ராவ் ஹைதாரி, அறிமுக நடிகர் இராஜ்குமார் பிச்சுமணி ஆகியோர் நடித்துள்ளனர். ரேணுகா, சிங்கம்புலி, ராம், ஆடுகளம் நரேன், ஷாஜி சென் ஆகியோரும் துணை வேடங்களில் நடித்திருந்தனர். படத்தின் ஒலிப்பதிவை இளையராஜா மேற்கொண்டிருந்தார்.[1][2][3] தன்வீர் மிர் ஒளிப்பதிவு செய்துள்ளார். என். அருண்குமார் இப்படத்தை தொகுத்துள்ளார். படத்தின் தயாரிப்பு செப்டம்பர் 2018இல் தொடங்கியது, இந்த படம் 2020, ஜனவரி 24 அன்று உலகளவில் வெளியிடப்பட்டது.

சுருக்கம்[தொகு]

மனநோயாளியான அங்குலிமாலா (இராஜ்குமார் பிசுசுமணி) தொடர்ச்சியாக பெண்களின் தலைகளை துண்டிக்கிறார். அவர்களின் தலைகளை அவன் சேகரித்து வருகிறான். ஒரு முன்னணி வானொலி நிகழ்ச்சித் தொகுப்பாளரான தாகினி (அதிதி ராவ் ஹைதாரி) சைக்கோவால் கடத்தப்படுகிறாள். அவன் இவளது தலையைத் துண்டிக்க முற்படும்போது கௌதம் (உதயநிதி ஸ்டாலின்) தன்னைக் காப்பாற்ற வருவார் என்று கூறுகிறாள். இதற்கிடையில், முன்னால் காவல் உதவி ஆய்வாளரான கமலாவின் (நித்யா மேனன்) துணையை நாடி கௌதம் செல்கிறான். கௌதம் சைக்கோவைக் கண்டுபிடித்து, தாகினியைக் காப்பாற்றுவாரா என்பது கதையின் முக்கிய அம்சமாக அமைகிறது.

நடிகர்கள்[தொகு]

தயாரிப்பு[தொகு]

இயக்குநர் மிஷ்கின் உதயநிதி ஸ்டாலினை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க முடிவு செய்தார்.[4][5] அருண் மொழி மாணிக்கத்தின் டபுள் மீனிங் புரொடக்‌ஷன் பதாகையின் கீழ், மிஸ்கின் அதிதிராவ் ஹைதாரி, நித்யா மேனன், இராஜ்குமார் பிச்சுமணி, மற்றும் ராம் ஆகிய நடிகர்களை இறுதி செய்தனர். அதே நேரத்தில் இயக்குனரின் முந்தைய படங்களான நந்தலாலா மற்றும் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஆகியவற்றில் பணி புரிந்த இசையமைப்பாளர் இளையராஜா படத்தின் இசைப் பணிகளை மேற்கொண்டார்.[6][7][8] படத்தின் படப்பிடிப்பு 2018 செப்டம்பர் தொடக்கத்தில் தொடங்கியது. அந்த மாத இறுதியில் முதல் பார்வை விளம்பரச் சுவரொட்டி வெளியிடப்பட்டது, இது சைக்கோ என்ற திட்டத்தின் தலைப்பை வெளிப்படுத்தியது.[9] படத்தின் இரண்டாவது அட்டவணை 2018 திசம்பர் தொடக்கத்தில் தமிழ்நாடு முழுவதும் உள்ள மலை நகரங்களில் படமாக்கப்பட்ட பின்னர் நிறைவடைந்தது.[9]

மேற்கோள்கள்[தொகு]

  1. Lakshmi, V (3 Sep 2018). "Udhayanidhi turns 'psycho' for Mysskin - Times of India". The Times of India. https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/udhayanidhi-turns-psycho-for-mysskin/articleshow/65645187.cms. 
  2. "Psycho is Mysskin's next, stars Udhayanidhi Stalin, Aditi Rao Hydari, Nithya Menen ,Rajkumar". The Indian Express. 4 September 2018. https://indianexpress.com/article/entertainment/tamil/psycho-mysskins-udhayanidhi-stalin-aditi-rao-hydari-nithya-menen-5339221/. 
  3. "Udhayanidhi Stalin to play an intense role in his next with Mysskin". The News Minute. 3 September 2018. https://www.thenewsminute.com/article/udhayanidhi-stalin-play-intense-role-his-next-mysskin-87743. 
  4. "Udhayanidhi Stalin replaces Shanthanu in Mysskin's next flick". India Today. Ist. https://www.indiatoday.in/movies/regional-cinema/story/udhayanidhi-stalin-replaces-shanthanu-bhagyaraj-in-mysskin-next-1277996-2018-07-05. 
  5. July 5, Silverscreen On; 2018 (5 July 2018). "'I Did Not Refuse The Project On Purpose,': Actor Shanthnu On Not Being A Part of Mysskin's Film". https://silverscreen.in/news/i-did-not-refuse-the-project-on-purpose-actor-shanthnu-on-not-being-a-part-of-mysskins-film/. 
  6. "Udhayanidhi turns 'psycho' for Mysskin - Times of India". https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/udhayanidhi-turns-psycho-for-mysskin/articleshow/65645187.cms. 
  7. "Nithya Menen explains what drew her to Mysskin's Psycho". https://www.in.com/entertainment/regional/nithya-menen-explains-what-drew-her-to-mysskins-psycho-248115.htm. 
  8. "Psycho: Myskkin and Udhayanidhi Stalin film gets a name". India Today. Ist. https://www.indiatoday.in/movies/regional-cinema/story/psycho-myskkin-and-udhayanidhi-stalin-film-gets-a-name-1332871-2018-09-05. 
  9. 9.0 9.1 "Second schedule of Udhayanidhi's 'Psycho' completed - Times of India". https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/second-schedule-of-udhayanidhis-psycho-completed/articleshow/66917763.cms. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சைக்கோ_(2020_திரைப்படம்)&oldid=3660108" இருந்து மீள்விக்கப்பட்டது