சைகு சாயிது துடுப்பாட்ட அரங்கு
![]() | |
அரங்கத் தகவல் | |
---|---|
அமைவிடம் | அபுதாபி, ஐக்கிய அரபு அமீரகம் |
ஆள்கூறுகள் | 24°23′47″N 54°32′26″E / 24.39639°N 54.54056°E |
உருவாக்கம் | 2004 |
இருக்கைகள் | 20,000 |
இயக்குநர் | அமீரகத் துடுப்பாட்ட வாரியம் |
குத்தகையாளர் | ஐக்கிய அரபு அமீரகத் துடுப்பாட்ட அணி ஆப்கானித்தான் துடுப்பாட்ட அணி |
முடிவுகளின் பெயர்கள் | |
வடக்கு எல்லை கூடார எல்லை | |
பன்னாட்டுத் தகவல் | |
முதல் தேர்வு | 20–24 நவம்பர் 2010:![]() ![]() |
கடைசித் தேர்வு | 10–14 மார்ச் 2021:![]() ![]() |
முதல் ஒநாப | 18 ஏப்ரல் 2006:![]() ![]() |
கடைசி ஒநாப | 26 சனவரி 2021:![]() ![]() |
முதல் இ20ப | 10 பெப்ரவரி 2010:![]() ![]() |
கடைசி இ20ப | 20 அக்டோபர் 2021:![]() ![]() |
20 அக்டோபர் 2021 இல் உள்ள தரவு மூலம்: கிரிக்கின்ஃபோ |
சைகு சாயிது துடுப்பாட்ட அரங்கு (Sheikh Zayed Cricket Stadium) ஐக்கிய அரபு அமீரகம், அபுதாபி நகரில் அமைந்துள்ள ஒரு துடுப்பாட்ட அரங்காகும். இவ்வரங்கு $23 மில்லியன் செலவில் கட்டப்பட்டு, 2004 மே மாதத்தில் திறக்கப்பட்டது.[1] இவ்வரங்கில் விளையாடப்பட்ட முதலாவது ஆட்டம் இசுக்காட்லாந்து, கென்ய அணிகளுக்கிடையே நடைபெற்ற முதல்-தர ஆட்டம் ஆகும். இது 2004 நவம்பரில் கண்டங்களிடைக் கிண்ணத்திற்காக நடத்தப்பட்டது. இவ்வரங்கில் 2021 ஐசிசி ஆண்கள் இருபது20 உலகக்கிண்ணப் போட்டிகளும் இடம்பெற்றன. 20,000 இருக்கைகள் இங்கு உள்ளன.[2]
இவ்வரங்கிற்கு அமீரகத்தின் முன்னாள் ஆட்சியாளர் சைகு சாயிது இப்னு சுல்தான் ஆல் நகியானின் நினைவாக "சைகு சாயிது துடுப்பாட்ட அரங்கு" எனப் பெயரிடப்பட்டது.
பன்னாட்டுப் போட்டிகள்[தொகு]
2006 ஏப்ரலில் இவ்வரங்கில் இந்தியாவுக்கும், பாக்கித்தானுக்கும் இடையில் தொடர் போட்டிகள் 2005 பாக்கித்தான் நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக நிதி சேகரிப்பு நிகழ்ச்சியாக இடம்பெற்றது. இப்போட்டிகளில் $10 மில்லியன் நிதி சேகரிக்கப்பட்டது. இந்நிதியில் 75% பாக்கித்தானுக்கும், மீதம் இந்தியாவுக்கும் வழங்கப்பட்டது.[3]
இவற்றையும் பார்க்க[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Zayed Cricket Stadium- Abu Dhabi Cricket Club" இம் மூலத்தில் இருந்து 25 டிசம்பர் 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181225201530/http://abudhabicricket.ae/stadium_overview.php%20. பார்த்த நாள்: 15 September 2015.
- ↑ "Zayed Cricket Stadium | United Arab Emirates | Cricket Grounds | ESPNcricinfo". http://www.espncricinfo.com/other/content/ground/59396.html.
- ↑ "India bat in Abu Dhabi charity match against Pakistan". 10 June 2008 இம் மூலத்தில் இருந்து 10 ஜூன் 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080610013521/http://in.sports.yahoo.com/060418/137/63mem.html. பார்த்த நாள்: 8-09-2018.
வெளி இணைப்புகள்[தொகு]
- "World Stadiums - Sheikh Zayed Cricket Stadium in Abu Dhabi". worldstadiums.com. http://www.worldstadiums.com/stadium_pictures/middle_east/uae/abu_dhabi_cricket.shtml.
- "Sheikh Zayed Stadium - United Arab Emirates - Cricket Grounds - ESPN Cricinfo". Cricinfo. http://www.cricinfo.com/other/content/ground/59396.html.