சைகு சாயிது துடுப்பாட்ட அரங்கு
| அரங்கத் தகவல் | |
|---|---|
| அமைவிடம் | அபுதாபி, ஐக்கிய அரபு அமீரகம் |
| ஆள்கூறுகள் | 24°23′47″N 54°32′26″E / 24.39639°N 54.54056°E |
| உருவாக்கம் | 2004 |
| இருக்கைகள் | 20,000 |
| இயக்குநர் | அமீரகத் துடுப்பாட்ட வாரியம் |
| குத்தகையாளர் | ஐக்கிய அரபு அமீரகத் துடுப்பாட்ட அணி ஆப்கானித்தான் துடுப்பாட்ட அணி |
| முடிவுகளின் பெயர்கள் | |
| வடக்கு எல்லை கூடார எல்லை | |
| பன்னாட்டுத் தகவல் | |
| முதல் தேர்வு | 20–24 நவம்பர் 2010: |
| கடைசித் தேர்வு | 10–14 மார்ச் 2021: |
| முதல் ஒநாப | 18 ஏப்ரல் 2006: |
| கடைசி ஒநாப | 26 சனவரி 2021: |
| முதல் இ20ப | 10 பெப்ரவரி 2010: |
| கடைசி இ20ப | 20 அக்டோபர் 2021: |
| 20 அக்டோபர் 2021 இல் உள்ள தரவு மூலம்: கிரிக்கின்ஃபோ | |
சைகு சாயிது துடுப்பாட்ட அரங்கு (Sheikh Zayed Cricket Stadium) ஐக்கிய அரபு அமீரகம், அபுதாபி நகரில் அமைந்துள்ள ஒரு துடுப்பாட்ட அரங்காகும். இவ்வரங்கு $23 மில்லியன் செலவில் கட்டப்பட்டு, 2004 மே மாதத்தில் திறக்கப்பட்டது.[1] இவ்வரங்கில் விளையாடப்பட்ட முதலாவது ஆட்டம் இசுக்காட்லாந்து, கென்ய அணிகளுக்கிடையே நடைபெற்ற முதல்-தர ஆட்டம் ஆகும். இது 2004 நவம்பரில் கண்டங்களிடைக் கிண்ணத்திற்காக நடத்தப்பட்டது. இவ்வரங்கில் 2021 ஐசிசி ஆண்கள் இருபது20 உலகக்கிண்ணப் போட்டிகளும் இடம்பெற்றன. 20,000 இருக்கைகள் இங்கு உள்ளன.[2]
இவ்வரங்கிற்கு அமீரகத்தின் முன்னாள் ஆட்சியாளர் சைகு சாயிது இப்னு சுல்தான் ஆல் நகியானின் நினைவாக "சைகு சாயிது துடுப்பாட்ட அரங்கு" எனப் பெயரிடப்பட்டது.
பன்னாட்டுப் போட்டிகள்
[தொகு]2006 ஏப்ரலில் இவ்வரங்கில் இந்தியாவுக்கும், பாக்கித்தானுக்கும் இடையில் தொடர் போட்டிகள் 2005 பாக்கித்தான் நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக நிதி சேகரிப்பு நிகழ்ச்சியாக இடம்பெற்றது. இப்போட்டிகளில் $10 மில்லியன் நிதி சேகரிக்கப்பட்டது. இந்நிதியில் 75% பாக்கித்தானுக்கும், மீதம் இந்தியாவுக்கும் வழங்கப்பட்டது.[3]
இவற்றையும் பார்க்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Zayed Cricket Stadium- Abu Dhabi Cricket Club". AdCricketClub.ae. Archived from the original on 25 டிசம்பர் 2018. Retrieved 15 September 2015.
{{cite web}}: Check date values in:|archive-date=(help) - ↑ "Zayed Cricket Stadium | United Arab Emirates | Cricket Grounds | ESPNcricinfo". Cricinfo. Retrieved 2018-10-26.
- ↑ "India bat in Abu Dhabi charity match against Pakistan". Web.archive.org. 10 June 2008. Archived from the original on 10 ஜூன் 2008. Retrieved 8-09-2018.
{{cite web}}: Check date values in:|accessdate=and|archive-date=(help)