செரெங்கெட்டி
செரெங்கெட்டி (Serengeti) என்பது ஆப்பிரிக்காவின் ஒரு புவியியல் பகுதியாகும். இது வடக்கு தன்சானியா மற்றும் தென்மேற்கு கென்யாவரை 1 மற்றும் 3 ஆம் பாகை தெற்கு அட்சரேகைகளுக்கு இடையே மற்றும் 34 மற்றும் 36 பாகை கிழக்கு நிலநிரைகோடுகள் இடையே பரவியுள்ளது. இது ஏறத்தாழ 30,000 கிமீ 2 (12,000 சதுர மைல்) பரப்பளவில் பரவியுள்ளது. செரெங்கெட்டி பகுதி கென்ய பகுதியில் மசாய் மாரா என அறியப்படுகிறது.
செரெங்கெட்டியில், உலகின் மிகப்பெரிய எண்ணிக்கையிலான பாலூட்டிகளின் இடம்பெயர்வு நடக்கின்றது. இது ஆப்பிரிக்காவின் ஏழு அதிசயங்களில் ஒன்றாகவும்[1] மற்றும் உலகின் பத்து இயற்கை பயண அதிசயங்களில் ஒன்றாகவும்[2] இருந்து, அதைப் பாதுகாக்க உதவுகிறது. செரெங்கெட்டி பகுதி அங்கு உள்ள பெருமளவிலான சிங்கங்களின் எண்ணிக்கைக்காக புகழ்பெற்றதாக உள்ளது மற்றும் அவற்றின் இயற்கையான வாழிடச் சூழலில் அவற்றை பார்க்கும் பெருமைமிகு இடங்களில் ஒன்றாக உள்ளது.[3] தான்சானியா செரெங்கெட்டி தேசியப் பூங்கா பிராந்தியம் மற்றும் பல பொழுதுபோக்கு அம்சங்களைக் கொண்டதாக உள்ளது.
தோராயமாக 70 பெரிய பாலூட்டி இனங்கள் மற்றும் 500 பறவை இனங்கள் இங்கு காணப்படுகின்றன. இது ஒரு பன்முகத்தன்மைவாய்ந்த, நிலப்பகுதியாக ஆற்றுப்படுக்கை காடுகள், சதுப்பு நிலங்கள், எச்சக்குன்றுகள், புல்வெளிகள், மரக்காடுகள் உட்பட பல்வேறு வாழ்விடங்களை கொண்டதாக உள்ளது.[4] இந்த வாழ்விடத்தில் நீலக் காட்டுமான்கள், காட்டெருமைகள், வனப்புமிக்க சிறுமான்கள், வரிக்குதிரைகள் போன்றவை பொதுவாக இப்பகுதியில் காணப்படும் பெரிய பாலூட்டிகளில் சில ஆகும்.
செராங்கட்டி தேசிய பூங்கா வழியாக அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள சாலை குறித்து சர்ச்சை உண்டாகியுள்ளது.[5]
செரெங்கெட்டி என்ற சொல் மசாய் மொழியான, மா மொழியில் இருந்து தோன்றியது இந்த மொழியில் செரெங்கெட்டி என்றால் "முடிவற்ற சமவெளி" என்று பொருளாகும்.[6][7]
வலசை (இடப்பெயர்வு)
[தொகு]ஒவ்வோராண்டும் ஏறக்குறைய ஒரே நேரத்தில், செரங்கட்டி சரணாலயத்திலிருந்து மசாய் மாரா என்ற இடத்துக்கு ஆண்டுதோறும் இலட்சக்கணக்கான விலங்குகள் வலசைபோகின்றன [8](இடம் பெயர்கின்றன). ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட காலம் செரங்கட்டி பகுதியில் உணவுப் பற்றாக்குறை ஏற்படுவது வாடிக்கை. இதனால் மசாய் மாரா பகுதி நோக்கி உணவுக்காகத் தங்களது பயணத்தை இந்த விலங்குகள் தொடங்கும் இந்த இடப்பெயர்வு தோராயமாக சனவரி முதல் மார்ச் வரை நீடிக்கும். இந்த இடப்பெயர்ச்சி காலத்தில் தோராயமாக 260,000 வரிக்குதிரைகள் 1.7 மில்லியன் நீலக் காட்டுமான், 470,000 சிறுமான்கள் என இலட்சக்கணக்கான விலங்குகள் வலசையில் ஈடுபட்டு மீண்டும் தம் சொந்த இடங்களுக்குத் திரும்புகின்றன .[9][10][11]
இந்த விலங்குகள் மிகக் கடுமையான பாதைகள் வழியாக பயணம் செய்கின்றன. பல ஆபத்தான நீர்நிலைகளைத் தாண்டி செல்லும் விலங்குகளை எதிர்பார்த்து நீர்நிலைகளில் நிறைய முதலைகள் காத்திருக்கும். இவை தமக்கு கிடைத்த விலங்குகளைப் பிடித்துச் சாப்பிடும். இவை மட்டுமல்லாது, சிறுத்தைகள், கழுதைப்புலிகள், சிங்கங்கள் எல்லாம் காத்திருந்து பயணம் செய்யும் விலங்குகளை வேட்டையாடும். விலங்குகளின் இந்த அதிசயப் பயணத்தைப் பார்த்து மகிழ சிறப்பு சுற்றுலாவுக்கு கென்ய அரசாங்கம் ஏற்பாடு செய்து தருகிறது. இதனால் கென்யாவுக்குச் சுற்றுலாத் துறை வருமானம் அதிகரித்திருக்கிறது. இந்த நீண்ட தூரப் பயணத்தில் விலங்குகள் சுமார் 400 கிலோ மீட்டர் தூரம் போகின்றன. உணவு தேடலுக்காக ஒரே நேரத்தில் இவ்வளவு விலங்குகள் செல்வது விலங்குகள் உலகத்தில் அதிசயமாக கருதப்படுகிறது.[12]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Seven Natural Wonders of Africa". Seven Natural Wonders.
- ↑ Partridge, Frank (20 May 2006). "The fast show". The Independent (London). http://www.findarticles.com/p/articles/mi_qn4158/is_20060520/ai_n16416123. பார்த்த நாள்: 2007-03-14.
- ↑ Nolting, Mark (2012). Africa's Top Wildlife Countries. Global Travel Publishers Inc. p. 356. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0939895151.
- ↑ http://www.ath.aegean.gr/srcosmos/showpub.aspx?aa=8868. பார்க்கப்பட்ட நாள் 9 February 2014.
{{cite web}}
: Missing or empty|title=
(help)[தொடர்பிழந்த இணைப்பு] - ↑ "Highway Development Threatens Serengeti". Serengeti Watch. Archived from the original on 2015-08-17. பார்க்கப்பட்ட நாள் 2016-12-31.
- ↑ Briggs, Phillip (2006), Northern Tanzania: The Bradt Safari Guide with Kilimanjaro and Zanzibar, Bradt Travel Guides, p. 198, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-84162-146-3
- ↑ "Maa (Maasai) Dictionary". Darkwing.uoregon.edu. பார்க்கப்பட்ட நாள் 2010-10-23.
- ↑ "வலசை".
- ↑ Anouk Zijlma. "The Great Annual Wildlife Migration – The Great Migration of Wildebeest and Zebra". About.com. Archived from the original on 28 மார்ச் 2017. பார்க்கப்பட்ட நாள் 3 June 2014.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "How to Get There, Ngorongoro Crater". Ngorongoro Crater Tanzania. 2013. பார்க்கப்பட்ட நாள் 3 June 2014.
- ↑ "Ngorongoro Conservation Area". United Nations Educational, Scientific and Cultural Organization – World Heritage Centre. பார்க்கப்பட்ட நாள் 3 June 2014.
- ↑ ஆதலையூர் சூரியகுமார் (21 திசம்பர் 2016). "காரணம் ஆயிரம்: விலங்குகளின் பிரம்மாண்ட பேரணி". கட்டுரை. தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 1 சனவரி 2017.