நீலக் காட்டுமான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/Connochaetes|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}
நீலக் காட்டுமான்
Blue wildebeest
புதைப்படிவ காலம்:1–0 Ma
நடு பிலிசுடோசின் – தற்போது
சி. டி. அல்போஜுபாட்டஸ்
In the இங்கொரொங்கோரோ பாதுகாப்புப் பகுதி, தன்சானியா
உயிரியல் வகைப்பாடு e
Unrecognized taxon (fix): Connochaetes
இனம்: வார்ப்புரு:Taxonomy/ConnochaetesC. taurinus
இருசொற் பெயரீடு
Connochaetes taurinus
(Burchell, 1823)
Subspecies

C. t. albojubatus (Thomas, 1912)
C. t. cooksoni (Blaine, 1914)
C. t. johnstoni (Sclater, 1896)
C. t. mearnsi (Heller, 1913)
C. t. taurinus (Burchell, 1823)

Distribution of the subspecies:
  C. t. taurinus
  C. t. cooksoni
  C. t. johnstoni
  C. t. albojubatus
  C. t. mearnsi

நீலக் காட்டுமான் ( Blue wildebeest, வெள்ளை-தாடி காட்டுமான்) என்பது ஒரு பெரிய மறிமான் மற்றும் காட்டுமானின் இரண்டு வகைகளில் ஒன்றாகும். இது கான்னோசீட்ஸ் பேரினம் மற்றும் மாட்டுக் குடும்பம் என வகைப்படுத்தபட்டுள்ளது. மேலும் இது வகைபிரித்தலில் கருப்புக் காட்டுமானுடன் நெருக்கமாக உறவைக் கொண்டுள்ளது. நீலக் காட்டுமான் ஐந்து துணையினங்களைக் கொண்டிருப்பதாக அறியப்படுகிறது. இந்த அகன்ற தோள்கள் கொண்ட மறிமான், ஒரு தனித்துவமான, வலுவான முன்னிறங்கிய தாடையும், கனமான தோற்றத்தையும் கொண்டுள்ளது. நீலக் காட்டுமான்கள் பழுப்பு நிறத்தில் பிறக்கின்றன, மேலும் அவை 2 மாத வயதில் முதிர்ந்த மான்களின் நிறத்தைப் பெறத் தொடங்குகின்றன. பெரிய மான்கள் ஆழ்ந்த மாக்கல் அல்லது நீல-சாம்பல் முதல் வெளிர் சாம்பல் அல்லது சாம்பல்-பழுப்பு வரையிலான நிறத்தில் இருக்கும். இந்த மான்களில் இரண்டு பாலினத்தவையும் ஒரு சோடி வளைந்த பெரிய கொம்புகளைக் கொண்டுள்ளன.

நீலக் காட்டுமான் ஒரு தாவர உண்ணி ஆகும். இது முதன்மையாக குட்டையான புற்களை உண்ணுகிறது. இது சிறு சிறு கூட்டங்களாக நகரும் மந்தைகளாக உள்ளன. இந்த விலங்குகள் மிகுந்த எச்சரிகை உணரவு கொண்டவை, விரைவாக ஓடக்கூடியவை. இவற்றின் இனச்சேர்க்கை பருவம் மழைக்காலத்தின் முடிவில் தொடங்குகிறது. பொதுவாக சுமார் 8.5 மாத கர்ப்ப காலத்திற்குப் பிறகு ஒரு குட்டி பிறக்கும். குட்டி தனது தாயுடன் 8 மாதங்கள் இருக்கும். அதன் பிறகு அது இளம் மான்கள் கொண்ட மந்தையில் இணைகிறது. நீலக் காட்டுமான்கள் தெற்கு மற்றும் கிழக்கு ஆபிரிக்காவில் புதர்கள் நிறைந்த அகாசியா சவன்னாக்களின் எல்லையில் குறுகிய புல்வெளி சமவெளிகளில் காணப்படுகின்றன. நீலக் காட்டுமான்கள் ஆப்பிரிக்காவின் நீண்ட தொலைவு வலசை போகின்றன. குட்டைப் புல் சமவெளிகளில் ஆண்டு மழை மற்றும் புல் வளர்ச்சியுடன் தொடர்புடையதாக, பாலூட்டுதல் மற்றும் கன்றுகளின் வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்து நிறைந்த தீவனத்தை அடைய இவ்வை வலசை போகின்றன. [2]

நீலக் காட்டுமான்கள் அங்கோலா, போட்சுவானா, எசுவாத்தினி, கென்யா, மொசாம்பிக், தென்னாப்பிரிக்கா, தன்சானியா, சாம்பியா, சிம்பாப்வே ஆகிய நாடுகளை பூர்வீகமாகக் கொண்டவை. ஆனால் தற்காலத்தில் இது மலாவியில் அற்றுவிட்டது. ஆனால் நமீபியாவில் வெற்றிகரமாக மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நீலக் காட்டுமான்கள் வாழும் தெற்கு எல்லையாக ஆரஞ்சு ஆறும், மேற்கு எல்லையாக விக்டோரியா ஏரி மற்றும் கென்யா மலையாக உள்ளது. நீலக் காட்டுமான் காப்பகங்கள், காடுகள், தனியார் வேட்டை விளையாட்டு பண்ணைகள் போன்றவற்றில் அறிமுகப்படுத்தபட்டு பரவலாக உள்ளது. எனவே, பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தால் நீலக் காட்டுமான்கள் தீவாய்ப்புக் கவலை குறைந்த இனமாக வகைபிரிக்கபட்டுள்ளது. இவற்றின் எண்ணிக்கை சுமார் 1.5 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இவற்றின் எண்ணிக்கைப் போக்கு சீராக உள்ளது.

வகைபிரித்தல் மற்றும் பெயரிடுதல்[தொகு]

நீலக் காட்டுமானை முதன்முதலில் ஆங்கிலேய இயற்கை ஆர்வலர் வில்லியம் ஜான் புர்செல் என்பவரால் 1823 இல் விவரிக்கப்பட்டது [3] மேலும் அவர் இதற்கு கான்னோசெட்டஸ் டாரினஸ் (Connochaetes taurinus) என்ற அறிவியல் பெயரைக் கொடுத்தார். இது கொனோசீட்ஸ் பேரினத்தில் கருப்புக் காட்டுமானுடன் (C. gnou) உள்ளது. மேலும் இது மாட்டுக் குடும்பத்தில் வைக்கப்பட்டுள்ளது. Connochaetes என்ற இனப்பெயர் கிரேக்க வார்த்தைகளான κόννος, konnos, "தாடி", மற்றும் χαίτη, khaítē, "பாயும் முடி", "பிடரி மயிர்" ஆகியவற்றிலிருந்து உருவாக்கபட்டது. [4] Taurinus என்ற சொல் கிரேக்க வார்த்தையான tauros என்பதிலிருந்து உருவானது, அதாவது காளை என்பதாகும். "ப்ளூ வைல்ட்பீஸ்ட் என்ற பொதுவான பெயர் அதன் உரோமத்தின் வெள்ளி-நீல பொலிவைக் குறிக்கிறது.

நீல, கருப்பு காட்டுமான்கள் தற்போது ஒரே பேரினத்தில் வகைப்படுத்தப்பட்டிருந்தாலும், முன்பு நீலக்காட்டுமான் கோர்கன் என்ற தனி பேரினமாக வகைப்படுத்தபட்டிருந்தது. இரண்டு உயிரினங்களுக்கிடையிலான பரிணாம உறவுகளைப் புரிந்துகொள்வதற்காக மேற்கொள்ளபட்ட மைட்டோடிக் குரோமசேம்கள் மற்றும் எம்டிடிஎன்ஏ பற்றிய ஆய்வில், இரண்டும் நெருங்கிய பைலோஜெனடிக் உறவைக் கொண்டிருப்பது கண்டறியப்பட்டது. இவை இரண்டும் ஒரு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு மரபியல் கிளைப்பால் வேறுபட்டன. [5]

விளக்கம்[தொகு]

பிரேசிலின் சாவோ பாவுலோவில் உள்ள கால்நடை உடற்கூறியல் அருங்காட்சியகத்தில் ஒளிப்படம் எடுக்கப்பட்ட எலும்புக்கூடு
கொம்புகளின் நெருக்கமான காட்சி

இந்த இன மான்களின் உருவம் பார்க்க வேடிக்கையாக இருக்கும். சுருங்கிய நெற்றியும், அகன்று சற்று முன் இறங்கிய தாடையும், காட்டு எருதுக் கொம்பும், ஆட்டிற்கு இருப்பது போன்ற தாடியும், குதிரை உடலும், மெலிந்த கால்களும், சாய்ந்த நடையும், அடிக்கடி முனகுவதும் இந்த மானின் குணங்கள். இவை பால் ஈருருமைக் கொண்டுள்ளன. ஆண் மான்கள் பெண்க மான்களை விட பெரியதாகவும் கருமையாகவும் இருக்கும். நீலக் காட்டுமான் பொதுவாக 170–240 செமீ (67–94 அங்குலம்) தலை மற்றும் உடல் நீளம் கொண்டவை. இந்த இனத்தின் சராசரி உயரம் 115–145 செமீ (45–57 அங்குலம்) ஆகும் . [6] ஆண் மான்களின் எடை பொதுவாக 165 முதல் 290 கிலோவாகவும், பெண் மான்களின் எடை 140 முதல் 260 கிலோ வரை இருக்கும். இவற்றின் ஒரு சிறப்பியல்பு அம்சமானது இவற்றிற்கு உள்ள நீண்ட, கருப்பு நிற வால் ஆகும். இது 60-100 செமீ (24-39 அங்குலம்) நீளம் கொண்டது. [6] இந்த இனத்தின் பிற அனைத்து அம்சங்களும் அடையாளங்களும் இருபாலருக்கும் சமச்சீராக இருக்கும். [7] இவற்றின் சராசரி ஆயுட்காலம் காடுகளில் 20 ஆண்டுகள் மற்றும் சிறைப்பிடிக்கப்பட்டு வளருக்கப்படும் இடங்களில் 21 ஆண்டுகள் ஆகும். [8] அறியப்பட்ட மிகப் நீண்டகாலம் உயிர் வாழ்ந்த சிறைப்பிடிக்கப்ப மான் ஒன்று 24.3 ஆண்டுகள் வாழ்ந்தது. [7]

கொம்புகள்[தொகு]

இரு பாலினத்திற்கும் ஒரு சோடி பெரிய கொம்புகள் உள்ளன. அவை அடைப்புக்குறி போன்ற வடிவத்தில் உள்ளன. இவை வெளிப்புறமாக பக்கவாட்டில் நீண்டு, மேல்நோக்கியும் உள்நோக்கியும் வளைந்திருக்கும். ஆண் மான்களில், கொம்புகள் 83 செமீ (33 அங்குலம்) நீளமும், பெண் மான்களின் கொம்புகள் 30-40 செமீ (12-16 அங்குலம்) நீளமும் இருக்கும். [6] இது ஒரு மறிமானாக இருந்தாலும், மாடுகளின் பல்வேறு பண்புகளைக் கொண்டுள்ளது. எடுத்துகாட்டாக, கொம்புகள் ஆப்பிரிக்க பெண் எருமையின் கொம்புகளை ஒத்திருக்கும். [6] மேலும், கொம்பின் கனமான அமைப்பு பெரிய முன்பகுதிகள் போன்றவை இதற்கு மாட்டின் தோற்றத்தை அளிக்கிறது. [9]

சூழலியல் மற்றும் நடத்தை[தொகு]

நிகோரோங்கோரோ எரிமலைவாயில் மேய்ந்து கொண்டிருக்கும் வரிக்குதிரை மற்றும் நீலக் காட்டுமான்கள்

நீலக் காட்டாமான்கள் பெரும்பாலும் காலை மற்றும் பிற்பகல் வேளைகளில் சுறுசுறுப்பாக இருக்கும். பகலின் வெப்பமான நேரங்கள் ஓய்வில் இருக்கும். இந்த மிகவும் சுறுசுறுப்பான மற்றும் எச்சரிக்கை உணர்வு மிக்க விலங்குகள் மணிக்கு 80 கிலோமீட்டர் வேகத்தில் ஓடும். ஓடும்போது தங்கள் வால்களை அசைத்து, தலையைத் தூக்கியபடி ஓடும். [6] செரெங்கேட்டி தேசிய பூங்காவில் நீலக் காட்டுமான்களின் செயல்பாடு குறித்த ஆய்வில், இந்த விலங்குகள் தங்களுடைய மொத்த நேரத்தின் பாதிக்கு நேரத்துக்கு மேல் ஓய்வுக்காகவும், 33% மேய்ச்சலுக்கும், 12% நகரவும் (பெரும்பாலும் நடைபயிற்சி), சமூக தொடர்புகளுக்கு கொஞ்சம் செலவிடுவது தெரியவந்தது. இருப்பினும், வெவ்வேறு வயது மற்றும் பாலின குழுக்களிடையே இதில் வேறுபாடுகள் இருக்கின்றன.

காட்டுமான்கள் பொதுவாக தங்கள் வகையான மற்ற விலங்குகளுடன் நெருக்கமாக ஓய்வெடுக்கிறது மேலும் தளர்வு மிக்க மந்தைகளாக இடம்பெயர்கின்றன. இளம் ஆண் மான்கள் ஒரு மந்தையாக சேர்கின்றன. சுமார் 90% ஆண் குட்டிகள் அடுத்த இனச்சேர்க்கை காலத்திற்கு முன் இளம் மான் மந்தைகளுடன் இணைகின்றன. கிடாக்கள் நான்கு அல்லது ஐந்து வயதில் பிராந்தியத்தை ஆதிக்கம் செலுத்துபவையாக மாறி, மிகவும் சத்தமிடுபவையாகவும், சுறுசுறுப்பானவையாகவும் மாறும். கிடாக்கள் ஒன்றுக்கொன்று நெருக்கமாக இருப்பதை ஏற்றுக் கொள்ளும் மேலும் ஒரு சதுர கிலோமீட்டர் (0.39 சதுர மைல்) சமவெளியில் 270 காளைகள் தங்கக்கூடும். பொதுவாக, நீலக் காட்டுமான்கள் இரவில் சில முதல் ஆயிரக்கணக்கானவை சேர்ந்த குழுக்களாக ஓய்வெடுக்கின்றன. இவற்றுக்கு இடையே குறைந்தபட்சம் 1-2 மீ (3-7 அடி) இடைவெளி இருக்கும் (தாயும் குட்டிகளும் நெக்கமாக இருக்கலாம்). சிங்கங்கள், சிவிங்கிப்புலிகள், சிறுத்தைகள், ஆப்பிரிக்க காட்டு நாய்கள், கழுதைப்புலிகள், முதலைகள் போன்றவற்றிக்கு இவை முக்கிய இரையாகும். [6]

பெண் குட்டிகள் தங்கள் வாழ்நாள் முழுவதும் தங்கள் தாய் மற்றும் மந்தையுடன் தொடர்புடைய பெண் மான்களுடன் இருக்கும். ஒரு மந்தையிலுள்ள பெண் மான்களில் இளம் மான்கள் முதல் வயதான மான்கள் வரை என பல வயதுடையவை இருக்கும். [10] ஈரமான காலங்களில், பெண் மான்கள் பொதுவாக மந்தையை புற்களின் செழுமை உள்ள பகுதிகள் மற்றும் வேட்டையாடிகளைத் தவிர்க்கக்கூடிய பகுதிகளை நோக்கி அழைத்துச் செல்லும். புதிதாகப் பிறந்த குட்டிகள் உயிர்வாழ்வதற்கான அதிக வாய்ப்புகள் இருப்பதையும், அதிக சத்தான பாலைப் பெறுவதையும் இது உறுதிப்படுத்துகிறது. [10]

கிடாக்கள் தங்கள் பிரதேசத்தின் எல்லைகளை சாணக் குவியல்கள், அவற்றின் வாசனை சுரப்பிகள் மற்றும் சில நடத்தைகள் மூலம் குறிக்கின்றன. ஒரு பிராந்தியத்தை ஆதிக்கும் செலுத்தும் ஆண் மான் பயன்படுத்தப்படும் உடல் மொழியானது நிமிர்ந்த தோரணையுடன் நிற்பது, அடிக்கடி சாணமிடுதல், உருட்டல் மற்றும் ஒலித்தல் மற்றும் "கா-நூ" என்ற ஒலியை எழுப்புதல் ஆகும். [11]

உணவுமுறை[தொகு]

நீலக் காட்டுமான்கள் ஒரு தாவர உண்ணி ஆகும். இது பொதுவாக வெட்டவெளியில் வளரும் குறுகிய புற்களையும், சவன்னா புல்வெளிகளிலும் சமவெளிகளிலும் காணப்படும் கார மண்ணையும் முதன்மையாக உண்ணும். இந்த விலங்குக்கு உள்ள அகன்ற வாய் அதிக அளவு குட்டையான புல்லை உண்ண ஏற்றதாக உள்ளது. [11] மேலும் இது இரவும் பகலும் மேய்கிறது. புல் பற்றாக்குறையாக இருக்கும் போது, இது புதர்கள் மற்றும் மரங்களின் தழைகளை உண்ணும். [7] பொதுவாக காட்டுமான்கள் இருக்கிமிடத்தில் சமவெளி வரிக்குதிரைகளும், தீக்கோழிகளும் காணப்படுகின்றன. ஒன்றுக்கொன்று அதிமகாக ச்ண்டையிடாம்ல ஒற்றுமையாக வாழ்கின்றன. முடிந்தவரை, காட்டுமான் நாள்தோறும் இருமுறை நீரருந்த விரும்புகிறது.[6]மேலும் இதன் வழக்கமான நீர் தேவை காரணமாக, இது பொதுவாக ஈரமான புல்வெளிகள் மற்றும் நீர் ஆதாரங்கள் உள்ள பகுதிகளில் வசிக்கிறது. நீலக் காட்டுமான் ஒன்று முதல் இரண்டு நாட்களில் 9 முதல் 12 லிட்டர் தண்ணீர் குடிக்கும். [12] இவ்வாறு இருந்தபோதிலும், இவை வறண்ட கலகாரி பாலைவனத்திலும் வாழக்கூடியனவாக உள்ளன. அங்கு முலாம்பழம் மற்றும் தண்ணீரை சேமிக்கும் வேர்கள் மற்றும் கிழங்குகளிலிருந்து போதுமான தண்ணீரைப் பெறுகின்றன. [11]

இனப்பெருக்கம்[தொகு]

இரண்டு ஆண் நீலக் காட்டுமான்கள் தங்கள் ஆதிக்கத்திற்காக போராடுகின்றன
ஒரு பெண் மானும், அதன் குட்டியும்

ஆண் நீல காட்டுமான்கள் சுமார் 2 வயதில் பாலியல் முதிர்ச்சியடைகின்றன. அதே சமயம் பெண் மான்களுக்கு போதுமான ஊட்டச்சத்து இருந்தால் அவற்றால் 16 மாதங்களில் கருத்தரிக்க முடியும். [7] இனச்சேர்க்கை காலம், சுமார் 3 வாரங்கள் நீடிக்கும். இது மழைக்காலம் முடியும் காலத்தோடு ஒத்துப்போகிறது. இதன் பொருள் விலங்குகள் நல்ல நிலையில் இருப்பதும், உண்ண அதிக சத்தான புதிதாக வளர்ந்த புற்கள் கிடைப்பதும் ஆகும். இனச்சேர்க்கை காலம், அல்லது பாலுணர்வு எழுச்சியானது, பொதுவாக முழு நிலவின் இரவில் தொடங்குகிறது. இதற்கு காரணம் சந்திர சுழற்சி இனப்பெருக்கத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று கருதப்படுகிறது. இந்த நேரத்தில், ஆண் மான்களில் ஆண்மையியக்குநீர் உற்பத்தி உச்சத்தை அடைகிறது. இதன் விளைவாக பாலுறவுக்கான அழைப்பு மற்றும் நடத்தை அதிகரிக்கிறது. இந்த நேரத்தில் பாலுறவுக்காக ஆன் மான்கள் உற்சாக செயல்பாடுகள் பெண் மானை சினைப்பருவச் சுழற்சிக்குள் வரத் தூண்டும். [11]

ஆண்மான்கள் பெண் மான்களுக்காக போட்டியிடும்போது அவற்றுக்கிடையில் போட்டி ஏற்படுகிறது. அவை மோதும்போது, முழங்கால்களை வளைத்து ஒன்றொயொன்று எதிர்கொண்டு, கொம்புகளால் மோதுகின்றன. இறுதியில் தனது ஆதிக்கத்தை நிறுவியதும், ஒவ்வொரு ஆண் மானும் பெண் மானை தனது களத்திற்குள் இழுக்க முயற்சி செய்கிறன. [13] ஆண் மான் விரைவில் பெண் மானுடன் உறவு கொள்ள முயற்சி செய்கிறது. அதை ஏற்றுக்கொள்ளும் பெண் மான் தன் வாலை ஒரு பக்கமாக ஒதுக்கிக் கொண்டு, புணர்தல் நடைபெறும் போது அசையாமல் நின்று ஒத்துழைப்பு அளிக்கும். இனச்சேர்க்கை மீண்டும் மீண்டும் பல முறை நடக்கும். ஒரு நிமிடத்திற்குள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட முறை நடைபெறக்கூடும். ஒரு பெண் மான் தனது பிரதேசத்தில் இருக்கும்போது ஆண் மான் சாப்பிடுவதில்லை, ஓய்வெடுப்பதில்லை, இந்த நேரத்தில், பெண் மான் ஆண் மானுடன் நெருக்கமாக இருக்கும். அடிக்கடி தனது தலையை கிடாயின் உடற்பகுதியில் தேய்த்து, அதன் ஆணுறுப்பை முகர்ந்து பார்க்கும். இணச்சேர்க்கைப் பருவத்தில், ஒரு பெண் மான் பல பிரதேசங்களுக்குச் சென்று பல்வேறு ஆண் மான்களுடன் இணையக்கூடும். [11]

இவற்றின் கர்ப்ப காலம் சுமார் 8.5 மாதங்கள் ஆகும். பெண் காட்டுமான்கள் தனியாகப் போய் பிரசவிக்காமல் கூட்டத்தின் நடுவில் பிரசவிக்கின்றன. இது பொதுவாக பகலின் நடுப்பகுதியில் நடகும். இது இரவு வருவதற்கு முன்பு புதிதாகப் பிறந்த குட்டி எழுந்து நின்று நடக்கத் தேவையான நேரத்தை அளிக்கிறது. ஏனென்றால் வேட்டையாடிகள் இரவு நேரத்தில் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும். குட்டிகள் எடை பிறக்கும் சுமார் 19 கிலோ இருக்கும். மேலும் பொதுவாக பிறந்த சில நிமிடங்களில் தாங்களாகவே எழுந்து நிற்கும். வேட்டையாடிகளிடமிருந்து இருந்து தப்பிக்க, கன்றுகள் குறிப்பிடத்தக்க நேரம் தங்கள் தாயுடன் நெருக்கமாக இருக்கும், மேலும் அடுத்த ஆண்டு கன்று ஈனும் வரை குட்டிகள் பால்குடிக்கும். ஆண் குட்டிகள் சுமார் 8 மாதங்களில் தாயை விட்டு வெளியேறி மற்ற ஆண் குட்டிகளின் சேர்ந்து மந்தைகளை உருவாக்குகின்றன. பெரிய பெண் மந்தைகளில், 80% காட்டுமான் சந்ததிகள் முதல் மாதத்தில் உயிர் பிழைக்கின்றன, சிறிய கூட்டங்களில் 50% குட்டிகள் தப்பிப் பிழைக்கின்றன. [11] [13]

குறிப்புகள்[தொகு]

 1. IUCN SSC Antelope Specialist Group (2016). "Connochaetes taurinus". IUCN Red List of Threatened Species 2016: e.T5229A163322525. doi:10.2305/IUCN.UK.2016-2.RLTS.T5229A163322525.en. https://www.iucnredlist.org/species/5229/163322525. பார்த்த நாள்: 11 November 2021. 
 2. Voeten, Margje M.; Van De Vijver, Claudius A.D.M.; Olff, Han; Van Langevelde, Frank (2010-03-01). "Possible causes of decreasing migratory ungulate populations in an East African savannah after restrictions in their seasonal movements" (in en). African Journal of Ecology 48 (1): 169–179. doi:10.1111/j.1365-2028.2009.01098.x. பன்னாட்டுத் தர தொடர் எண்:1365-2028. https://www.rug.nl/research/portal/files/6741720/2010AfrJEcolVoeten.pdf. 
 3. Pickering, J. (October 1997). "William J. Burchell's South African mammal collection, 1810–1815". Archives of Natural History 24 (3): 311–26. doi:10.3366/anh.1997.24.3.311. பன்னாட்டுத் தர தொடர் எண்:0260-9541. 
 4. Benirschke, K.. "Wildebeest, Gnu". Comparative Placentation. http://placentation.ucsd.edu/gnu.html. 
 5. Corbet, S.W.; Robinson, T.J. (1991). "Genetic divergence in South African Wildebeest: comparative cytogenetics and analysis of mitochondrial DNA". The Journal of Heredity 82 (6): 447–52. doi:10.1093/oxfordjournals.jhered.a111126. பப்மெட்:1795096. 
 6. 6.0 6.1 6.2 6.3 6.4 6.5 6.6 Huffman, B.. "Connochaetes taurinus : Brindled gnu, Blue wildebeest". Ultimate Ungulate. http://www.ultimateungulate.com/Artiodactyla/Connochaetes_taurinus.html. 
 7. 7.0 7.1 7.2 7.3 Geraci, G.. "Connochaetes taurinus : Blue wildebeest". Animal Diversity Web. http://animaldiversity.ummz.umich.edu/accounts/Connochaetes_taurinus/. 
 8. "Wildebeest | National Geographic". 11 November 2010. https://www.nationalgeographic.com/animals/mammals/b/blue-wildebeest/. 
 9. "Wildebeest (Connochaetes taurinus)". National Geographic. http://animals.nationalgeographic.co.in/animals/mammals/wildebeest/. 
 10. 10.0 10.1 Talbot, L. M.; Talbot, M. H. (1963). Wildlife Monographs:The Wildebeest in Western Masailand, East Africa. National Academies. பக். 20–31. https://www.jstor.org/stable/3830455. 
 11. 11.0 11.1 11.2 11.3 11.4 11.5 Estes, R. D. (2004). The Behavior Guide to African Mammals: Including Hoofed Mammals, Carnivores, Primates (4th ). Berkeley: University of California Press. பக். 150–6. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-520-08085-0. https://books.google.com/books?id=g977LsZHpcsC. Estes, R. D. (2004).
 12. Furstenburg, Deon (March 2013). "Focus on the Blue Wildebeest (Connochaetes taurinus)". South African Hunter (South Africa: SA Hunter). https://www.researchgate.net/publication/316154370. 
 13. 13.0 13.1 Moss, C. (1982). Portraits in the Wild: Behavior studies of East African mammals. Boston: Houghton Mifflin Company. பக். 167. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-226-54233-1. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=நீலக்_காட்டுமான்&oldid=3626837" இருந்து மீள்விக்கப்பட்டது