உள்ளடக்கத்துக்குச் செல்

சுவாமி சிமரணானந்தா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுவாமி ஸ்மரணானந்தா
Swami Smaranananda
சுவாமி சிமரணானந்தா (இராமகிருட்டிண இயக்கத்தின் 16-ஆவது தலைவர்)
பிறப்பு1929 (1929)
அண்டமி, தஞ்சாவூர் மாவட்டம், சென்னை மாகாணம், இந்தியா
இறப்பு (அகவை 94)[1]
விவேகானந்தா மருத்துவ அறிவியல் நிறுவனம், கொல்கத்தா, கொல்கத்தா, மேற்கு வங்காளம், இந்தியா
சமயம்இந்து சமயம்
தத்துவம்வேதாந்தம்
குருசுவாமி சங்கரானந்தா

சுவாமி சிமரணானந்தா (Swami Smaranananda, 1929 – 26 மார்ச் 2024) இராமகிருட்டிண மடம், இராமகிருசுண இயக்கம் ஆகியவற்றின் இந்திய மூத்த துறவியும், அவ்வியக்குத்தின் 16-ஆவது தலைவரும் ஆவார்.[2][3][4][5] இவர் 1952 இல் இராமகிருட்டிண இயக்கத்தில் சேர்ந்தார், 2027 சூலை 17 அன்று அதன் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[6][7][8]

தொடக்க வாழ்க்கை

[தொகு]

சிமரணானந்தா 1929 ஆம் ஆண்டு இந்தியாவின் தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டம், அண்டமி என்ற ஊரில் ஒரு தமிழ் இந்துக் குடும்பத்தில் கூட்டு அடையாளத்துடன் பிறந்தார். இவர் அவரது அத்தையால் வளர்க்கப்பட்டார். 1946-இல் சென்னையில் மேல்நிலைப் பள்ளியை முடித்தார்[9]

சமயப் பணி

[தொகு]

சிமரணானந்தா 1952-இல் சுவாமி சங்கரானந்தாவிடமிருந்து தீட்சை பெற்றார், அதே ஆண்டு இராமகிருட்டிண மடத்தின் மும்பை மையத்தில் சேர்ந்தார். இவருக்கு 1956 இல் பிரம்மச்சரியம், 1960-இல் சன்னியாசம் ஆகிய இரண்டும் சுவாமி சங்கரானந்தாவால் வழங்கப்பட்டது.[6]

1958-இல், இவர் கொல்கத்தாவில் உள்ள அத்வைத ஆசிரமத்தில் பணியமர்த்தப்பட்டார், சுவாமி விவேகானந்தரால் நிறுவப்பட்ட ஆங்கில இதழான பிரபுத்த பாரதம் இதழின் உதவி ஆசிரியராக சில ஆண்டுகள் உட்பட பல்வேறு பதவிகளில் 18 ஆண்டுகள் பணியாற்றினார். 1976-ஆம் ஆண்டில், பேலூர் மடத்திற்கு அடுத்ததாக அமைந்துள்ள இராமகிருஷ்ணா மடத்தின் சாரதாபிதா என்ற பெரிய கல்வி நிறுவனத்தின் செயலாளராக ஆனார், அங்கு அவர் கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் பணியாற்றினார். 1991-இல், சென்னை இராமகிருட்டிண மடத்தின் தலைவராக ஆனார்.[10]

1983-இல், இராமகிருஷ்ண மடத்தின் அறங்காவலராகவும், இராமகிருஷ்ண இயக்கத்தின் நிர்வாகக் குழு உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டார். 1997-இல், அமைப்பின் பொதுச் செயலாளராகவும், பின்னர் 2007-இல் அதன் துணைத் தலைவராகவும் ஆக்கப்பட்டார்.[6]

இயக்கத்தின் 15-ஆவது தலைவரான சுவாமி ஆத்மஸ்தானந்தா, 2017 சூன் 18 அன்று இறந்ததை அடுத்து, அவ்வியக்கத்தின் மிகவும் மூத்த துணைத் தலைவராக இருந்த சுவாமி சிமரனானந்தா , 2027 சூலை 17 அன்று தலைவர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[6]

மறைவு

[தொகு]

சுவாமிகள் 2024 மார்ச் 26 அன்று, தனது 94-ஆவது அகவையில் காலமானார்.[11]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Ramakrishna Mission president Swami Smaranananda dies at 95, PM Modi pays tribute". The Times of India. 27 March 2024. Archived from the original on 27 March 2024. பார்க்கப்பட்ட நாள் 27 March 2024.
  2. "রামকৃষ্ণ মঠ ও মিশনের ষোলোতম অধ্যক্ষ হলেন স্বামী স্মরণানন্দ". Zee News India (in Bengali). 17 July 2017. Archived from the original on 14 January 2018. பார்க்கப்பட்ட நாள் 13 January 2018.
  3. "RKM helm to see a 'generational' change". The Times of India. 17 July 2017. Archived from the original on 7 September 2017. பார்க்கப்பட்ட நாள் 12 January 2018.
  4. "Swami Smaranananda new president of Ramakrishna Mission - City News - observerbd.com". observerbd.com. Archived from the original on 14 January 2018. பார்க்கப்பட்ட நாள் 12 January 2018.
  5. "News Details". Bangladesh Sangbad Sangstha(BSS). 18 July 2017. Archived from the original on 14 January 2018. பார்க்கப்பட்ட நாள் 12 January 2018.
  6. 6.0 6.1 6.2 6.3 "RKM gets its 16th head". The Telegraph. Archived from the original on 14 January 2018. பார்க்கப்பட்ட நாள் 12 January 2018.
  7. The New Nation (12 January 2018). "Swami Smaranananda new president of Ramakrishna Mission". The New Nation. Archived from the original on 14 January 2018. பார்க்கப்பட்ட நாள் 12 January 2018.
  8. "হৃদয়ে রামকৃষ্ণ, আচরণে কর্মযোগী". Anandabazar Patrika (in Bengali). 18 July 2017. Archived from the original on 14 January 2018. பார்க்கப்பட்ட நாள் 13 January 2018.
  9. "রামকৃষ্ণ মঠ ও মিশনের নতুন অধ্যক্ষ পদে দায়িত্ব নিলেন স্বামী স্মরণানন্দ". Anandabazar Patrika. 21 July 2017. Archived from the original on 29 October 2017. பார்க்கப்பட்ட நாள் 13 January 2018.
  10. "রামকৃষ্ণালোকে স্বামী স্মরণানন্দ - Swami Smaranananda Maharaj". ETV Bharat. 26 March 2024 இம் மூலத்தில் இருந்து 27 March 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240327184855/https://www.etvbharat.com/bn/!state/swami-smaranananda-president-of-belur-ramakrishna-math-passes-away-in-kolkata-wbs24032607022. 

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுவாமி_சிமரணானந்தா&oldid=3918049" இலிருந்து மீள்விக்கப்பட்டது