விரிந்த குடும்பம்
Appearance
கணவன், மனைவி, அவர்களுடைய பிள்ளைகள், பிள்ளைகளுடைய மனைவிமார்கள், அவர்களுடைய பிள்ளைகள் என எல்லோரும் ஒரே வீட்டில் வாழ முற்படும் போது விரிந்த குடும்பம் (Extended Family) தோன்றுகின்றது. விரிந்த குடும்பமொன்றின் உறுப்பினர்களின் தொடர்பு நிலைகளையொட்டி அது பல்வேறு வகைகளாகப் பிரிக்கப்படலாம்.
- 1. நேர்வழி விரிந்த குடும்பம்
- 2. கிளைவழி விரிந்த குடும்பம்
- 3. தந்தைவழி விரிந்த குடும்பம்
- 4. தாய்வழி விரிந்த குடும்பம்
- 5. கூட்டுக் குடும்பம்
என்பன இவ்வகைகளுள் சிலவாகும்.
அருஞ்சொற்பொருள்
[தொகு]- நேர்வழி விரிந்த குடும்பம் - Lineally Extended Family
- கிளைவழி விரிந்த குடும்பம் - Laterally Extended Family
- தந்தைவழி விரிந்த குடும்பம் - Patrilineal Extended Family
- தாய்வழி விரிந்த குடும்பம் - Matrilineal Extended Family
- கூட்டுக் குடும்பம் - Joint Family