விவேகானந்தா மருத்துவ அறிவியல் நிறுவனம், கொல்கத்தா
இராமகிருட்டிணா மிசன் சேவை நிறுவனம் | |
வகை | அறக்கட்டளை |
---|---|
உருவாக்கம் | 1963 |
சார்பு | மேற்கு வங்க சுகாதார அறிவியல் பல்கலைக்கழகம்; தேசிய மருத்துவத் தேர்வுகள் வாரியம் |
தலைவர் | நீதிபதி சித்ததோசு முகர்ச்சி |
மாணவர்கள் | மொத்தம்:
|
அமைவிடம் | 22°31′24″N 88°21′07″E / 22.523358°N 88.351911°E |
வளாகம் | நகர்ப்புறம் |
இணையதளம் | www |
விவேகானந்தா மருத்துவ அறிவியல் நிறுவனம் (Vivekananda Institute of Medical Sciences, Kolkata) இந்தியாவின் கொல்கத்தா சரத் போசு சாலையில் உள்ள ஒரு மருத்துவ நிறுவனம் மற்றும் மருத்துவமனை ஆகும். இது இராமகிருட்டிண மடம் மற்றும் ராமகிருட்டிணா அறக்கட்டளையின் கீழ் செயல்படுகிறது. சாரதா தேவியின் சீடரான சுவாமி தயானந்தால் 1932ஆம் ஆண்டு சூலை மாதம் சிசுமங்கல் பிரதிசுடானம், மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனையாக இது தொடங்கப்பட்டது.[1] [2]
சுவாமி தயானந்தா (பிறப்பு விமல்) ராமகிருட்டிண மடம் மற்றும் ராமகிருட்டிணா அறக்கட்டளையின் (1962-1965) ஒன்பதாவது தலைவரான சுவாமி மாதவானந்தாவின் இளைய சகோதரர் ஆவார்.[3] 1956ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட சிகிச்சையகம் தற்போதைய மருத்துவமனைக்கு வழி வகுத்தது. இன்று இந்நிறுவனம் 600 படுக்கைகள் கொண்ட பொது மருத்துவமனை, மா சாரதா செவிலியர் பள்ளி, விவேகானந்தா மருத்துவ அறிவியல் கழகம், கிராமப்புறங்களில் நடமாடும் சுகாதார அலகுகள் மற்றும் சமூக சுகாதார சேவைகள் என பல அமைப்புகளுடன் செயல்படுகிறது.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Ramakrishna Mission Shishumangal Pratishthan". Doctor NDTV. Archived from the original on 2014-02-22. பார்க்கப்பட்ட நாள் 2014-02-13.
- ↑ 2.0 2.1 "Seva Pratishthan Branch of the Ramakrishna Math and Ramakrishna Mission". Ramakrishna Math and Ramakrishna Mission. பார்க்கப்பட்ட நாள் 2014-02-13.
- ↑ "The Presidents of Ramakrishna Order". Vedanta Society of St. Louis - A Branch of The Ramakrishna Order of India. Archived from the original on 2014-02-22. பார்க்கப்பட்ட நாள் 2014-02-13.