உள்ளடக்கத்துக்குச் செல்

சுலாவெசி பருந்து கழுகு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுலாவெசி பருந்து கழுகு
இளம் பறவை
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
நிசேட்டசு
இனம்:
நி லான்சியோலேட்டசு
இருசொற் பெயரீடு
நிசேட்டசு லான்சியோலேட்டசு[2]
வேறு பெயர்கள்

பைசேயடசு லான்சியோலேட்டசு

சுலாவெசி பருந்து கழுகு (Sulawesi hawk-eagle -நிசேட்டசு லான்சியோலேட்டசு)(முன்பு இசுபிசைட்டசு பேரினத்தின் கீழ் வைக்கப்பட்டிருந்தது.[2] இது செலிபிசு பருந்து கழுகு என்றும் அழைக்கப்படுகிறது.

விளக்கம்

[தொகு]

சுலாவெசி பருந்து கழுகு ஒரு நடுத்தர அளவிலான, தோராயமாக 64 cm (25 அங்) செமீ (25 அங்குலம்) நீளமுள்ள, அசிப்பிட்ரிடே குடும்பத்தைச் சேர்ந்த பழுப்பு நிறக் கொன்றுண்ணிப் பறவை ஆகும். முதிர்ச்சியடைந்த கழுகுகள் செம்பழுப்பு நிறத்தில் குறியிடப்பட்ட தலையினையும் மார்பு இறகுகளையும் கொண்டுள்ளது. இதன் மார்பு இறகுகளுடன் அடர்-பழுப்பு நிற இறகுகளுடன் கீழே கருப்பு-வெள்ளை நிறத்தில் உள்ளன. இளம் கழுகுகளின் தலையும் அடிப்பகுதியும் வெள்ளை நிறத்தில் காணப்படும்.

வாழிடமும் உணவும்

[தொகு]

இந்தோனேசியாவில் அகணிய உயிரியாகக் காணப்படும் சுலாவேசி பருந்து கழுகு, சுலாவேசி மழைக்காடுகள் மற்றும் அதன் துணைத் தீவுகளான பூட்டன், முனா, பங்காய் மற்றும் சூலா தீவுகளில் காணப்படுகின்றன. இங்கு முக்கியமாகப் பறவை, பல்லி, பாம்பு மற்றும் பாலூட்டிகளை உணவாக உண்ணுகின்றன.

இதன் வாழிட வரம்பு முழுவதும் பரவலாக, சுலவேசி பருந்து கழுகு காணப்படுகிறது. பன்னாட்டு இயற்கை வரலாற்றுச் சங்கத்தின் செம்பட்டியலில் தீவாய்ப்புக் கவலை குறைந்த இனமாக மதிப்பிடப்பட்டுள்ளது.[1] இது பன்னாட்டு வர்த்தகத்தின் அச்சுறுத்தல்களிலிருந்து அழிந்து வரும் தாவரங்கள் மற்றும் விலங்குகளைப் பாதுகாப்பதற்கான பலதரப்பு ஒப்பந்த பின் இணைப்பு II இல் பட்டியலிடப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Nisaetus lanceolatus
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=சுலாவெசி_பருந்து_கழுகு&oldid=4068626" இலிருந்து மீள்விக்கப்பட்டது