உள்ளடக்கத்துக்குச் செல்

சுருள்வு அணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கணிதத்தில் சுருள்வு அணி அல்லது சுருள் அணி (involutory matrix) என்பது தனக்குத்தானே நேர்மாறு அணியாக உள்ள ஒரு அணியாகும். A2 = I ஆக இருந்தால், இருந்தால் மட்டுமே, A அணியால் பெருக்குவது ஒரு சுருள்வாக இருக்கும். ஒரு அணி மற்றும் அதன் நேர்மாறு அணி இரண்டின் பெருக்கல் முற்றொருமை அணியாக இருக்கும் என்பதால், சுருள்வு அணிகள் எல்லாம் முற்றொருமை அணியின் வர்க்கமூலங்களாக (அணிகளின் வர்க்கமூலம்) அமையும்.[1]

எடுத்துக்காட்டுகள்

[தொகு]

எனில், மெய்யெண்களாலான 2 × 2 அணி ஒரு சுருள்வு அணியாக இருக்கும். [2]

சுருள்வு அணிகளுக்கு எடுத்துக்காட்டுகள்:

இவற்றில்,

I முற்றொருமை அணி
R -ஒரு சோடி நிரல்கள் பரிமாற்றப்பட்ட முற்றொருமை அணி

சமச்சீர்

[தொகு]

ஒரு சுருள்வு அணியானது சமச்சீர் அணியாகவும் இருந்தால் அவ்வணி ஒரு செங்குத்து அணியாகவும் இருக்கும். மறுதலையாக செங்குத்து அணியாகவும் உள்ள ஒவ்வொரு சுருள்வு அணியும் சமச்சீர் அணியாகவும் இருக்கும்.[3] இதன் சிறப்புவகையாக ஒவ்வொரு எதிரொளிப்பு அணியும் சுருள்வு அணியாக இருக்கும்.

பண்புகள்

[தொகு]
  • எந்தவொரு களத்திலமைந்த சுருள்வு அணிக்கும் அதன் அணிக்கோவை மதிப்பு ±1 ஆக இருக்கும்.[4]
  • ½(A + I) என்பது ஒரு தன்னடுக்கு அணியாக இருந்தால், இருந்தால் மட்டுமே, n × n வரிசையணி A ஒரு சுருள்வு அணியாகும். இதனால் சுருள்வு அணிகளுக்கும் தன்னடுக்கு அணிகளுக்கும் இடையே ஒரு இருவழிக்கோப்பு அமைகிறது.[4]
  • A , B இரு சுருள்வு அணிகள் மற்றும் AB = BA ஆக இருந்தால், AB அணியும் சுருள்வு அணியாகும்.
  • A ஒரு சுருள்வு அணி எனில் அதன் ஒவ்வொரு அடுக்கும் சுருள்வு அணியாக இருக்கும். :n ஒற்றை எண் எனில், An = A
n இரட்டை எண் எனில், An = I

மேற்கோள்கள்

[தொகு]
  1. Higham, Nicholas J. (2008), "6.11 Involutory Matrices", Functions of Matrices: Theory and Computation, Philadelphia, PA: Society for Industrial and Applied Mathematics (SIAM), pp. 165–166, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1137/1.9780898717778, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-89871-646-7, MR 2396439.
  2. Peter Lancaster & Miron Tismenetsky (1985) The Theory of Matrices, 2nd edition, pp 12,13 Academic Press பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-12-435560-9
  3. Govaerts, Willy J. F. (2000), Numerical methods for bifurcations of dynamical equilibria, Philadelphia, PA: Society for Industrial and Applied Mathematics (SIAM), p. 292, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1137/1.9780898719543, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-89871-442-7, MR 1736704.
  4. 4.0 4.1 Bernstein, Dennis S. (2009), "3.15 Facts on Involutory Matrices", Matrix Mathematics (2nd ed.), Princeton, NJ: Princeton University Press, pp. 230–231, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-691-14039-1, MR 2513751.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுருள்வு_அணி&oldid=2696993" இலிருந்து மீள்விக்கப்பட்டது