சுமலதா
Appearance
சுமலதா | |
---|---|
சுமலதா | |
பிறப்பு | ஆகத்து 27, 1963 சென்னை |
மற்ற பெயர்கள் | சுமலதா அம்பரீஷ் |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 1979 - தற்போது |
வாழ்க்கைத் துணை | அம்பரீஷ் |
சுமலதா (பிறப்பு 27 ஆகஸ்ட் 1963) இந்தியத் திரைப்பட நடிகை மஞ்சுளா ஆவார். இவர் இருநூற்றிற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தெலுங்குத் திரைப்படங்கள், மலையாளத் திரைப்படங்கள், கன்னடத் திரைப்படங்கள் மற்றும் இந்தித் திரைப்படங்கள் ஆகியவற்றில் நடித்துள்ளார்.
வரலாறு
[தொகு]இவர் தமிழ்நாட்டில் உள்ள சென்னையில் 1963 இல் பிறந்தவர். மலையாளத் திரைப்படத்துறையில் புகழ்பெற்ற இவர், கன்னடத் திரைப்பட நடிகரான அம்பரீஷை திருமணம் செய்து கொண்டார். தற்போது பெங்களூரில் வசிக்கின்றார்.
திரைப்படங்கள்
[தொகு]தமிழ்
[தொகு]- கரையெல்லாம் செண்பகப்பூ (1981) (தமிழ்)
- குடும்பம் ஒரு கதம்பம் (1981) (தமிழ்)
- முரட்டுக் காளை (1980) (தமிழ்)
- ஒரு ஓடை நதியாகிறது (1983) (தமிழ்)
அரசியல்
[தொகு]பாரதிய ஜனதா கட்சி ஆதரவுடன், சுயேட்சை வேட்பாளரான நடிகை சுமலதா, 2019 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், மண்டியா மக்களவைத் தொகுதியிலிருந்து வென்றார்.[1]