சுப்ரதா பக்சி
சுப்ரதா பக்சி Subrata Bakshi | |
---|---|
2023 மார்ச்சு மாதத்தில் சுப்ரதா பக்சி | |
மாநிலங்களவை உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 3 ஏப்ரல் 2020 | |
முன்னையவர் | மணீசு குப்தா |
தொகுதி | மேற்கு வங்காள மாநிலங்களவை |
மேற்கு வங்காளத் தலைவர், அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 1 சனவரி 1998 | |
தலைவர் | மம்தா பானர்ச்சி |
பொதுப்பணித் துறை, மேற்கு வங்காள அரசு | |
பதவியில் 20 மே 2011 – 10 திசம்பர் 2011 | |
முன்னையவர் | கிட்டி கோசுவாமி |
பின்னவர் | சுதர்சன் கோசு தசுதிதர் |
தொகுதி | பபானிபூர் |
போக்குவரத்து துறை, மேற்கு வங்காள அரசு | |
பதவியில் 20 மே 2011 – 10 திசம்பர் 2011 | |
முன்னையவர் | இரஞ்சித்து குந்து |
பின்னவர் | மதன் மித்ரா |
தொகுதி | பபானிபூர் |
சட்டமன்ற உறுப்பினர், மேற்கு வங்காள சட்டமன்றம் | |
பதவியில் 13 மே 2011 – 10 திசம்பர் 2011 | |
முன்னையவர் | காலிகட்டு |
பின்னவர் | மம்தா பானர்ச்சி |
தொகுதி | பபானிபூர் |
பதவியில் 2006–2011 | |
முன்னையவர் | சுபத்ரா முகர்ச்சி |
பின்னவர் | சிகா மித்ரா |
தொகுதி | சௌராங்கீ தொகுதி |
பதவியில் 2001–2006 | |
முன்னையவர் | சங்கர் சரண் சர்க்கார் |
பின்னவர் | இரத்தின் சர்க்கார் |
தொகுதி | மேற்கு விசுணுப்பூர் தொகுதி |
தேசிய பொதுச் செயலாளர், அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு | |
பதவியில் 2015–2021 | |
முன்னையவர் | முகுல் ராய் |
பின்னவர் | அபிசேக்கு பானர்ச்சி |
இந்திய மக்களவை உறுப்பினர் | |
பதவியில் 4 திசம்பர் 2011 – 23 மே 2019 | |
முன்னையவர் | மம்தா பானர்ச்சி |
பின்னவர் | மாலா ராய் |
தொகுதி | கொல்கத்தா தக்சின் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 23 சூலை 1950 கொல்கத்தா, மேற்கு வங்காளம், India |
அரசியல் கட்சி | அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு(1998-முதல்) |
பிற அரசியல் தொடர்புகள் | இந்திய தேசிய காங்கிரசு (1998 ஆம் ஆண்டிற்கு முன்) |
துணைவர் | சகானா பக்சி (1992) |
பிள்ளைகள் | 1 (மகன்) |
வாழிடம்(s) | கொல்கத்தா, புது தில்லி |
முன்னாள் கல்லூரி | கொல்கத்தா பல்கலைக்கழகம் - (இளம் அறிவியல்., சட்டம்) |
தொழில் | |
As of 15 மார்ச்சு 2021 மூலம்: [1] |
சுப்ரதா பக்சி (Subrata Bakshi) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1950 ஆம் ஆண்டு சூலை மாதம் 23 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். தற்போது மேற்கு வங்காளத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு நாடாளுமன்ற, மாநிலங்களவை உறுப்பினராக பணியாற்றுகிறார். அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு கட்சியின் பொதுச் செயலாளராகவும், மேற்கு வங்க திரிணாமுல் காங்கிரசு கட்சியின் மாநிலத் தலைவராகவும் உள்ளார். 2011-ஆம் ஆண்டு மேற்கு வங்க மாநிலத்தில் பொதுப்பணித்துறை அமைச்சராகவும், போக்குவரத்து துறை அமைச்சராகவும் இருந்தார். 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற மேற்கு வங்க மாநில சட்டமன்றத் தேர்தலில் பபானிபூர் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார். [1] [2]
மேற்கு வங்க சட்டமன்ற உறுப்பினராக மம்தா பானர்ச்சி பதவி விலகிய பின்னர் இவர் தெற்கு கொல்கத்தா தொகுதியில் இருந்து நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2011 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 10 ஆம் தேதியன்று 2,30,999 வாக்குகள் வித்தியாசத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் 2014 ஆம் ஆண்டிலும் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.