சுனேத்திரா குப்தா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுனேத்திரா குப்தா
பிறப்பு1965 (அகவை 58–59)
பணியிடங்கள்ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம்
லண்டன் இம்பீரியல் கல்லூரி
ஆய்வேடுதொற்றுநோய் மற்றும் தொற்று நோய்களின் பரிமாற்ற இயக்கவியல் (1992)
விருதுகள்ரோசலின்ட் ஃப்ரான்க்ளின் விருது
சாகித்திய அகாதமி விருது
இணையதளம்
www.sunetragupta.com
www.zoo.ox.ac.uk/people/view/gupta_s.htm

சுனேத்திரா குப்தா (Sunetra Gupta) (பிறப்பு மார்ச்சு 15, 1965)[2] ஒரு எழுத்தாளர் மற்றும் நோய்ப்பரவலியல் கோட்பாடு குறித்து விளக்கும் பேராசிரியராக ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில் பணியாற்றுகிறார். இவருடைய விருப்பம், மலேரியா, எச்.ஐ.வி, இன்ஃபுளுவென்சா மற்றும் மூளையுறை அழற்சி போன்ற நோய்களை உண்டாக்கக்கூடிய கிருமிகளைப் பற்றி ஆய்வு செய்வதாகும்.[3][4][5][6][7][8] இவர் சாகித்திய அகாதமி விருது பெற்றவர்.

கல்வி மற்றும் இளமைப்பருவம்[தொகு]

சுனேத்திரா குப்தா, இந்தியாவிலுள்ள கொல்கத்தாவில், துருபா மற்றும் மினாடி குப்தாவிற்கு மகளாகப் பிறந்தார். இவர் உயிரியல் படிப்பில் தேர்ச்சி பெற்று, இளங்கலைப் பட்டத்தை பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பெற்றார். மற்றும் முனைவர் பட்டத்தை லண்டன் இம்பீரியல் கல்லூரியில் பெற்றார்.[9]

தொழில் மற்றும் ஆய்வு[தொகு]

குப்தா தற்போது, [எப்போது?] ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம், விலங்கியல் துறையில் நோய்த் தொற்று அறிவியல் பேராசிரியர். இவர் 'பிரின்ஸ்டன் யுனிவர்சிட்டி பிரஸ்' ஐரோப்பிய ஆலோசனை வாரியத்தில் அமர்ந்துள்ளார்.[10]

இவர் தனது அறிவியல் ஆய்விற்காக, 'ஜியாலஜிகல் சொசைட்டி ஆஃப் லண்டன்' வழங்கிய அறிவியல் பதக்கம், மற்றும் அரச கழகம் ரோசலின்ட் ஃப்ரான்க்ளின் விருது பெற்றுள்ளார்.

ஜூலை 2013 இல் மேரி கியூரி போன்ற முன்னணி பெண் விஞ்ஞானியுடனான புகழ்பெற்ற அரச கழகத்தின் கோடைக்கால அறிவியல் கண்காட்சியின் போது குப்தாவின் ஓவியம் காட்சிக்கு வைக்கப்பட்டது. [11]

எழுத்துப் பணி[தொகு]

குப்தா பெங்காலியில் தனது முதல் படைப்புகளை எழுதினார். இரவீந்திரநாத் தாகூர் கவிதையின் மொழிபெயர்ப்பாளராக இருந்தார். ஆங்கிலத்தில் பல புதினங்களை எழுதி வெளியிட்டுள்ளார். அக்டோபர் 2012இல், இவரது ஐந்தாவது புதினமான சோ குட் இன் பிளாக் தெற்காசிய இலக்கியத்திற்கான டி.எஸ்.சி. பரிசுக்காக நீண்ட காலமாக பட்டியலிடப்பட்டது.[12]

இவரது புதினங்கள், சாகித்திய அகாதமி விருது, இலக்கிய விருது, போன்ற விருதுகளைப் பெற்றுள்ளன. இவரது புதினங்களில், "மெமொரிஸ் ஆஃப் ரெயின்", பெங்குயின் புக்ஸ் இந்தியா, புது தில்லி 1992, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-14-016907-2.
த கிளாஸ்ப்ளோயர்ஸ் பிரீத் (1993)
மூன்னைட் இன்டு மார்ஸிபன் (1995)
எ சின் ஆஃப் கலர் (1999)
சோ குட் இன் பிளாக் (2009) போன்றவை அடங்கும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Sunetra Gupta". The Life Scientific. அணுகப்பட்டது 18 January 2014.
  2. "Weekend Birthdays", தி கார்டியன், p. 51, 15 March 2014 {{citation}}: |access-date= requires |url= (help)
  3. Recker, M.; Pybus, O. G.; Nee, S.; Sunetra Gupta (2007). "The generation of influenza outbreaks by a network of host immune responses against a limited set of antigenic types". Proceedings of the National Academy of Sciences 104 (18): 7711–7716. doi:10.1073/pnas.0702154104. பப்மெட்:17460037. 
  4. Recker, M.; Nee, S.; Bull, P. C.; Kinyanjui, S.; Marsh, K.; Newbold, C.; Sunetra Gupta (2004). "Transient cross-reactive immune responses can orchestrate antigenic variation in malaria". Nature 429 (6991): 555–558. doi:10.1038/nature02486. பப்மெட்:15175751. 
  5. Sunetra Gupta; Snow, R. W.; Donnelly, C. A.; Marsh, K.; Newbold, C. (1999). "Immunity to non-cerebral severe malaria is acquired after one or two infections". Nature Medicine 5 (3): 340–343. doi:10.1038/6560. பப்மெட்:10086393. 
  6. Ferguson, N.; Anderson, R.; Sunetra Gupta (1999). "The effect of antibody-dependent enhancement on the transmission dynamics and persistence of multiple-strain pathogens". Proceedings of the National Academy of Sciences 96 (2): 790. doi:10.1073/pnas.96.2.790. 
  7. Buckee, C. O.; Jolley, K. A.; Recker, M.; Penman, B.; Kriz, P.; Sunetra Gupta; Maiden, M. C. J. (2008). "Role of selection in the emergence of lineages and the evolution of virulence in Neisseria meningitidis". Proceedings of the National Academy of Sciences 105 (39): 15082. doi:10.1073/pnas.0712019105. பப்மெட்:18815379. 
  8. http://www.bbc.co.uk/programmes/b01mw2d6 Sunetra Gupta on the Life Scientific
  9. Gupta, Sunetra (1992). Heterogeneity and the transmission dynamics of infectious diseases (PhD thesis). Imperial College London. வார்ப்புரு:EThOS.
  10. Princeton University Press, European Advisory Board பரணிடப்பட்டது 2011-06-08 at the வந்தவழி இயந்திரம்
  11. "Indian woman scientist's portrait to be exhibited in Britain". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா இம் மூலத்தில் இருந்து 2013-07-25 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130725040146/http://articles.timesofindia.indiatimes.com/2013-07-21/nri-achievers/40708277_1_indian-woman-scientist-image-problem-calcutta. பார்த்த நாள்: 1 September 2013. 
  12. "biography". Sunetra Gupta. பார்க்கப்பட்ட நாள் 1 September 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுனேத்திரா_குப்தா&oldid=3245372" இலிருந்து மீள்விக்கப்பட்டது