உள்ளடக்கத்துக்குச் செல்

சுதா சிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுதா சிங்
தனித் தகவல்கள்
முழுப் பெயர்சுதா சிங்
தேசியம்இந்தியர்
பிறந்த நாள்25 சூன் 1986 (1986-06-25) (அகவை 38)
பிறந்த இடம்ரேபரேலி, உத்தரப் பிரதேசம், இந்தியா
உயரம்1.58 மீ (5 அடி 2 அங்)
எடை45 கிலோ (99 பவு)
விளையாட்டு
நாடுஇந்தியா
விளையாட்டுதட கள விளையாட்டுக்கள்
நிகழ்வு(கள்)3000 மீட்டர்கள் பலதடை ஓட்டம்
சங்கம்தொடருந்து நிறுவனம்
சாதனைகளும் பட்டங்களும்
தன்னுடைய சிறப்பானவை9:26:55 (சாங்காய் 2016)
 
பதக்கங்கள்
நாடு  இந்தியா
பெண்கள் தடகள விளையாட்டு
ஆசிய விளையாட்டுப் போட்டிகள்
தங்கப் பதக்கம் – முதலிடம் 2010 குவாங்சௌ 3000 மீ பலதடையோட்டம்
ஆசிய தடகளப் போட்டிகள்
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 2009 குவாங்சௌ 3000 மீ பலதடையோட்டம்
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 2011 கோபே 3000 மீ பலதடையோட்டம்
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 2013 புனே 3000 மீ பலதடையோட்டம்
இற்றைப்படுத்தப்பட்டது 20 மே 2016.

சுதா சிங் (Sudha Singh, சூன் 25, 1986) இந்திய தட கள விளையாட்டு மெய்வல்லுநர் ஆவார். இவர் 3000 மீட்டர்கள் பலதடை ஓட்டம் நிகழ்வில் இரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்றார்.

பணிவாழ்வு

[தொகு]

சுதா சிங் 3000 மீட்டர்கள் பலதடை ஓட்டப் போட்டிகளில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகின்றார்; இப்போட்டியில் தேசிய சாதனையை இவர் ஏழாண்டுகள் தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டிருந்தார். மே, 2016இல் இதனை மீண்டும் கைப்பற்றி உள்ளார்.

இவரது சிறந்த ஓட்டம் 2016 ஆசிய விளையாட்டுக்களில் சீனாவின் குவாங்சௌவில் வெளிப்படுத்தினார்; இதில் 9 நிமி 55.67 வினாடி நேரத்தில் 3000 மீட்டர்கள் ஓடி தங்கப் பதக்கத்தைப் பெற்றார். தவிரவும் சாங்காய் நகரில் நடந்த தடகள விளையாட்டுக் கூட்டமைப்புகளின் பன்னாட்டுச் சங்கத்தின் வைர லீக் போட்டியில் தேசிய சாதனையை பதிவு செய்தார்.

சூன் 2012இல் இலண்டன் ஒலிம்பிக்கிற்கு போட்டியிடத் தகுதிப் போட்டியில் தன்னுடைய தேசியச் சாதனையை தானே முறியடித்தார்; 3000 மீ பலதடைகளை 9 நிமி 47.70 வினாடிகளில் கடந்து இச்சாதனையை நிகழ்த்தினார்.[1] இருப்பினும் 2012 ஒலிம்பிக் போட்டியில், முன்னிலைப் போட்டிகளில் 13வதாக வந்ததால் இறுதி ஓட்டத்திற்கு முன்னேறவில்லை.[2]

பன்னாட்டுப் போட்டிகளில் சாதனைகள்

[தொகு]
ஆண்டு போட்டி இடம் நிலை நிகழ்வு குறிப்புகள்
 இந்தியாவின் சார்பாக
2009 2009 ஆசிய தடகளப் போட்டிகள் குவாங்சௌ 2வது 3000 மீ பலதடை 10:10.77
2010 பொதுநலவாய விளையாட்டுக்கள் தில்லி 5th 3000 மீ பலதடை 9:57.63
ஆசிய விளையாட்டுக்கள் குவாங்சௌ முதலாவது 3000 மீ பலதடை 9:55.67
2011 2011 ஆசிய தடகளப் போட்டிகள் கோபே 2வது 3000 மீ பலதடை 10:08.52
2012 ஒலிம்பிக் விளையாட்டுக்கள் இலண்டன் 21வது (h) 3000 மீ பலதடை 9:48.86
2013 ஆசிய தடகளப் போட்டிகள் புனே 2வது 3000 மீ பலதடை 10:09.80
உலக தடகளப் போட்டிகள் மாஸ்கோ 23வது (h) 3000 மீ பலதடை 9:51.05
2014 ஆசிய விளையாட்டுக்கள் இஞ்சியோன் 4வது 3000 மீ பலதடை 9:35.64
2015 உலக தடகளப் போட்டிகள் பெய்ஜிங், சீனா 19வது மாரத்தான் 2:35:35

ரியோ ஒலிம்பிக்சு

[தொகு]

2016 ரியோ ஒலிம்பிக்கில் சுதா 3000 மீட்டர் பல தடை தாண்டும் போட்டியில் பங்கேற்றார். ரியோ ஒலிம்பிக் போட்டிகள் முடிந்து நாடு திரும்பிய சுதா சிங்கிற்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் செய்யப்பட்ட பரிசோதனையில் அவர் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டது தெரியவந்தது.

மேற்சான்றுகள்

[தொகு]
  1. "Sudha Singh". பார்க்கப்பட்ட நாள் 2012-06-08.
  2. "London 2012 - Women's 3000m Steeplechase results". Archived from the original on 2012-12-05. பார்க்கப்பட்ட நாள் 2016-08-25.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுதா_சிங்&oldid=3447168" இலிருந்து மீள்விக்கப்பட்டது