சுண்ணாம்புக்கல் எலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுண்ணாம்புக்கல் எலி
உயிரியல் வகைப்பாடு
உலகம்: மெய்க்கருவுயிரி
திணை: விலங்கு
பிரிவு: முதுகெலும்பி
வகுப்பு: பாலூட்டி
வரிசை: கொறிணி
குடும்பம்: முறிடே
பேரினம்: நிவிவென்டர்
இனம்: நி. கின்பூன்
இருசொற் பெயரீடு
நிவிவென்டர் கின்பூன்
மார்சல், 1976

சுண்ணாம்புக்கல் எலி (Limestone rat)நிவிவென்டர் கின்பூன்) என்பது மத்திய தாய்லாந்தின் சரபுரி, லோப்புரி, நகோன் சவான் மாகாணங்களில் காணப்படும் எலி ஆகும். இது சுண்ணாம்புக் கரடுகளில் மட்டுமே காணப்படும். இந்த சிற்றினம் முரிடே குடும்பத்தினைச் சார்ந்த கொறிணி ஆகும். சுரங்கத் தொழிலால் தற்போது அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள இந்த எலி இனம் மிகவும் துண்டு துண்டான வாழ்விடத்தின் காரணமாக அருகிய இனமாகப் பட்டியலிடப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Kennerley, R. (2017). "Niviventer hinpoon". IUCN Red List of Threatened Species 2016: e.T14821A115124123. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T14821A22414152.en. https://www.iucnredlist.org/species/14821/115124123. பார்த்த நாள்: 14 March 2023. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுண்ணாம்புக்கல்_எலி&oldid=3766923" இருந்து மீள்விக்கப்பட்டது