சுண்ணாம்புக் கரடு
Appearance
சுண்ணக்கரடு (Karst) சுண்ணக்கல், தொலமைற்று, ஜிப்சம் போன்ற நீரில் கரையக்கூடிய பாறைகளால் உருவான நிலவமைப்பாகும். இத்தகைய நிலவமைப்பில் நிலத்தடி கால்வாய்களும் புதைகுழிகளும் குகைகளும் காணப்படுகின்றன.[1] சரியான வானிலை யமைந்தால் படிகப்பாறை போன்ற வானிலை தாங்கும் பாறைகளிலும் உருவாவது ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.[2] நிலத்தடி வடிகால்கள் இருப்பதால் மேற்புறத்தில் ஆறுகள், ஏரிகள் போன்ற நீர்நிலைகள் குறைவாக இருக்கும்.
சுண்ணக்கல் கரடுகளைக் குறித்த ஆய்வுகள் பெட்ரோலிய புவிப்பொதியியலில் முதனைமையாகின்றன; உலகின் எண்ணெய் சேமிப்பில் 50% வரையில் இத்தகைய நிலவமைப்புகளில் அமைந்துள்ளன.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ What is Karst, University of Texas at Austin
- ↑ Geomorphological Landscapes of the World.
- ↑ Ford, Derek (2007). "Jovan Cvijić and the founding of karst geomorphology". Environmental Geology 51: 675–684. doi:10.1007/s00254-006-0379-x. https://archive.org/details/sim_environmental-geology_2007-01_51_5/page/675.