உள்ளடக்கத்துக்குச் செல்

சீலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சீலம் என்றால் ஒழுக்கம் என்று பொருள். இது மூவகைப்படும். அவை பினவருமாறு, புத்தமதத்தில் அழைக்கப்படுகின்றன.

  1. பஞ்ச சீலம் (பஞ்சம் என்பது ஐந்து என்ற எண்ணைக் குறிக்கிறது)
  2. அஷ்டாங்க சீலம் (அஷ்டம் என்றால் எட்டு என்பதைக் குறிக்கிறது.)
  3. தச சீலம் (தசம் என்றால் பத்து என்பதைக் குறிக்கிறது.)

பஞ்ச சீலம்

[தொகு]
  • இல்லற வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டிய ஒழுக்கங்கள் என பின்வருவன குறிக்கப்படுகின்றன. கீழ்கண்ட ஐந்து ஒழுக்கங்களைக் கூறுவது பஞ்ச சீலம் என்றழைக்கப்படுகிறது.
  1. ஓர் உயிரையும் கொல்லாமலும், தீங்கு செய்யாமலும் இருத்தல்.
  2. பிறர் பொருளைக் களவாடாது இருத்தல்.
  3. முறை தவறிய சிற்றின்பத்தை நீக்குதல்.
  4. பொய் பேசாது இருத்தல்.
  5. மது வகைகளை உண்ணாது இருத்தல்.

அஷ்டாங்க சீலம்

[தொகு]
  • இல்லற வாழ்க்கையில் சற்று உயர்ந்தோர் பின்பற்ற வேண்டியவைகள் என பின்வரும் ஒழுக்கங்கள் குறிப்பிடப்படுகின்றன. கீழ்கண்ட எட்டு ஒழுக்கங்களைக் கூறுவது அஷ்டாங்க சீலம் என்றழைக்கப்படுகிறது.
  1. ஓர் உயிரையும் கொல்லாமலும், தீங்கு செய்யாமலும் இருத்தல்.
  2. பிறர் பொருளைக் களவாடாது இருத்தல்.
  3. முறை தவறிய சிற்றின்பத்தை நீக்குதல்.
  4. பொய் பேசாது இருத்தல்.
  5. மது வகைகளை உண்ணாது இருத்தல் ஆகிய மேற்கூறிய பஞ்சசீலங்களும் இதில் அடங்கும். இவற்றோடு, கீழ்கண்டவைகளும் இவற்றின் கீழ் வருகின்றன.
  6. இரவில் தூய்மையான உணவைக் குறைவாக உண்ணல்.
  7. பூ, சந்தனம் உள்ளிட்ட வாசனைப் பொருள்களைப் பயன்படுத்தாமை.
  8. பஞ்சணை(பஞ்சை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட மென்படுக்கை) முதலியவற்றை பயன்படுத்தி உறங்காமல், தரையில் பாய் என்ற விரிப்பைப் பயன்படுத்தி உறங்கல்.

தச சீலம்

[தொகு]
  • இவை துறவிகள் பின்பற்ற வேண்டிய ஒழுக்கங்கள் ஆகும். இந்த பத்து ஒழுக்கங்களைக் கூறுவது தச சீலம் என்று அழைக்கப்படுகிறது.
  1. ஓர் உயிரையும் கொல்லாமலும், தீங்கு செய்யாமலும் இருத்தல்.
  2. பிறர் பொருளைக் களவாடாது இருத்தல்.
  3. முறை தவறிய சிற்றின்பத்தை நீக்குதல்.
  4. பொய் பேசாது இருத்தல்.
  5. மது வகைகளை உண்ணாது இருத்தல் ஆகிய மேற்கூறிய பஞ்ச்சீலங்களும் இதில் அடங்கும். அதோடு கீழ்கண்டவைகளும் இவற்றின் கீழ் வருகின்றன.
  6. இரவில் தூய்மையான உணவைக் குறைவாக உண்ணல்.
  7. பூ, சந்தனம் உள்ளிட்ட வாசனைப் பொருள்களைப் பயன்படுத்தாமை.
  8. பஞ்சணை(பஞ்சை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட மென்படுக்கை) முதலியவற்றை பயன்படுத்தி உறங்காமல், தரையில் பாய் என்ற விரிப்பைப் பயன்படுத்தி உறங்கல் ஆகிய மேற்கூறிய அஷ்டாங்க சீலங்களும் இதில் அடங்கும். இவற்றோடு, கீழ்கண்டவைகளும் இவற்றின் கீழ் வருகின்றன.
  9. இசைப்பாட்டு, கூத்து, நாடகம் முதலியவற்றைப் பார்க்காமல் இருத்தல்.
  10. பொன், வெள்ளி முதலியவற்றைத் தொடாது இருத்தல்.

சமாதி

[தொகு]

துறவறம் மேற்கொண்டு தச சீலங்களில் ஒழுகுகிற துறவிகள் பின்பற்ற வேண்டிய ஒழுக்கம் சமாதி அல்லது தியானம் ஆகும். அதாவது, விலக்க வேண்டிய தீய எண்ணங்களை நீக்கி, மனத்தை ஒரு நிலையில் இருத்துவது சமாதி நிலை எனப்படும்.இதனால், ஐம்புல இன்பங்கள், பகை, கோபம் முதலிய தீயகுணங்கள் தடுக்கப்படுகின்றன.

பஞ்ஞா

[தொகு]

இதை ஞான நிலை என்று கூறலாம். சமாதி நிலையில், தீய எண்ணங்கள் செயலற்று அடங்கிக் கிடக்கின்றன. இவை சில நேரங்களில், திடீரென வெளிப்படக் கூடும். அவ்வாறு அவை மீண்டும் செயற்படாதவாறு தம் நுண்ணறிவு என்னும் ஞானத்தைக் கொண்டு, அவற்றை அழிக்க வேண்டும். இந்த ஞான நிலையை அடைந்தவர் உலகத்தின் உண்மையான நிலையைக் காண்பர். இவற்றின் மூலம் உலகம் நிலையில்லாதது; துன்பம் நிறைந்தது; அசுத்தமானது என்று உணர்ந்து, பற்றுகளை விட்டு, பரிநிர்வாண மோட்சமாகிய, வீடுபேற்றை அடையலாம்.

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சீலம்&oldid=2943661" இலிருந்து மீள்விக்கப்பட்டது