சீன யுவான்
இந்தக் கட்டுரை சீன உரையைக் கொண்டுள்ளது. சரியான ஒழுங்கமைவு ஆதரவில்லையெனில், உங்களுக்கு கேள்விக்குறிகளோ, கட்டங்களோ அல்லது மற்ற குறியீடுகளோ சீன எழுத்துருக்களுக்கு பதிலாக தெரியலாம். |
யுவான் (yuan, /juːˈɑːn/ or /ˈjuːən/; குறியீடு: ¥; எளிய சீனம்: 元; பின்யின்: yuán) முன்னாள் மற்றும் தற்கால சீன] நாணயங்களின் அடிப்படை அலகாகும். சீன மக்கள் குடியரசின் நாணயமான ரென்மின்பியின் முதனிலை அலகாக உள்ளது.[1] தவிரவும் பன்னாட்டுப் புழக்கத்தில் இது ரென்மின்பிக்கு ஒத்த பொருளுடையதாகவும் பயன்படுத்தப்படுகின்றது; ரென்மின்பிக்கான ஐ.எசு.ஓ 4217 சீர்தரக் குறியீடு CNY, “சீன யுவான்” என்பதற்கான சுருக்கமே ஆகும். (இதே போன்று நாணயத்தையும் அலகையும் குறிக்க - இசுடெர்லிங், பவுண்டு - பயன்படுத்தும் வழக்கம் பிரித்தானிய நாணயத்திலும் உள்ளது.)
யுவான் (சீனம்: 元; பின்யின்: yuán) சிலநேரங்களில் வழக்குமொழியில் குய்யை (சீனம்: 块; பின்யின்: kuài; நேர்பொருளாக "கட்டி"; துவக்கத்தில் வெள்ளிக் கட்டி) எனப்படுகின்றது. ஒரு யுவான் 10 ஜியாவாக (சீனம்: 角; பின்யின்: jiǎo; நேர்பொருளாக "மூலை") (அல்லது வழக்குமொழியில் மாவோ,சீனம்: 毛; பின்யின்: máo "இறகு") பிரிக்கப்பட்டுள்ளது. ஒரு ஜியாவ் மேலும் 10 பென்னாகப் (சீனம்: 分; பின்யின்: fēn; நேர்பொருளாக "சிறிய பகுதி") பிரிக்கப்பட்டுள்ளது.
யுவானின் சீனமொழிக் குறியீடான (元) ஜப்பான், கொரியா நாட்டு நாணயங்களைக் குறிக்கவும் பயன்படுத்தப்படுகின்றது. டாலர் மற்றும் பிற நாட்டு நாணயங்களை மொழிபெயர்க்கவும் இக்குறியீட்டை சீன மொழியில் பயன்படுத்துகின்றனர்; காட்டாக, அமெரிக்க டாலரை சீனமொழியில் மெய்யுவான் (சீனம்: 美元; பின்யின்: Měiyuán; நேர்பொருளாக "அமெரிக்க யுவான்") எனவும் ஐரோவை ஊயுவான் (சீனம்: 欧元; பின்யின்: Ōuyuán; நேர்பொருளாக "ஐரோப்பிய யுவான்") எனவும் மொழிபெயர்க்கின்றனர். ஆங்கிலப் பயன்பாட்டில் அன்னியச் செலாவணி சந்தையில் சீன யுவான் (CNY) பெருநில சீனாவின் அலுவல்முறை நாணயமான ரென்மின்பியைக் (RMB) குறிக்கின்றது.
சொற்தோற்றம், எழுத்துமுறை மற்றும் உச்சரிப்பு
[தொகு]தரப்படுத்தப்பட்ட மண்டாரின் சீனத்தில் யுவானின் நேரடிப் பொருள் "வட்டமான பொருள்" அல்லது "வட்டக் காசு". சிங் அரசமரபு காலத்தில் யுவான் வட்ட வடிவிலான வெள்ளிக் காசாக இருந்தது. வழமையான உரைகளில் எளிய சீன எழுத்துமுறையில் 元 எனக் குறிப்பிடப்படுகின்றது; இதன் நேரடிப் பொருள் "துவக்கம்" என்பதாகும். முறையான உரைகளில் எளிய எழுத்துரு 圆 மூலமோ வழமையான சீன எழுத்துரு 圓 மூலமோ குறிக்கப்படுகின்றது; இவை இரண்டுமே "வட்டம்" என்ற பொருளுடையது, காசின் உருவத்தைக் குறிப்பதாக உள்ளது. [2] இவை அனைத்துமே தற்கால தரப்படுத்தப்பட்ட சீனத்தில் யுவான் என உச்சரிக்கப்பட்ட போதிலும் துவக்கத்தில் அவை வெவ்வேறாக உச்சரிக்கப்பட்டன; 元 = nyoe, 圓 = yoe.
சீன மக்கள் குடியரசில் ரென்மின்பி நாணயத்தின் அலகு எனக் குறிக்க '¥' அல்லது 'RMB' என்ற குறியீடு பணத்தொகைக்கு முன்னொட்டாக இடப்படுகின்றது (காட்டாக, ¥100元 அல்லது RMB 100元).
மாற்றுச் சொற்கள்
[தொகு]சீனாவின் பல பகுதிகளில் ரென்மின்பியின் அலகை யுவான் என்பதற்கு மாறாக வழக்குமொழியில் குய்யை (எளிய சீனம்: 块; மரபுவழிச் சீனம்: 塊, நேரடிப் பொருளாக "துண்டு") என்கின்றனர்.
கண்டோனீயம் பெரும்பாலும் பேசப்படும் குவாங்டாங், குவாங்ச்சீ, ஆங்காங் மற்றும் மக்காவு பகுதிகளில் யுவான், ஜியாவ், ஃபென் ஆகியன முறையே மான் (சீனம்: 蚊), ஹூ (சீனம்: 毫), சின் (சீனம்: 仙) எனப்படுகின்றன. சின் என்பது ஆங்கிலச் சொல்லான சென்ட்டிலிருந்து பெறப்பட்டுள்ளது.
தொடர்புடைய நாணய அலகுகள்
[தொகு]வழமையான எழுத்துரு 圓 ஹொங்கொங் டொலர், மக்காவ்வின் படாக்கா, புதிய தாய்வான் டொலரையும் குறிக்கப் பயன்படுத்தப்படுகின்றது. இலுப்பினும் இவற்றின் ஏனைய நாணயப் பிரிவுகள் அதே பெயர்களை கொண்டிருப்பதில்லை. புதிய தாய்வான் டொலர் தரப்படுத்தப்பட்ட சீனமொழியில் யுவான் என்றும் எழுத்துருவில் 元, 圆 அல்லது 圓 என்றும் குறிப்பிடப்படுகின்றது.
கொரிய சப்பானிய நாணய அலகுகளின் பெயர்களான, முறையே வன் மற்றும் யென், மண்டாரின் யுவானின் உடனொத்தவைகளே; இவையும் அவ்வவ் மொழிகளில் "வட்டம்" எனப் பொருள்படுகின்றன.
சப்பானிய யென் (என்) துவக்கத்தில் சீன எழுத்துரு 圓வாலும் பின்னர் எளிதாக்கப்பட்டு 円 எனவும் குறிப்பிடப்பட்டது.
கொரிய வன் (வன்) சீன எழுத்துருவில் 1902 முதல் 1910 வரை 圜 என்றும் இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் 圓 என்றும் எழுதப்பட்டு வந்தது. தற்போது வட, தென் கொரியாக்களில் அங்குல் எழுத்துமுறையில் 원 என தனிப்பட்ட முறையில் எழுதப்படுகின்றன.
மேற்சான்றுகள்
[தொகு]- ↑ Phillips, Matt (2010-01-21). "Yuan or renminbi: what’s the right word for China’s currency?". The Wall Street Journal. http://blogs.wsj.com/marketbeat/2010/06/21/yuan-or-renminbi-whats-the-right-word-for-chinas-currency/. பார்த்த நாள்: 2014-03-03.
- ↑ "Yuan | Define Yuan at Dictionary.com". Dictionary.reference.com. பார்க்கப்பட்ட நாள் 2012-04-06.
நூற் பட்டியல்
[தொகு]- Krause, Chester L. and Clifford Mishler (1991). Standard Catalog of World Coins: 1801–1991 (18th ed. ed.). Krause Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0873411501.
{{cite book}}
:|edition=
has extra text (help) - Meyerhofer, Adi (2013). 袁大头.Yuan-Shihkai Dollar: 'Fat Man Dollar' Forgeries and Remints (PDF). Munich. Archived from the original (PDF) on 2016-03-03. பார்க்கப்பட்ட நாள் 2015-11-19.
{{cite book}}
: CS1 maint: location missing publisher (link) - Pick, Albert (1990). Standard Catalog of World Paper Money: Specialized Issues. Colin R. Bruce II and Neil Shafer (editors) (6th ed.). Krause Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-87341-149-8.
- Pick, Albert (1994). Standard Catalog of World Paper Money: General Issues. Colin R. Bruce II and Neil Shafer (editors) (7th ed.). Krause Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-87341-207-9.
வெளி இணைப்புகள்
[தொகு]- சீன யுவான் - சீனாவின் வரலாற்று மற்றும் தற்போதைய ரூபாய் நோட்டுகள் (CNY / RMB) 1953-2019 (ஆங்கிலம்) (செருமன் மொழி) (பிரெஞ்சு)
- சீன யுவான் - சீன மக்கள் குடியரசின் அந்நிய செலாவணி சான்றிதழ்கள் (FEC) 1980-1994 (ஆங்கிலம்) (செருமன் மொழி) (பிரெஞ்சு)