சீசியம் பெர்மாங்கனேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சீசியம் பெர்மாங்கனேட்டு
இனங்காட்டிகள்
13456-28-5
ChemSpider 13198341
EC number 622-853-3
InChI
  • InChI=1S/Cs.Mn.4O/q+1;;;;;-1
    Key: HAHSACJTONBJGG-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 23674960
SMILES
  • [Cs+].[O-][Mn](=O)(=O)=O
பண்புகள்
CsMnO4
வாய்ப்பாட்டு எடை 251.8406
தோற்றம் ஊதா நிறப் படிகங்கள்[1]
அடர்த்தி 3.6[1]
உருகுநிலை 200-300 °செல்சியசு (சிதைவடையும்)
2.3 கி·லிட்டர்−1 (19 °செல்சியசு)
கட்டமைப்பு
படிக அமைப்பு நேர்சாய்சதுரம்
புறவெளித் தொகுதி Pnma (எண். 62)
Lattice constant a = 1006 பைக்கோமீட்டர், b = 580.1 பைக்கோமீட்டர், c = 794.4 பைக்கோமீட்டர்
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் சீசியம் பெர்குளோரேட்டு
சீசியம் பெர் அயோடேட்டு
சீசியம் பர்டெக்னடேட்டு
ஏனைய நேர் மின்அயனிகள் இலித்தியம் பர்மாங்கனேட்டு
சோடியம் பெர்மாங்கனேட்டு
பொற்றாசியம் பரமங்கனேற்று
ருபீடியம் பர்மாங்கனேட்டு
அமோனியம் பர்மாங்கனேட்டு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

சீசியம் பர்மாங்கனேட்டு (Caesium permanganate) என்பது CsMnO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். சீசியத்தின் பர்மாங்கனேட்டு உப்பாக இது கருதப்படுகிறது.

தயாரிப்பு[தொகு]

பொட்டாசியம் பெர்மாங்கனேட்டு மற்றும் சீசியம் நைட்ரேட்டு ஆகியவற்றின் வினையால் சீசியம் பர்மாங்கனேட்டு உருவாகும்.

CsNO3 + KMnO4 → KNO3 + CsMnO4

பண்புகள்[தொகு]

இயற்பியல் பண்புகள்[தொகு]

சீசியம் பர்மாங்கனேட்டு 1 °செல்சியசு வெப்பநிலையில் 0.97 கிராம்/லிட்டர், 19 °செல்சியசு வெப்பநிலையில் 2.3 கிராம்/லிட்டர் மற்றும் 59 °செல்சியசு வெப்பநிலையில் 12.5 கிராம் /லிட்டர் கரைதிறனுடன் கரையக்கூடியதாகும்.[2] ரூபிடியம் பர்மாங்கனேட்டு, அமோனியம் பர்மாங்கனேட்டு அம்மோனியம் பர்மாங்கனேட்டு மற்றும் பொட்டாசியம் பர்மாங்கனேட்டு சேர்மங்கள் போல இதன் படிக அமைப்பும் நேர்சாய்சதுரப் படிக அமைப்பாகும்.[3]

வேதிப்பண்புகள்[தொகு]

பொட்டாசியம் பர்மாங்கனேட்டைப் போலவே சீசியம் பர்மாங்கனேட்டும் இரண்டு-படிநிலைகளில் சிதைவடைந்து சீசியம் மாங்கனேட்டின் இடைநிலை சேர்மங்களை உருவாக்க வழிவகுக்கிறது. சீசியம் பர்மாங்கனேட்டு மாங்கனீசு டை ஆக்சைடு, சீசியம் ஆக்சைடு மற்றும் ஆக்சினாக உடைகிறது.[4] இதன் சிதைவு வெப்பநிலை 200 முதல் 300 பாகை செல்சியசு வரை இருக்கும்.[5] காற்றோடு கலக்கும் ஆக்சிசன் அப்பொருளில் 8 சதவீத நிறையிழப்பை உண்டாக்கும்.[5]

10CsMnO4 → 3Cs2MnO4 + 7MnO2 + 2Cs2O + 6O2
2Cs2MnO4 → 2MnO2 + 2Cs2O + O2

ஒட்டு மொத்த வினை:

4CsMnO4 → 4MnO2 + 2Cs2O + 3O2

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 R. Hoppe, D. Fischer, J. Schneider (1999), "Zur Kenntnis von Oxyden A[MO4]: Über LiMnO4, KMnO4, RbMnO4, CsMnO4 sowie RbIO4 und CsIO4. (– Was heißt eigentlich "Die Kristallstruktur von …"? –)", Zeitschrift für anorganische und allgemeine Chemie, vol. 625, no. 7, pp. 1521–3749, doi:10.1002/(SICI)1521-3749(199907)625:7<1135::AID-ZAAC1135>3.0.CO;2-L{{citation}}: CS1 maint: multiple names: authors list (link)
  2. Austin M. Patterson (1906), "Solubilities of Permanganates of the Alkali Metals", Journal of the American Chemical Society, vol. 28, no. 12, pp. 1734–1736, doi:10.1021/ja01978a009
  3. Groth, P. (Paul) (1877). Zeitschrift für Krystallographie und Mineralogie. New York Public Library. Leipzig : Wilhelm Engelmann. http://archive.org/details/zeitschriftfrkr19grotgoog. 
  4. Beck, Michael W.; Brown, Michael E. (Jul 1983). "Thermal analysis of antimony/potassium permanganate pyrotechnic compositions" (in en). Thermochimica Acta 65 (2–3): 197–212. doi:10.1016/0040-6031(83)80022-7. https://linkinghub.elsevier.com/retrieve/pii/0040603183800227. 
  5. 5.0 5.1 Z. Gontarz, B. Pisarska (September 1990), "Thermal decomposition stages of potassium, rubidium and caesium permanganates", Journal of Thermal Analysis and Calorimetry, vol. 36, no. 6, pp. 2113–2117, doi:10.1007/BF01914135, S2CID 95763664