சி. வி. கார்த்திகேயன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சி. வி. கார்த்திகேயன்
சி. வி. கார்த்திகேயன், நீதிபதி, சென்னை உயர்நீதி மன்றம்
பிறப்புகார்த்திகேயன்
நவம்பர் 14, 1964 (1964-11-14) (அகவை 59)
சென்னை, இந்தியா
பணி
  • உயர் நீதிமன்ற நீதிபதி
அறியப்படுவதுஉறுப்பினர்,தமிழ் நாடு நீதிதுறை அகாடமி
பட்டம்
இயக்குநராக உள்ள
நிறுவனங்கள்
பெற்றோர்
வலைத்தளம்
www.hcmadras.tn.nic.in/cvkj.html

(நீதியரசர்) சி. வி. கார்த்திகேயன் மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் பணியமர்வு நீதிபதி ஆவார்.[1] அவர் தமிழ்நாடு மாநில நீதித்துறை அகாடமியின் ஆளுநர் குழுவின் உறுப்பினர்களில் ஒருவர்.

நீதிபதி சி. வி. கார்த்திகேயன் 16.11.2016 அன்று மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.[2]

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

நீதிபதி சி. வி. கார்த்திகேயன் 14.12.1964 அன்று பிறந்தார். அவரது பெற்றோர் சி. வி. சிம்ஹராஜா சாஸ்திரி மற்றும் திருமதி. சரஸ்வதி எஸ் சாஸ்திரிஹ ஆவார்கள். நீதிபதி கார்த்திகேயனின் ஆரம்ப பள்ளி படிப்பை சென்னை ராயபுரத்தில் உள்ள செயின்ட் ஜோசப் பிரசன்டேசன் கான்வென்ட்டில் படித்தார். பின்னர், நீதிபதி கார்த்திகேயன் சென்னை செயின்ட் மேரி மேல்நிலைப்பள்ளி, ஆர்மீனிய வீதி, சென்னை பள்ளியிலும் மற்றும் இந்து சீனியர் மேல்நிலைப்பள்ளியிலும் படித்தார்.

பட்ட படிப்பு[தொகு]

நீதிபதி கார்த்திகேயன் தனது இளங்கலை அறிவியல் பட்டத்தை முடித்து அதன்பின், சட்ட பட்டப்படிப்பை முடித்தார். தனது சட்டப் படிப்பை முடித்த பின்னர், நீதிபதி கார்த்திகேயன் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் பார் கவுன்சிலில் தன்னை பதிவு செய்து கொண்டார்.

உயர் நீதிமன்ற நீதிபதியாக[தொகு]

நீதிபதி கார்த்திகேயன் 16.11.2016 அன்று மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார்[3] . அவர் தமிழ்நாடு மாநில நீதித்துறை அகாடமியின் ஆளுநர் குழுவின் உறுப்பினர்களில் ஒருவர் ஆவார்.[4]

முக்கியமான வழக்குகள்[தொகு]

'ஆல் இந்தியா ரிப்போர்டர்' போன்ற பத்திரிகைகளில் நீதிபதி சி. வி. கார்த்திகேயன் தீர்ப்பளித்த சில முக்கியமான வழக்குகள் பதிவாகியுள்ளன.[5][6]

அ. இ. அ. தி. மு. க. கட்சியின் வழக்கு[தொகு]

அ. இ. அ. தி. மு. க அரசியல் கட்சியின் கணக்குகளை சமர்ப்பிக்க நீதிபதி கார்த்திகேயன் உத்தரவு பிறப்பித்திருந்தார்.[7]

'பதஞ்சலி' வழக்கு[தொகு]

நீதிபதி சி.வி. கார்த்திகேயன், 'பதஞ்சலி ஆயுர்வேத் லிமிடெட்' மற்றும் 'திவ்யா யோக் டிரஸ்ட்' ஆகியவை தங்கள் மாத்திரை வில்லைகளை "கொரோனில்" என்று பெயரிட எந்த காரணமும் இல்லை என்று தீர்ப்பில் கூறினார்.[8] இந்த வழக்கை நீதிபதி சி. வி. கார்த்திகேயன் உத்தரவிட்ட பின்னர், ​​பாதிக்கப்பட்ட தரப்பினரும் மேல் முறையீடு செய்தனர்.

அவதூறு வழக்கு[தொகு]

நியூஸ் 18 தொலைக்காட்சியின் நிறுவனமான 'டிவி 18 பிராட்காஸ்ட் லிமிடெட்' நிறுவனத்தின் சார்பாக எம் குணசேகரன் தாக்கல் செய்த மனு விசாரணை செய்யப்பட்ட போது 'யூ - ட்யூபர் மரிதாஸ்' என்பவர் பதில் அளிக்க மெட்ராஸ் உயர்நீதிமன்ற நீதிபதி சி.வி.கார்த்திகேயன் அறிவிப்பு அனுப்ப உத்தரவிட்டார்.[9][10]

மின்சார வாரியம் வழக்கு[தொகு]

மற்றொரு வழக்கில், கோவிட் - 19 பெருந்தொற்று காலத்தில் மின்சார கட்டணம் வசூலிப்பதற்கான வழிமுறைகளை வாரியம் பின்பற்றவில்லை எனில், மின்சார வாரியத்திற்கான ஒழுங்குமுறை ஆணையத்தை அணுகுமாறு மனுதாரர்களுக்கு நீதிபதி சி. வி. கார்த்திகேயன் உத்தரவிட்டார்.[11]

பைக் டாக்ஸி வழக்கு[தொகு]

நீதிபதி சி.வி. கார்த்திகேயன் அமர்ந்த உயர்நீதி மன்ற அமர்வில் விசாரணைக்கு வந்த ஒரு வழக்கில், இருசக்கர வாகன டாக்ஸி சேவை வழங்குநரான 'ராபிடோ' நிறுவனத்தின் செயலியை நீக்கவேண்டும் என முடிவு செய்து தமிழக காவல்துறையானது 'கூகுல் எல்.ஐ.சி', மற்றும் 'ஆப்பிள் இந்தியா' மற்றும் 'இந்திய கணினி அவசரகால பதில் குழு' ஆகியோருக்கு அறிவுறுத்தியது. இது சம்பந்தமாக தங்கள் தளங்களில் இருந்து 'ரேபிடோ பைக்' பயன்பாட்டை அகற்ற கோரியதை எதிர்த்து எழுந்த மேல்முறையீட்டின் இடைக்கால உத்தரவில் காவல்துறை நடவடிக்கைக்கு இடைக்கால தடை வழங்கி உத்தரவிடப்பட்டது.[12]

சிஜிஎஸ்டி மற்றும் உள்ளீட்டு வரி வழக்கு[தொகு]

சரக்கு மற்றும் சேவை வரி சட்டம் தொடர்பான வழக்கில், நீதிபதி சி.வி. கார்த்திகேயன், சிஜிஎஸ்டி சட்டத்தின் பிரிவு 50 இன் கீழ், வருமானத்தை தாமதமாக தாக்கல் செய்வதற்கான வட்டி தானாகவே எழுகிறதா, இல்லையா? என்பது தொடர்பான பிரச்சினையில் உத்தரவிட்டுள்ளார்.[13]

புதுச்சேரி சர்ச்சை வழக்கு[தொகு]

நியாய விலைக் கடைகளில் பொருட்களுக்குப் பதிலாக பணத்தை வழங்குவதற்கான இணை ஆளுநர் கிரண் பேடி அவர்களின் முடிவுக்கு எதிராக புதுச்சேரி மாநில முதல்வர் தாக்கல் செய்த ரிட் மனுவை நீதிபதி சி. வி. கார்த்திகேயன் தள்ளுபடி செய்தார்.[14]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Madras High Court | Profile of Judges". www.hcmadras.tn.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2021-05-19.
  2. "TNSJA | Board | Profiles". www.tnsja.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2021-05-19.
  3. "Judges named for vacation court". in.news.yahoo.com (in Indian English). பார்க்கப்பட்ட நாள் 2021-05-20.
  4. "TNSJA | Board". www.tnsja.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2021-05-19.
  5. "All India Reporter".
  6. Top 100 Income Tax Rulings Of 2019. https://books.google.co.in/books?id=xEnpDwAAQBAJ&newbks=0&printsec=frontcover&pg=PA178&dq=%22C.+V.+Karthikeyan%22+-wikipedia&hl=en&redir_esc=y. 
  7. "AIADMK".
  8. "Pathanjali".
  9. "Madras HC restrains Youtuber Maridhas from posting any videos against private Tamil news channel". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2021-05-20.
  10. "Defamation".
  11. Reporter, Staff (2020-05-26). "HC disposes of petitions filed by spinning mills" (in en-IN). The Hindu. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-751X. https://www.thehindu.com/news/cities/Madurai/hc-disposes-of-petitions-filed-by-spinning-mills/article31681023.ece. 
  12. "Justice C V Karthikeyan: Latest News, Videos and Photos of Justice C V Karthikeyan | Times of India". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 2021-05-20.
  13. "Case Law" (PDF).
  14. "Puducherry controvercy case". Archived from the original on 2021-05-20. பார்க்கப்பட்ட நாள் 2021-05-30.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சி._வி._கார்த்திகேயன்&oldid=3750102" இலிருந்து மீள்விக்கப்பட்டது