வலைவாசல்:ஒங்கொங்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
HK Arun (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
சி r2.5.2) (தானியங்கிஇணைப்பு: fr, ru, zh, zh-yue
வரிசை 72: வரிசை 72:


[[en:Portal:Hong Kong]]
[[en:Portal:Hong Kong]]
[[fr:Portail:Hong Kong]]
[[ru:Портал:Гонконг]]
[[zh:Portal:香港]]
[[zh-yue:Portal:香港]]

04:52, 13 சனவரி 2011 இல் நிலவும் திருத்தம்


ஹொங்கொங் விக்கிவாசல்
படிமம்:Portal Hong Kong (Tamil).jpg

ஹொங்கொங் அல்லது ஹாங்காங் (Hong Kong Special Administrative Region) இதன் சுருக்கம் HKSAR என்பர். இது பிரித்தானிய முடிக்குரிய குடியேற்ற நாடுகளில் ஒன்றாக இருந்த நாடாகும். இதனை 1997 ஆம் ஆண்டு மீண்டும் பிரித்தானியா சீனாவிடம் கையளித்தது. அதனைத் தொடர்ந்து இந்த நாடு சீன மக்கள் குடியரசின் சிறப்பு நிர்வாக பகுதிகளில் இரண்டில் ஒன்றானது. மற்றொன்று மக்காவ் ஆகும். இருப்பினும் ஹொங்கொங், ஒரு நாடு இரு கொள்கைகள் எனும் அடிப்படையில் தொடர்ந்தும் பிரித்தானிய சட்டத் திட்டங்களுடன், தமக்கென தனித்துவமான தன்னாட்சி அதிகாரங்களைக் கொண்டுள்ளது. அதாவது ஹொங்கொங் தனித்துவமான நாணயம், சட்டத் திட்டங்கள், அரசியல் முறைமை, குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டு விதிமுறைகள், காவல் துறை, அபிவிரித்தித் திட்டங்கள் போன்றன முற்றிலும் வேறானதும் தனித்துவமானதும் கொள்கைகளைக் கொண்டுள்ளது. உலகின் அதிக புழக்கத்தில் உள்ள நாணயங்களில் ஹொங்கொங் டொலர் 9 வது அதிக புழக்கத்தில் உள்ள நாணயமாகும்.

மேலும்...
சிறப்புக் கட்டுரை

ஹொங்கொங்கில் தமிழ் குழந்தைகள் தமது கல்வியை ஆங்கில வழி மூலக் கல்வியாகவே கற்கின்றனர். இவர்களுக்கு தமிழ்மொழி வழி கற்கவோ, தமிழைக் கற்கவோ கூட ஹொங்கொங் சூழலில் வாய்ப்பு இருக்கவில்லை. இந்த சூழ்நிலையில் இந்திய இளம் நண்பர்கள் குழு எனும் பெயரில் குழுமமாக இயங்கிய தமிழ் இளைஞர்கள், தாமாகவே தன்னார்வ முயற்சியால் தமிழ் வகுப்புகளை 2004 ஆம் ஆண்டு ஆரம்பித்து, தொடர்ந்தும் வெற்றிகரமாக நடாத்தி வருகின்றனர். இவர்களின்...

மேலும்...
ஹொங்கொங் பகுப்புகள்
ஹொங்கொங் பகுப்பு காணப்படவில்லை
ஹொங்கொங் தமிழர் பகுதி

சுங்கிங் மென்சன் கட்டடம் (Chungking Mansions) ஹொங்கொங்கில், கவுலூன் தீபகற்ப நிலப்பரப்பின் முனையில் சிம் சா சுயி எனும் இடத்தில், 36-44 நாதன் வீதியில் அமைந்துள்ள ஒரு பழமையான கட்டடமாகும். இக்கட்டடம் ஹொங்கொங் வாழ் மக்கள் இடையே மட்டுமன்றி, சுற்றுலா மற்றும் வணிக ரீதியாக ஹொங்கொங் வந்து செல்லும் இந்தியர், பாக்கித்தானியர், நேப்பாளிகள், வங்காளிகள், இலங்கையர் உட்பட ஆசிய நாட்டவர்களும், ஆப்பிரிக்க நாட்டவர்களும், மற்றும் மலிவு விலையில் தங்குமிடம் தேடும் ஐரோப்பியர்கள் உட்படவும் உலகில் பல்வேறு பகுதியினரின் மத்தியில் நன்கு புகழ் பெற்றக் கட்டடமாகும். குறிப்பாக ஹொங்கொங்கில் தமிழர்களின் உணவகங்கள் இக்கட்டிடத்தில் மட்டுமே உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால்...

மேலும்...
ஹொங்கொங் சுற்றுலா
படிமம்:நோவாவின் பேழை 3.JPG

நோவாவின் பேழை அல்லது நோவாவின் கப்பல் (Noah's Ark in Hong Kong) என்பது யூதம், கிறித்தவம், இசுலாம் போன்ற ஆபிரகாமிய மதங்களின் புனித நூல்களில் உள்ள நோவாவின் பிரளயம் தொடர்பான குறிப்புகளுக்கு செயல் வடிவம் கொடுத்து ஹொங்கொங்கில், புதிய கட்டுப்பாட்டகம், மா வான் எனும் குட்டித் தீவில், சிங் மா பாலத்திற்கு அடியில், ஹொங்கொங் வரும் உல்லாசப் பயணிகளை கவர்ந்திழுக்கும் விதமாகக் கட்டப்பட்ட ஒரு பிரமாண்டமானக் கப்பலாகும். சிறப்புடன் நோவாவின் பேழை குறித்து பைபிளில் கூறப்பட்டுள்ள அதே அளவுகளுடன் உருவாக்கப்பட்ட உலகின் ஒரே நோவாவின் பேழை இதுவாகும். மற்றும்...

மேலும்...
ஹொங்கொங் சிறப்புப்படம்
படிம உதவி:
நட்சத்திரங்களின் ஒழுங்கை இல் இருந்து ஒரு பார்வை, எதிரே ஹொங்கொங் தீவு
"https://ta.wikipedia.org/w/index.php?title=வலைவாசல்:ஒங்கொங்&oldid=666363" இலிருந்து மீள்விக்கப்பட்டது