சிங் மா பாலம்
சிங் மா பாலம் Tsing Ma Bridge | |
---|---|
Tsing Ma Bridge at night | |
ஆள்கூற்று | 22°21′05″N 114°04′27″E / 22.35139°N 114.07417°E |
வாகன வகை/வழிகள் | போக்குவரத்துப் பாதைகள் 6 (மேலே) 2 எம்டிஆர் ரெயில் பாதைகள், போக்குவரத்துப் பாதைகள் 2 (கீழே) |
கடப்பது | Ma Wan Channel |
இடம் | மா வான் தீவு, சிங் யி தீவு |
அதிகாரபூர்வ பெயர் | Tsing Ma Bridge |
Characteristics | |
வடிவமைப்பு | இரட்டைத் தட்டு தொங்கு பாலம் |
அகலம் | 41 மீட்டர்கள் (135 அடி) |
அதிகூடிய தாவகலம் | 1,377 மீட்டர்கள் (4,518 அடி) |
வாகனங்களின் அதிகூடிய உயரம் | 62 மீட்டர்கள் (203 அடி) |
History | |
திறக்கப்பட்ட நாள் | ஏப்ரல் 27, 1997 |
Statistics | |
சுங்கம் | HK$30 (தானுந்துகள்) |
சிங் மா பாலம் (Tsing Ma Bridge) இது ஹொங்கொங் உள்ள ஒரு பாலமாகும். இது உலகில் உள்ள ஏழாவது மிக நீளமான தொங்கு பாலம் ஆகும். இப்பாலம் ஹொங்கொங் பன்னாட்டு விமான நிலையம் இருந்து ஹொங்கொங் தீவு மற்றும் கவ்லூண் புதிய கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு செல்வதற்காக அமைக்கப்பட்ட பாலமாகும். இப்பாலம் இரண்டு தட்டுகளைக் கொண்டது. இரண்டிலும் தரைவழிப் போக்குவரத்து மற்றும் தொடருந்து பாதைகள் உள்ளன. இவ்வகையான தொங்கு பாலங்களில் இது உலகில் மிகப் பெரியதாகவும் உள்ளது. இப்பாலத்தின் நீளம் 1,377 மீட்டர்கள் (4,518 அடி), உயரம் 206 மீட்டர்கள் (676 அடி). இத்தகைய நீளமான தொடருந்துப் பாதையைக் கொண்டுள்ள பாலம் உலகில் இதுவே மிகப் பெரியதாகும்.[1][2][3]
காரணப் பெயர்
[தொகு]இப்பாலத்திற்கான பெயர் லந்தாவ் தீவிக்கும் கவ்லூண் நிலப்பரப்புக்கும் இடையில் அமைந்திருக்கும் இரண்டு தீவுகளின் பெயரான சிங் யீ தீவு மற்றும் மா வான் தீவு எனும் பெயர்களின் முதல் சொற்களால் சிங் - மா தெரிவுசெய்யப்பட்டு சிங் மா பாலம் என்று பெயர் சூட்டப்பட்டது.
வரலாறு
[தொகு]இப்பாலத்தின் நீளம் (4,518 அடிகள்) 1,377 மீட்டர்களாகும். கடல் மட்டத்தில் இருந்து உயரம் (676 அடிகள்) 206 மீட்டர்களாகும். இப்பாலத்திற்கு சிங் மா பாலம் என பெயரிடப்பட்டது. இதுவே இன்று உலகில் நீளமான முதல் இரட்டைமாடி பாலமாகும். உலகில் நீளமான பாலங்களில் ஏழாவது பாலமாகும். (World's Seventh Longest Bridge) இப்பாலத்தின் அகலம் (135 அடிகள்) 41 மீட்டர்களுமாகும். போவதற்கான மூன்று, வருவதற்கான மூன்று என, மேல் தளத்தில் ஆறு பாதைக் கோடுகள் உள்ளன. பொது போக்குவரத்து வாகனங்கள் பயணிப்பதற்கு மேல்மாடி பாதைகள் பயன்படுத்தப்படுகின்றன. தொடருந்து மற்றும் அதிபார ஊர்திகள் பயணிப்பதற்கு கீழ்மாடி பாதைகள் பயன்படுத்தப்படுகின்றன. கீழ் மாடி பாதைகளில் தொடருந்துக்கென இரண்டு பாதைக் கோடுகளும் அதிபார ஊர்திகளுக்கான இரண்டு பாதை கோடுகளுமாக நான்கு உள்ளன. மேல்மாடி பாதையில் பயணிப்போர் வெளிக்காட்சிகளை பார்த்த வண்ணம் பயணிக்கலாம். கீழ்மாடியில் செல்லும் வாகணங்கள் எந்த வெளிப்புரக் காட்சியையும் பார்க்க முடியாது. சுரங்கப்பாதைப் போன்றே அமைக்கப்பட்டுள்ளது.
இப்பாலத்தின் கட்டுமானப் பணிகள் 1992 மே மாதம் ஆரம்பிக்கப்பட்டு 1997 மே மாதத்தில் முடிவடைந்தது. இதன் செலவு 7.2 பில்லியன் ஹொங்கொங் டொலர்கள் ஆகும். இப்பாலம் 1997 ஏப்ரல் 27 ஆம் நாள் பிரித்தானிய பிரதமர் மார்கிறட் தட்சர் என்பவரால் திறந்து வைக்கப்பட்டது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Section 4: Road Tunnels and Control Areas". 2017 Annual Transport Digest. Transport Department.
- ↑ "10 Tallest Bridges in the World | Top Weird,Odd and Cool lists". Weirdly Odd. 2010-12-01. பார்க்கப்பட்ட நாள் 2013-04-29.
- ↑ Evaluation of typhoon induced fatigue damage for Tsing Ma Bridge பரணிடப்பட்டது 26 சனவரி 2020 at the வந்தவழி இயந்திரம்[1]