உள்ளடக்கத்துக்குச் செல்

இந்திய இளம் நண்பர்கள் குழு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹொங்கொங் இந்திய இளம் நண்பர்கள் குழுவின் சின்னம்

இந்திய இளம் நண்பர்கள் குழு (Young Indian Friends Club) சுருக்கமாக YIFC என்றழைக்கப்படும் குழுவானது ஹொங்கொங் தமிழ் இளைஞர்களால் விளையாட்டுக்களின் மீதுள்ள ஆர்வத்தால் உருவாக்கப்பட்ட ஒரு குழுவாகும். இந்த குழு ஆரம்பத்தில் விளையாட்டுகளில் ஈடுப்பட்டு வந்தாலும், காலப்போக்கில் பல்வேறு தமிழர் நலன் சார்ந்த திட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றது.

வரலாறு

[தொகு]

இக்குழுமம் 2003 ஆம் ஆண்டு உருவாக்கம் பெற்றது. உருவாக்கம் பெற்ற காலங்களில் கடற்கரை கைபந்தாட்டம், காற்பந்து, துடுப்பாட்டம், பந்தெறிதல் மற்றும் பூப்பந்தாட்டம் போன்ற விளையாட்டுகளிலும் பங்குப்பற்றி வந்தது. அத்துடன் பல விளையாட்டு போட்டிகளில் பங்குபற்றி வெற்றிகளையும் ஈட்டியுள்ளது.

விளையாட்டுகளுக்கு என்றே உருவாக்கப்பட்ட இக்குழு, 2004 செப்டம்பர் மாதம் தாய் மொழியாம் தமிழ் மொழியை கற்பிக்க வேண்டும் எனும் திட்டத்தை தன்னார்வப் பணியாக முன்னெடுத்தது. ஆரம்பத்தில் சுங்கிங் மென்சன் கட்டடத்தில் வகுப்புகளை ஆரம்பித்த இக்குழு,[1] தற்போது யவ் மா டேய் எனும் நகரில் உள்ள சமூகக்கூடத்தில் தொடர்ந்தும் முனைப்புடன் வெற்றிகரமாக நடாத்தி வருகின்றது. அத்துடன் ஹொங்கொங் தமிழ் பண்பாட்டுக் கழகத்துடன் இணைந்து மேலும் சில ஆக்கப்பணிகளிலும் ஈடுபட்டு வருகிறது. அத்துடன் தமிழ் வகுப்பின் ஒவ்வொரு ஆண்டு இறுதியிலும், ஆண்டு விழா எடுத்து சிறப்பித்தும் வருகின்றது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Tamil classes in Chung King Mansions

வெளியிணைப்புகள்

[தொகு]
ஒங்கொங்:விக்கிவாசல்