பூப்பந்தாட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பூப்பந்தாட்டம் ஆடுதல்

பூப்பந்தாட்டம் (Ball Badminton) என்பது கம்பளி நூலால் ஆன பந்தைக் கொண்டு ஆடும் ஒரு ஆட்டமாகும். இது இந்தியாவில் உருவான ஒரு மட்டைப் பந்து விளையாட்டு. 1856ஆம் ஆண்டில் தஞ்சாவூர் அரச குடும்பத்தினர் விளையாடியதாகத் தெரிகிறது.[1] பெரும்பாலும் வெளிப்புறத்திலேயே விளையாடப்பட்டு வந்தது. மிக அண்மையில் உள்ளரங்குகளில் விளையாடத் துவங்கியுள்ளனர். தமிழ்நாடு, புதுச்சேரி. ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் புகழ்பெற்று விளங்குகிறது.

ஆடுகளம்[தொகு]

பூப்பந்துக்கான ஆடுகளம் ஒரு செவ்வக வடிவ அமைப்பைக்கொண்டது. இதன் நீளம் 24 மீட்டர். அகலம் 12 மீட்டர். மையக் கோட்டிலிருந்து இரண்டு பக்கங்களிலும் 1 மீட்டருக்கு இரண்டு கோடுகள் குறிக்கப்பட வேண்டும். இதற்குப் பொது இடம் என்று பெயர். தரையில் இருந்து வலையின் உயரம் நடுவில் 6 அடி. கம்பங்களுக்கு அருகில் 6 அடி 1 அங்குலம்.

பந்து[தொகு]

பந்தின் எடை 27 கிராம் முதல் 30 கிராம் வரை இருக்கலாம். பந்தின் விட்டம் 5 முதல் 5.5 அங்குலம் வரை இருக்கும்.

ஆட்டக்காரர்கள்[தொகு]

இந்த ஆட்டத்திற்கு விளையாடும் ஆட்டக்காரர்கள் 5 பேர். மாற்று ஆட்டக்காரர்களாக 5 பேர் இருப்பர்.

வெற்றிப் புள்ளிகள்[தொகு]

ஒரு போட்டியில் வெற்றி பெற மூன்று ஆட்டங்களில் இரண்டு ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டும். ஒரு ஆட்டத்தின் வெற்றிக்கு 35 புள்ளிகளை எட்ட வேண்டும் (குறைந்த பட்சம் அணிகளுக்கும் இடையே இரு புள்ளிகள் வேறுபாடு வேண்டும்)

மேற்கோள்கள்[தொகு]

  1. பூப்பந்தாட்ட சங்கம் தளத்தில் வரலாறுபகுதி[தொடர்பிழந்த இணைப்பு]

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பூப்பந்தாட்டம்&oldid=3758595" இலிருந்து மீள்விக்கப்பட்டது