கருக்கட்டல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 14: வரிசை 14:
=மனிதரில் கருக்கட்டல்=
=மனிதரில் கருக்கட்டல்=


==அடிக்குறிப்புகள்==
{{Reflist|2}}


[[ar:تخصيب]]
[[ar:تخصيب]]

13:12, 19 ஆகத்து 2010 இல் நிலவும் திருத்தம்

A sperm cell fertilising an ovum

கருக்கட்டல் என்பது இரு புணரிகள் இணைந்து ஒரு புதிய உயிரினம் உருவாகும் செயல்முறையாகும்.

விலங்குகளில் இது முட்டை, விந்து எனும் இரு புணரிகள் இணைந்து, இறுதியில் ஒரு முளையம் உருவாதலைக் குறிக்கிறது. குறிப்பிட்ட விலங்கைப் பொறுத்து, கருக்கட்டல் செயல்முறையானது உடலின் உள்ளே நடைபெறுமா, அல்லது உடலுக்கு வெளியே நடைபெறுமா என்பது தங்கியிருக்கிறது. தாவரங்களில் மகரந்த மணிகளில் இருக்கும் புணரிக் கலமானது, முட்டைக் கலத்துடன் இணைந்து உருவாகும் செயல்முறையே கருக்கட்டல் எனப்படுகிறது.

கருக்கட்டலின் பின்னர் ஒரு தனி உயிரினம் உருவாகும் முழுமையான செயல்முறையை இனப்பெருக்கம் என்கின்றோம்.

தாவரங்களில் கருக்கட்டல்

தாவரங்களில் பூக்கும் தாவரங்கள் (flowering plants), வித்துமூடியிலிகளை (gymnospermae) உள்ளடக்கிய வித்துத் தாவரங்கள் (seed-bearing plants) என்ற பிரிவினுள் வரும் விதை கொண்ட தாவரங்களில் இவ்வகையான கருக்கட்டல் நடைபெறுகிறது. ஆனாலும் அது நடைபெறும் செயல் முறையானது வேறுபடுகின்றது.

பூக்கும் தாவரங்கள்

சூல்வித்திலையானது மகரந்தச்சேர்க்கைக்கு உள்ளான பின்னர், சூலகமுடி அல்லது குறி என அழைக்கப்படும் மகரந்தத்தை ஏற்கும் பகுதியினால் சுரக்கப்படும் வெல்லப் பதார்த்தங்களின் தூண்டுதலால், மகரந்த மணியானது வளர ஆரம்பிக்கும். இந்த மகரந்தக் குழாய் தாவர இழையத்தினூடாக நீண்டு வளர்ந்து சூலகத்தை சென்றடையும். மகரந்த உயிரணுவின் இருமடியக் (diploid) கருவானது இந்தக் குழாயினூடாகச் செல்லும்போது பிரிவுக்குள்ளாகி இரு ஒருமடிய (haploid) விந்துக் கருக்களை (sperm nuclei) உருவாக்கும்[1]. இந்த விந்துக் கரு, சூலகத்திலுள்ள, சூல்வித்து உயிரணுவின் ஒருமடியக் கருவுடன் இணைந்து இருமடியக் கருவை உருவாக்கும். இந்த செயல்முறையே உண்மையில் கருக்கட்டல் நிகழும் இடமாகும். கருக்கட்டலின் பின்னர் சூலகமானது விருத்தியடைந்து பழமாகிறது[2].

விலங்குகளில் கருக்கட்டல்

மனிதரில் கருக்கட்டல்

அடிக்குறிப்புகள்

  1. Handbook of plant science. Chichester, West Sussex, England: John Wiley. 2007. பக். 466. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-470-05723-0. 
  2. Johnstone, Adam. Biology: facts & practice for A level. Oxford University Press. பக். 95. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-19-914766-3. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கருக்கட்டல்&oldid=578559" இலிருந்து மீள்விக்கப்பட்டது