அவள் அப்படித்தான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி சான்றுகள் / ஆதாரங்கள் / மேற்கோள்கள் தேவைப்படுகின்றன
No edit summary
வரிசை 32: வரிசை 32:

=சிறு குறிப்பு=
=சிறு குறிப்பு=
[[சி. ருத்ரைய்யா]] இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் [[ரஜினிகாந்த்]],[[கமல்ஹாசன்]], [[ஸ்ரீபிரியா]] மற்றும் சிவச்சந்திரன் ஆகியோர் நடித்திருந்தனர்<ref name=AvalAppadithan>{{cite web|title=Aval Appadithan Vinyl LP Records|url=http://musicalaya.net/imgviewer.php?mod=lpcovers/110/3/1/1|publisher=musicalaya|accessdate=2014-01-27|}}</ref>. தமிழில் வெளியான கடைசிக் கருப்பு வெள்ளைப் படங்களில் இது ஒன்றாகும். வணிக ரீதியாகத் தோல்வி அடையினும், இது விமர்சகர்கள், திரையுலகக் கலைஞர்கள் மற்றும் இணைத் திரைப்படத்தில் ஆர்வமுற்ற ரசிகர்கள் ஆகியோரிடையே பெரும் பாராட்டுகளைப் பெற்றது

[[சி. ருத்ரைய்யா]] இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் [[ரஜினிகாந்த்]],[[கமல்ஹாசன்]], [[ஸ்ரீபிரியா]] மற்றும் சிவச்சந்திரன் ஆகியோர் நடித்திருந்தனர். தமிழில் வெளியான கடைசிக் கருப்பு வெள்ளைப் படங்களில் இது ஒன்றாகும். வணிக ரீதியாகத் தோல்வி அடையினும், இது விமர்சகர்கள், திரையுலகக் கலைஞர்கள் மற்றும் இணைத் திரைப்படத்தில் ஆர்வமுற்ற ரசிகர்கள் ஆகியோரிடையே பெரும் பாராட்டுகளைப் பெற்றது

=கதைக் குறிப்பு=
=கதைக் குறிப்பு=

ஆவணப்படங்களை இயக்குவதில் ஆர்வம் கொண்ட அருண் (கமலஹாசன்) என்னும் இளைஞன், விளம்பர நிறுவனம் நடத்துகிற தனது நண்பன் (ரஜினிகாந்த்) அலுவலகத்தில் பணியாற்றும் மஞ்சு (ஸ்ரீபிரியா) என்னும் பெண்ணைச் சந்திக்கிறான். உலகில் பெண்களின் இருப்பைப் பற்றியதான, "முழு வானில் பாதி' என்று தான் பெயரிட்ட அந்த ஆவணப்படத்திற்கு உதவியாகப் பணி புரியுமாறு வேண்டுகையில், மஞ்சு தயக்கத்துடன் சம்மதிக்கிறாள்.

வரிசை 58: வரிசை 56:

கதைக்கேற்ற இசையினை [[இளையராஜா]] வழங்கியிருந்தார். முதன்மையாக பியானோ இசையில் உருவாக்கப்பட்டு ஜெயச்சந்திரன் பாடிய "உறவுகள் தொடர்கதை" என்னும் பாடல் இன்றளவும் பிரபலமாக உள்ளது. எஸ்.ஜானகி "வாழ்க்கை ஓடம் செல்ல" ([[பந்துவராளி]] என்னும் ராகத்தின் அடிப்படையில்) என்னும் பாடலைப் பாடியிருந்தார். கமலஹாசன் தனது சொந்தக் குரலில் "பன்னீர் புஷ்பங்களே" ([[ரேவதி]] இராக அடிப்படையில்) என்னும் பாடலைப் பாடியிருந்தார்.

==மேற்கோள்கள்==
{{reflist}}

==வெளியிணைப்புகள்==
* {{IMDb title|0275205}}

[[பகுப்பு:1978 தமிழ்த் திரைப்படங்கள்‎]]
[[பகுப்பு:1978 தமிழ்த் திரைப்படங்கள்‎]]

13:42, 21 நவம்பர் 2014 இல் நிலவும் திருத்தம்

அவள் அப்படித்தான்
இயக்கம்சி. ருத்ரைய்யா
தயாரிப்புசி. ருத்ரைய்யா
கதைதிரைக்கதை சி. ருத்ரைய்யா
வண்ண நிலவன்
சோமசுந்தரேஸ்வர்
இசைஇளையராஜா
நடிப்புரஜினிகாந்த்,கமல்ஹாசன்
ஸ்ரீபிரியா
படத்தொகுப்புரவீந்திரன்
வெளியீடுஅக்டோபர் 30, 1978
நீளம்3136 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

அவள் அப்படித்தான் 1978 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு தமிழ்த் திரைப்படமாகும்.

சிறு குறிப்பு

சி. ருத்ரைய்யா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த்,கமல்ஹாசன், ஸ்ரீபிரியா மற்றும் சிவச்சந்திரன் ஆகியோர் நடித்திருந்தனர்[1]. தமிழில் வெளியான கடைசிக் கருப்பு வெள்ளைப் படங்களில் இது ஒன்றாகும். வணிக ரீதியாகத் தோல்வி அடையினும், இது விமர்சகர்கள், திரையுலகக் கலைஞர்கள் மற்றும் இணைத் திரைப்படத்தில் ஆர்வமுற்ற ரசிகர்கள் ஆகியோரிடையே பெரும் பாராட்டுகளைப் பெற்றது

கதைக் குறிப்பு

ஆவணப்படங்களை இயக்குவதில் ஆர்வம் கொண்ட அருண் (கமலஹாசன்) என்னும் இளைஞன், விளம்பர நிறுவனம் நடத்துகிற தனது நண்பன் (ரஜினிகாந்த்) அலுவலகத்தில் பணியாற்றும் மஞ்சு (ஸ்ரீபிரியா) என்னும் பெண்ணைச் சந்திக்கிறான். உலகில் பெண்களின் இருப்பைப் பற்றியதான, "முழு வானில் பாதி' என்று தான் பெயரிட்ட அந்த ஆவணப்படத்திற்கு உதவியாகப் பணி புரியுமாறு வேண்டுகையில், மஞ்சு தயக்கத்துடன் சம்மதிக்கிறாள்.

இருவருக்கும் இடையிலான சந்திப்புகளில் அருண் மெள்ள மெள்ள, துவக்கத்தில் ஆணவம் மிக்கவளாகத் தோற்றமளிக்கும் மஞ்சு, வாழ்க்கையில் தனக்கு நிகழ்ந்த தொடர் தோல்விகளின் காரணமாக, வாழ்க்கையின் மீதும், மனிதர்களின் மீதும் நம்பிக்கையற்றுப் போயிருப்பதை உணர்கிறான். அவளுக்கு நம்பிக்கை அளித்து தானே மணக்க விரும்பும் அருணின் முயற்சி தோல்வியடையவும், அவன் தனது தந்தை தனக்காகப் பார்த்த பெண்ணை மணந்து கொள்கிறான். அச்சமயமே அவன் மீது தனக்குள்ள காதலை உணரும் மஞ்சு, "மீண்டும் ஒரு முறை இறக்கிறாள். இருப்பினும் அவள் மீண்டும் பிறப்பாள். அவள் அப்படித்தான்."

வெளியீடும் விமர்சனங்களும்

கமலஹாசன் மற்றும் ரஜினிகாந்த் முன்னணி நடிகர்களாக நிலைபெறத் துவங்கியிருந்தபோது, வண்ணப்படங்கள் மிகுந்த அளவில் தயாரிக்கப்பட்டு வருகையில், கருப்பு வெள்ளைப் படமாக இது 1978ஆம் வருடம் தீபாவளி அன்று வெளியானது. இதன் நெகிழ்வற்ற திரைக்கதை அமைப்பினாலும், உத்திகளும், குறியீடுகளும் நிறைந்த இயக்க முறைமையினாலும் வர்த்தக ரீதியாக (நடித்திருந்த மூவருமே முன்னணி நட்சத்திரங்களாக இருந்தபோதிலும்) தோல்வியுற்றது. மேலும், அச்சமயம் வெளிவந்த கமலஹாசனின் சிகப்பு ரோஜாக்கள் மற்றும் ரஜினிகாந்தின் தப்புத் தாளங்கள் ஆகிய பெரும் படங்களுடன் போட்டியிட முடியாமையும் ஒரு காரணமானது.

வெகுஜன ரசிகர்கள் முதல் பார்வையில் நிராகரித்து விட்டபோதிலும், திரையுலகைச் சேர்ந்த பலரும் இதனை வெகுவாகப் பாராட்டினார். சிகப்பு ரோஜாக்களின் இயக்குனரான பாரதிராஜா, வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நிர்ப்பந்தம் இருப்பதனாலேயே இது போன்ற படத்தைத் தம்மால் இயக்க இயலவில்லை என மனம் திறந்து குமுதம் பத்திரிகையில் பாரட்டியிருந்தார்.

ஆயினும், இதற்கென ஒரு ரசிகர் குழாம் உருவாகியது. அடுத்த சில ஆண்டுகளில் பெரு நகரங்களில் பல திரையரங்குகளில் இது மீண்டும் மீண்டும் காலைக் காட்சிகளாக வெளியானது.

படத்தின் சிறப்பம்சங்கள்

மஞ்சு என்னும் ஒற்றைக் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு, செயற்கையான திருப்பங்கள் ஏதுமின்றி வெகு இயல்பாக அமைந்திருந்த திரைக்கதையும், அக்கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்த ஸ்ரீபிரியாவின் நடிப்பாற்றலும் குறிப்பான சிறப்புக்கள்.

கதாநாயகர்களாக நிலைபெற்று இருப்பினும், கமலஹாசன் மற்றும் ரஜினிகாந்த் ஆகிய இருவருமே படத்தின் மற்றும் தங்களது பாத்திரத்தின் தன்மையை உணர்ந்து, எந்த ஒரு நிலையிலும் தங்களது ஆதிக்கம் வெளிப்படாதவாறு மிகச் சிறப்பாக, இயக்குனரின் நடிகர்களாக, தமது பங்கீட்டை வழங்கியிருந்தனர்.

தனது கடந்த கால ஏமாற்றம் ஒன்றை விவரிக்கையில் ஆவேசம் (hysteria) மிகுந்து வெளிப்படும் காட்சியில் மிக அற்புதமாக ஸ்ரீபிரியாவின் நடிப்பாற்றலும், அக்காட்சியமைப்பினைத் தாங்கும் வண்ணம் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளாத கமலஹாசனின் இயல்பான நடிப்பும் மிகுந்த பாராட்டுப் பெற்றன.

கதைக்கேற்ற இசையினை இளையராஜா வழங்கியிருந்தார். முதன்மையாக பியானோ இசையில் உருவாக்கப்பட்டு ஜெயச்சந்திரன் பாடிய "உறவுகள் தொடர்கதை" என்னும் பாடல் இன்றளவும் பிரபலமாக உள்ளது. எஸ்.ஜானகி "வாழ்க்கை ஓடம் செல்ல" (பந்துவராளி என்னும் ராகத்தின் அடிப்படையில்) என்னும் பாடலைப் பாடியிருந்தார். கமலஹாசன் தனது சொந்தக் குரலில் "பன்னீர் புஷ்பங்களே" (ரேவதி இராக அடிப்படையில்) என்னும் பாடலைப் பாடியிருந்தார்.

மேற்கோள்கள்

  1. "Aval Appadithan Vinyl LP Records". musicalaya. பார்க்கப்பட்ட நாள் 2014-01-27. {{cite web}}: Cite has empty unknown parameter: |1= (help)

வெளியிணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=அவள்_அப்படித்தான்&oldid=1756875" இலிருந்து மீள்விக்கப்பட்டது