"நிறப்புரி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
269 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
*விரிவாக்கம்*
(*விரிவாக்கம்*)
(*விரிவாக்கம்*)
[[படிமம்:Chromosome.svg|thumb|250px|[[மெய்க்கருவுயிரி]] உயிரணுவின் பிரிகையின் பொழுது படியெடுக்கப்படும் நிறப்புரியின் படம். (1) [[நிறமியன்]](Chromatid) – உயிரணுப் பிரிகையில் உருவேறும் நிலை எனப்படும் (S Phase) நிலைக்குப் பிறகு நிறப்புரியில் உள்ள ஒரேமாதிரியான இரண்டு படிகளில்பகுதிகளில் ஒன்று (2) [[மையப்படி]] (Centromere) – இவ்விடத்தில் இரண்டு நிறமியன்களும் தொட்டுக்கொண்டு இருக்கும், இங்கே நுண்குழலிகள் (microtubules) ஒட்டிக்கொண்டு இணைப்பு கொள்ளுகின்றன. (3) குறுங்கை இழை. (4) நெடுங்கை இழை.]]
 
'''நிறப்புரி''' அல்லது '''நிறமூர்த்தம்''' (''Chromosome'', '''குரோமோசோம்''') என்பது [[மரபியல்]] தகவல்களை கடத்தக்கூடிய [[மரபணு]]க்களைக் கொண்ட, [[உயிரணு]]க்களில் காணப்படும் [[டி.என்.ஏ]] மூலக்கூற்றையும் அதனுடன் இணைந்த [[புரதம்|புரதங்களையும்]] குறிக்கின்றது. இது [[மெய்க்கருவுயிரி]]களின் உயிரணுவில் இருக்கும் [[உயிரணுக் கரு|கரு]]வில் ஒரு நூலிழை போன்ற அமைப்பையும்; [[பாக்டீரியா|பாக்டீரியாக்களிலும்]], மெய்க்கருவுயிரிகளின் [[இழைமணி]]களிலும், [[தாவரம்|தாவரங்களின்]] [[பச்சையவுருமணி]]களிலும் வட்டவடிவிலான அமைப்பையும் கொண்டிருக்கின்றது<ref>{{cite web | url=http://www.thefreedictionary.com/chromosome | title=Chromosome | author=The Free Dictionary, By Farlex}}</ref><ref>{{cite web | url=http://www.biology-online.org/dictionary/Chromosome | title=Chromosome | author=Biology Online}}</ref>.
நிறப்புரிகளின் அமைப்பும் கட்டுமானமும் உயிரினத்துக்கு [[உயிரினம்]] வேறாக உள்ளன. இவை நேரிழையாகவோ, வட்டவடிவமாகவோ (வளையம்) இருக்கின்றது. அத்துடன் நிறப்புரிகள் 100,000 முதல் 3,750,000,000 நியூக்கிளியோட்டைடுகள் கொண்ட நீளமான இழைகளாக இருக்கும்<ref>{{cite journal|author=Paux E, Sourdille P, Salse J, ''et al.''|title=A Physical Map of the 1-Gigabase Bread Wheat Chromosome 3B|journal=Science|volume=322|issue=5898|pages=101–104|year=2008|doi=10.1126/science.1161847 |pmid=18832645}}</ref><ref>{{cite journal|author=Pellicer J, Fay M F and Leitch I J|title=The largest eukaryotic genome of them all?|journal=Botanical Journal of the LinneanSociety|volume=164|pages=10–15|year=2010|doi=10.1111/j.1095-8339.2010.01072.x}}</ref>. பல விதிவிலக்குகள் காணப்பட்டாலும், பொதுவாக மெய்க்கருவுயிரிகள் நீண்ட நேரிழையான நிறப்புரிகளையும், நிலைக்கருவிலிகள் வட்டவடிவான நிறப்புரிகளையும் கொண்டிருக்கின்றன. ஒரு உயிரணுவிலேயே வேறுபட்ட வகையான நிறப்புரிகளும் உள்ளன. மெய்க்கருவுயிரிகளில், கருக்களில் நீண்ட இழை அமைப்பையும், இழைமணிகளில் வட்டவடிவான அமைப்பையும், தாவர உயிரணுக்களில் வட்டமான அமைப்பையும் கொண்டிருக்கின்றன.
 
மெய்க்கருவுயிரிகளின் உயிரணுக்கருவில் இருக்கும் நிறப்புரியானது புரதங்களுடன் இணைக்கப்பட்டு மிக நெருக்கமாக அடுக்கப்படும்போது நிறமியன் (Chromatin) என அழைக்கப்படுகின்றது. இவ்வாறு நெருக்கமான, ஒடுக்கப்பட்ட அமைப்பைக் கொண்டிருப்பதனால் கருவினுள் அடக்கப்படுகின்றது. கலப்பிரிவின்போது, இந்த நிறப்புரிகள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. கலப்பிரிவின்போது தாய்க்கலத்தில் இருந்து, மகட்கலங்களுக்கு மரபியல் கூறுகள் கடத்தப்பட வேண்டி இருப்பதனால், நிறப்புரிகள் இரட்டிப்பாதலும், பின்னர் பிரிதலும் நிகழ வேண்டும். எனவே உயிரணுக்களில் நிறப்புரிகளை இரட்டிப்பான நிலையிலும், அவ்வாறு இரட்டிப்பாகாத நிலையிலும் காணலாம். இரட்டிப்பாகாத நிலையில் தனி இழையாகவும், இரட்டிப்பான நிலையில் ஒன்றையொன்று ஒத்த, சோடியான இரு பிரதிகள் காணப்படும். இப்பிரதிகள் அரைநிறவுருக்கள் (Chromatids or Sister chromatids) என அழைக்கப்படும். இந்த அரைநிறவுருக்கள் மையப்படி (Centromere) என்னும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இணைக்கப்பட்டிருக்கும். இது நடிவில்நடுவில் இருக்கையில் நிறப்புரி நான்கு பிரிவுகளையும்கைகளையும், ஒரு முடிவுக்கு அருகில் இருப்பின் இரு பிரிவுகளையும்கைகளையும் கொண்டிருக்கும். நீண்ட இழைகள் நெடுங்கை இழைகள் எனவும், குறிகியவை குறுங்கை இழைகள் எனவும் அழைக்கப்படுகின்றன.
 
== அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும் ==
23,839

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1485904" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி