பேச்சு:நிறப்புரி
Jump to navigation
Jump to search
நிறமூர்த்தம் என்பது வழக்கில் இருக்கும் சொல்; இரண்டு இடங்களிலும் தமிழ்நாடு, ஈழம். எனவே அதை எடுத்தாள்வது நன்று. --Natkeeran 02:55, 29 ஜூலை 2009 (UTC)
- மூர்த்தம் என்றால் என்ன பொருள்? தமிழ்நாட்டுப் பாட நூல்களில் எங்கு இச்சொல் உள்ளது. பாடநூல்களில் குரோமோசோம் என்று பயன்படுத்துவதாகத் தெரிகின்றது. இங்கு பாருங்கள். மிகவும் வருந்தத்தக்க கலப்புநடையில் எழுதியுள்ளார்கள். நிறமூர்த்தம் என்பதை இலங்கை வழக்கு எனக் குறிக்கின்றேன்.--செல்வா 03:19, 29 ஜூலை 2009 (UTC)
- கூகிளில் போட்டுப் பாத்துச் சொன்னேன். இலங்கை வழக்காக மட்டும் இருக்கலாம். என்ன பொருள் என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் ஓரளவாவது வழக்கில் இருக்கும் இந்தச் சொல்லைப் பயன்படுத்துவது நன்று என்று படுகிறது. --Natkeeran 03:50, 29 ஜூலை 2009 (UTC)
- மூர்த்தம் என்றால் பொதுவாக உருவம் என்று பொருள். சமசுக்கிருதச் சொல்லாகிய மூர்த" என்பதில் இருந்து வந்ததாக தமிழ்ப்பேரகராதி குறிக்கின்றது ( < mūrta. 1. That which has form, figure, shape or body; வடி வுடைப்பொருள்). நிறமூர்த்தம் என்பது குரோமோசோம் என்பதன் நேரடியான மொழி பெயர்ப்பு. நிறப்புரி என்பது இன்னும் சிறப்பான சொல்லாக்கம். --செல்வா 04:29, 29 ஜூலை 2009 (UTC)
- நிறப்புரி எனும் சொல்லில் "புரி" என்றால் என்ன அர்த்தத்தைத் தருகிறது?--சி. செந்தி 00:07, 14 நவம்பர் 2010 (UTC)
- சி. செந்தி, மன்னிக்கவும் இப்பொழுதுதான் உங்கள் கேள்வியைப் பார்க்கின்றேன். புரி என்றால், நூல், நூலிழை, கயிறு, கயிற்றின் கூறாக உள்ள இழை. கட்டுங்கயிறு என்றே கழக அகராதி கூறும். புரி என்பது யாழின் நரம்பையும் குறிக்கும். முப்புரி நூல் என பூணூலைக் குறிப்பார்கள் ஏனெனில் மூன்று இழைகள் முறுக்கி ஆன நூல். நிறப்புரி என்னும் சொல்லில் புரி என்பது இழை, நூல்போன்ற பொருள், கட்டப்பட்ட இழை, முறுக்கிக்கட்டப்பட்ட இழை என்னும் பொருள்கள் பொருந்த வருவது. புரி என்னும் வினைச்சொல்லும் பல பொருள்கள் கொண்டவை. புரிந்தார் என்றால் செய்தார், தந்தார், உருவாக்கினார், வழங்கினார் எனப்பொருள்கள் கொண்டவை. சுருண்டிருப்பது. புரிந்துகொள்ளுதல் என்பது தன்னுள்ளே, பொருள்கொண்டு இயங்குவதாகக்கொள்ளும் அறிவு. தன்னுள்ளே கட்டப்படும் இயங்கறிவு. பிடித்துக்கொள்வது. --செல்வா (பேச்சு) 14:57, 8 சூலை 2016 (UTC)
மிக்க நன்றி, அருமையான விளக்கம். --☤சி.செந்தி☤ (உரையாடுக) 15:02, 30 சூலை 2016 (UTC)