பயனர் பேச்சு:TNSE JOHN VLR: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎பதக்கம்: விக்கியன்பு 2.0 மூலம் வழங்கப்பட்டது
வரிசை 34: வரிசை 34:


தங்களின் பேச்சுக்கு மிகுந்த நன்றி. சரியான நேரத்தில் எனக்கு தங்களின் ஆலோசனைகளை அளித்து இருக்கிறீர்கள். வருங்காலத்தில் அதை செயற்படுதுவேன் என்று உறுதி கூறுகிறேன். எப்போதும் தங்களின் ஆலோசனைகளை எனக்கு தரவும். நன்றி.
தங்களின் பேச்சுக்கு மிகுந்த நன்றி. சரியான நேரத்தில் எனக்கு தங்களின் ஆலோசனைகளை அளித்து இருக்கிறீர்கள். வருங்காலத்தில் அதை செயற்படுதுவேன் என்று உறுதி கூறுகிறேன். எப்போதும் தங்களின் ஆலோசனைகளை எனக்கு தரவும். நன்றி.
== பதக்கம் ==
{| style="background-color:#fdffe7;border:1px solid#fceb92;max-width:80%;"
|rowspan="2" style="vertical-align: middle; padding: 5px;" | [[File:Peace Barnstar Hires.png|100px]]
|style="font-size: x-large; padding: 3px 3px 0 3px;height:1.5em;" | செயல்நயம் மிக்கவர் பதக்கம்
|-
|style="vertical-align: middle; padding: 3px;border-top: 1px solid#fceb92;" | நூறு கட்டுரைகள் எழுதியது, ஆர்வத்துடன் கிருசுணகிரி மாவட்டப் பயிற்சியில் பங்கு கொண்டு அங்குள்ள ஆசிரியர்களுக்கும் விரிவுரையாளர்களுக்கும் வழிகாட்டியது, ஆர்வத்துடன் விக்கி நெறிகளைப் புரிந்து கொண்டு அவ்வழியில் நடக்க முனைவது என்று உங்கள் செயல்நயத்தையும் ஈடுபாட்டையும் பாராட்டி இப்பதக்கத்தை வழங்குவதில் மகிழ்கிறேன். --[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 18:28, 8 சூலை 2017 (UTC)
<small>[[விக்கிப்பீடியா:விக்கியன்பு|விக்கியன்பு]] மூலம் வழங்கப்பட்டது ([[விக்கிப்பீடியா:விக்கியன்பு/பதிகை#128|பதிகை]])</small>
|}

18:28, 8 சூலை 2017 இல் நிலவும் திருத்தம்

வாருங்கள்!

வாருங்கள், TNSE JOHN VLR, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:


-- Chandravathanaa (பேச்சு) 15:59, 20 ஏப்ரல் 2017 (UTC)

கட்டுரைத் தலைப்பு

வணக்கம். தாங்கள் பல புதிய கட்டுரைகளை உருவாக்கி வருவது கண்டு மகிழ்ச்சி. தலைப்பின் முதல் எழுத்துகளுக்கு அடுத்து ஒரு புள்ளியும் இடைவெளி விட வேண்டும். எடுத்துக்காட்டுக்கு, ஏ. எம். அமீத் இப்ராஹிம் என்று எழுத வேண்டும். மேலும் விவரங்களுக்கு விக்கிப்பீடியா:பெயரிடல் மரபு பாருங்கள்.--இரவி (பேச்சு) 17:12, 22 சூன் 2017 (UTC)[பதிலளி]

சரிங்க ஐயா. திருத்தி கொள்கிறேன். ஆலோசைனைக்கு நன்றி. சம்பி காத் என்ற குறுங்கட்டுரைக்கு வரைபடத்தை இணைக்க இயலவில்லை. உதவவும் நன்றி

நான் அனைவரும் இங்கு உடன் பங்களிப்பவர்களே. எனவே, தாங்கள் தோழமையுடன் மற்ற பயனர்களைப் பெயர் சொல்லியே அழைக்கலாம். சம்பி காத் கட்டுரையில் நான் செய்துள்ள மாற்றங்களைக் கவனியுங்கள். Longitude மதிப்பு கொடுக்காததால் வரைபடம் வராமல் இருந்தது. ஆங்கில விக்கிப்பீடியா கட்டுரைக்குச் சென்று, Edit Source என்ற இணைப்பை அழுத்தி அங்கிருந்த உரையை இங்கு வெட்டி ஒட்டி சீர் செய்துள்ளேன். இணைக்கப்பட்டிருந்த மேற்கோள் ஆங்கில விக்கியிலும் கூட ஒழுங்காகக் காட்டப்படாமல் இருந்ததால் அதனை நீக்கி உள்ளேன். இது போன்ற உதவி கோரிக்கைகளை கட்டுரையின் உரையாடல் பக்கத்திலேயோ ஒத்தாசைப் பக்கத்திலேயோ கேட்டால் மற்ற பயனர்கள் உடன் உதவுவர். --இரவி (பேச்சு) 15:45, 24 சூன் 2017 (UTC)[பதிலளி]

மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி திரு இரவி அவர்களே..

தலைப்பின் முதல் எழுத்துகளுக்கு அடுத்து ஒரு புள்ளியும் இடைவெளி விட வேண்டும். எடுத்துக்காட்டுக்கு, ஆர். துரைசாமி, பி. சின்னப்பன் என்று எழுத வேண்டும். அண்மையில் இருக்கும் கட்டுரைகளில் புள்ளியை விட்டுள்ளீர்கள். இதனைக் கவனித்து அடுத்தடுத்த கட்டுரைகளில் பங்களிக்க வேண்டுகிறேன். இவ்வாறு தலைப்பில் பிழை நேரும் போது மற்ற பயனர்கள் அதனைக் கவனித்து பக்கத்தை சரியான தலைப்புக்கு நகர்த்த வேண்டிய வேலைப்பளு கூடும். நன்றி. --இரவி (பேச்சு) 06:56, 25 சூன் 2017 (UTC)[பதிலளி]

விக்கியாக்கம்

வணக்கம். தாங்கள் ஆறுகள் தொடர்பாக எழுதி வருவது மகிழ்ச்சி. ஒரு முறை கட்டுரையைப் பதிப்பித்த பின் அதனை எப்படி விக்கியாக்கம் செய்வது, உரை திருத்துவது என்பதற்கு எடுத்துக்காட்டாக இங்குள்ள மாற்றங்களைக் காணுங்கள். இவ்வாறான தொகுப்புகளைக் கவனித்து விக்கிப் பங்களிப்புகளில் இன்னும் நீங்கள் அடுத்தடுத்த படி நிலைகளுக்குச் செல்ல வேண்டும் என்று எண்ணியே இவற்றைப் பகிர்கிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 07:17, 25 சூன் 2017 (UTC)[பதிலளி]

நன்றி திரு ரவி அவர்களே... விக்கியாக்கம் தகவல்கள் மிகவும் ஆர்வத்தை தூண்டுவதாக இருக்கிறது. அடுத்த கட்டுரைகளில் முயற்சிக்கிறேன். செய்த தவறுகளை பார்க்கும்போது இன்னும் பொறுமையாக கவனத்துடன் பணியாற்ற வேண்டும் என்பதை உணர்கிறேன்.−முன்நிற்கும் கருத்து TNSE JOHN VLR (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

ஆர்வத்துடன் விறுவிறு என்று கட்டுரைகளை ஏற்றும் போது, அதுவும் எழுத்துப் பெயர்ப்பு முறையிலான விசைப்பலகை என்றால், சிறு பிழைகள் நேர்வது இயல்பு. கட்டுரையைப் பதிப்பித்த பின் ஒரு முறை படித்துப் பார்த்து உரை திருத்தினால் இவற்றில் பெரும்பாலான மாற்றங்களை நீங்களே இனங்காணலாம். கொடவானர் ஆறு கட்டுரையில் நீங்கள் பயன்படுத்தி இருந்து பல அடுக்கு சரிவு நிலப்பகுதி போன்ற சொல்லாடல்களை இரசித்துப் படித்தேன். பல்வேறு திசைகள், ஆறுகள் என்று எளிதில் குழப்பக்கூடிய ஆங்கிலக் கட்டுரையை மிக நேர்த்தியாகத் தமிழ் வாசிப்புக்கு மாற்றி இருந்தீர்கள். உங்களைப் போன்ற ஒரு சிலருக்கு இன்னும் கூடுதல் வழிகாட்டினால் நீங்கள் இன்னும் பல நூறு பேருக்கு அதனைக் கொண்டு செல்வீர்கள் என்ற ஆர்வத்தில் மீண்டும் மீண்டும் உங்கள் பேச்சுப் பக்கத்துக்கு வருவேன் :) --இரவி (பேச்சு) 08:36, 25 சூன் 2017 (UTC)[பதிலளி]

நீங்களே ரசித்தேன் என்று கூறியிருப்பதால் தலை கால் புரியவில்லை. மிக மிக மகிழச்சி. விக்கிபீடியாவிற்கும் தமிழுக்கும் தொடர்ந்து பணியாற்ற உங்கள் ஊக்கமளிக்கும் பேச்சு உற்சாகத்தை தருகிறது.

பாராட்டுகள்

வணக்கம். ஜான். 80 க்கும் மேற்பட்ட கட்டுரைகளை உருவாக்கியுள்ளதற்கு எனது பாராட்டுகளும் வாழ்த்துகளும். துவக்க காலகட்டம் என்பதால் ஆங்கில விக்கிப்பீடியாவிலுள்ள குறுங்கட்டுரைகளாகத் தேடிப்பிடித்து தமிழில் மொழிபெயர்த்துள்ள உங்களது உத்தியும், மொழிபெயர்ப்புக் கருவிகள் எதையும் பயன்படுத்தாமல் சொந்தமாக மொழிபெயர்ப்பு செய்யும் நேர்த்தியும், தொடர்ந்து கட்டுரைகளை உருவாக்கும் ஆர்வத்துடன் கூடிய உங்களது உழைப்பும் என்னை இங்கு உங்களது பேச்சுப்பக்கத்திற்கு அழைத்து வந்துள்ளது. வாழ்த்துகள்.

இனிவரும் கவனத்திற்கு எனது பரிந்துரைகள்:

  • குறுங்கட்டுரைகள் குறைந்தது மூன்று வாக்கியங்கள் கொண்டிருக்க வேண்டும்.
  • மேற்கோள்கள் அவசியம் வேண்டும். அவ்வாறு மேற்கோளாகக் காட்டப்படுவது இணையப் பக்கமாக இருந்தால் அதனைச் சொடுக்கி செயற்பட்டில் உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
  • குறுங்கட்டுரைகளிலிருந்து அடுத்த கட்ட நகர்வாக சற்றே பெரிய கட்டுரைகளுக்கு (உங்களுக்கு விருப்பமான துறை சார்ந்தவை) நகரலாம்.

நன்றி.--Booradleyp1 (பேச்சு) 15:58, 26 சூன் 2017 (UTC)[பதிலளி]

தங்களின் பேச்சுக்கு மிகுந்த நன்றி. சரியான நேரத்தில் எனக்கு தங்களின் ஆலோசனைகளை அளித்து இருக்கிறீர்கள். வருங்காலத்தில் அதை செயற்படுதுவேன் என்று உறுதி கூறுகிறேன். எப்போதும் தங்களின் ஆலோசனைகளை எனக்கு தரவும். நன்றி.

பதக்கம்

செயல்நயம் மிக்கவர் பதக்கம்
நூறு கட்டுரைகள் எழுதியது, ஆர்வத்துடன் கிருசுணகிரி மாவட்டப் பயிற்சியில் பங்கு கொண்டு அங்குள்ள ஆசிரியர்களுக்கும் விரிவுரையாளர்களுக்கும் வழிகாட்டியது, ஆர்வத்துடன் விக்கி நெறிகளைப் புரிந்து கொண்டு அவ்வழியில் நடக்க முனைவது என்று உங்கள் செயல்நயத்தையும் ஈடுபாட்டையும் பாராட்டி இப்பதக்கத்தை வழங்குவதில் மகிழ்கிறேன். --இரவி (பேச்சு) 18:28, 8 சூலை 2017 (UTC)[பதிலளி]

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:TNSE_JOHN_VLR&oldid=2358390" இலிருந்து மீள்விக்கப்பட்டது