சிரத்தா தாஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிரத்தா தாஸ்
2018இல் சிரத்தா தாஸ்
பிறப்பு2 மார்ச்சு 1987 (1987-03-02) (அகவை 36)
மும்பை, இந்தியா
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
2008–தற்போது வரை

சிரத்தா தாஸ் (Shraddha Das) (பிறப்பு 4 மார்ச் 1987) ஓர் இந்திய திரைப்பட நடிகையும், வடிவழகியும், பாடகியும் ஆவார். இவர் தெலுங்கு, இந்தி, கன்னடம், பெங்காலி, மலையாளத் திரைப்படங்களில் தோன்றுகிறார். இயக்குநர் வினயன் இயகத்தில் 2012இல் வெளியான டிராகுலா என்ற மலையாளப் படத்தில் கதாநாயகியாகத் தோன்றினார்.

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

சிரத்தா தாஸ் மகாராட்டிராவின் மும்பையில் வங்காளப் பெற்றோருக்கு பிறந்தார்.[1] இவரது தந்தை சுனில் தாஸ் என்பவர் ஒரு தொழிலதிபர் ஆவார். அவர் புருலியாவைச் சேர்ந்தவர். இவரது தாயார் சப்னா தாஸ் ஒரு இல்லத்தரசி ஆவார்.[2] சிரத்தா பௌத்த மதத்தை பின்பற்றுகிறார்.[3] மும்பையில் வளர்ந்த இவர் தனது ஆரம்பக் கல்வியை மும்பையிலேயே முடித்தார். பின்னர் ரூயா கல்லூரியிலும், மும்பை பல்கலைக்கழகத்தின் எஸ்ஐஇஎஸ் வணிகவியல் மற்றும் பொருளாதாரக் கல்லூரியில் ஊடகவியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றார். [1][4]

கல்லூரியில் படிக்கும்போதே இவர் நாடகங்களில் ஈடுபட ஆரம்பித்தார். பியுஷ் மிஷ்ரா, சித்தரஞ்சன் கிரி, சலீம் ஷா போன்ற தேசிய நாடகக் கலைஞர்களால் நடத்தப்பட்ட பட்டறைகளில் கலந்து கொண்டார். கிளாட்ராக்ஸ் அகாதமியில் பயிற்சி பெறுவதற்கு முன்பு இவர் மெக்டொவல்ஸ், அரிஸ்டோக்ராட் போன்ற 400க்கும் மேற்பட்ட பொருட்களின் அச்சு விளம்பரங்களிலும் தோன்றினார்.[2]

தொழில்[தொகு]

சிரத்தா தாஸின் முதல் வெளியீடு 2008 ஆம் ஆண்டு சித்து பிரம் சீகாக்குளம் என்ற தெலுங்குப் படத்தின் மூலம் வந்தது. பின்னர், இவர் ஆறு மாதங்களுக்குள் நான்கு தெலுங்குப் படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார்.[2] 18, 20 லவ் ஸ்டோரி, டைரி, ஆதிநேதா, இயக்குநர் சுகுமாரின் ஆர்யா 2 போன்றவை.

2010 இல் சஞ்சய் பூரன் சிங் சவுகான் இயக்கிய சாய் ஓம் பிலிம்ஸின் முதல் முயற்சியான லாகூர் படத்தின் மூலம் இவர் பாலிவுட்டில் அறிமுகமானார். இது இவரது முதல் இந்திப் படமாகும். ஆனால் பட வெளியீடு தாமதமானாலும் இவருடைய பல படங்கள் முன்பே வெளியிடப்பட்டன. கல்லூரியின் இறுதியாண்டிலேயே இவர் படத்தில் நடிக்க ஆரம்பித்தார்.[2] இந்தப் படத்தில் இவர் பாக்கித்தானைச் சேர்ந்த ஓர் மனநல மருத்துவராக நடித்திருந்தார்.[5] இவரது நடிப்பிற்காக விமர்சகர்களின் பாராட்டைப் பெற்றார். இந்தியா-பாக்கித்தான் உறவுகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் மார்ச் 2010 இல் வெளியிடப்பட்டது . 42 வது வேர்ல்ட் பெஸ்ட்-ஹூஸ்டன் சர்வதேச திரைப்பட விழாவிலும், 57 வது தேசிய திரைப்பட விருதுகளிலும் விருதுகளை வென்றது.[6] இதே ஆண்டின் மற்ற மூன்று வெளியீடுகளான ஏ.கருணாகரனின் டார்லிங், 1978 வெளியான மரோசரித்ரா படத்தின் மறு ஆக்கமான தில் ராஜு தயாரித்த மரோ சரித்ரா , பி வாசுவின் நாகவள்ளி போன்ற படங்களில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். ஆர்யா, மந்திரம் , சந்திரமுகி ஆகியவற்றின் தொடர்ச்சிகளில் தோன்றியதால், சிரத்தா தாஸ் "தொடர்ச்சியான இராணி" என்ற புனைப்பெயரைப் பெற்றார். 2011இல் வெளியான தில் தோ பச்சா ஹை ஜி இவரது இரண்டாவது இந்தி படமாகும். அடுத்த இரண்டு ஆண்டுகளில், ஹோச பிரேம புராணம் , டிராகுலா 2012 ஆகிய இரண்டு படங்களில் தோன்றினார். அவை முறையே இவரது கன்னட, மலையாள அறிமுகமாகும்.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிரத்தா_தாஸ்&oldid=3686768" இருந்து மீள்விக்கப்பட்டது