பியுஷ் மிஷ்ரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பியுஷ் மிஷ்ரா
பிறப்புPriyakansha Sharma
13 சனவரி 1963 (1963-01-13) (அகவை 60)
குவாலியர், இந்தியா
பணிநடிகர், திரைக்கதை எழுத்தாளர், பாரலாசிரியர், பாடகர்

பியுஷ் மிஷ்ரா (Piyush Mishra; 13 சனவரி 1963) என்பவர் ஒரு இந்திய திரைப்பட நடிகரும், இசையமைப்பாளரும், கவிஞரும், பாடகரும், திரைக்கதை, கதைவசன எழுத்தாளரும் ஆவார். அவர் தன் ஆரம்ப கால வாழ்க்கையை குவாலியரில் கழித்தார். அங்குதான் கல்வியும் பெற்றார்.

தொழில் வாழ்க்கை[தொகு]

தியேட்டரும் தொலைக்காட்சியும்[தொகு]

1986 இல் புது டெல்லியின் தேசிய நாடகப் பள்ளியில் தன் பட்டப்படிப்பை முடித்தபின், இவர் தன் பணியை ஒரு மேடைநாடக நடிகராகத் தொடங்கி, ஆக்ட்-1 குழுவின் (1990–1995) ஒரு அங்கமாக பல நாடகங்களை எழுதி இயக்கத் தொடங்கினார். 1996 இல், அஸ்மிடா தியேட்டர் குழுவில் இணைந்து, தன் பிரபலமான தனி மனித காட்சிகளான பியுஷ் மிஷ்ராவுடன் ஒரு மாலைப் பொழுது நிகழ்ச்சிகளை நடத்தினார். அஸ்மிடாவின் பிரபல நாடகங்களுக்கான கவிதைகளை எழுதினார். ஆபரேஷன் திரி ஸ்டாரில் "ஆக்சிடண்டல் டெத் ஆஃப் அன் அனார்கிஸ்ட்" இல் பியுஷ் ஒரு பைத்தியமாக நடித்தார். ஸ்வதேஷ் தீபக்கின் கோர்ட் மார்சியலில் ரஞ்சித் கபூருடன் (1991) முதன்முதலாக சூரத் சிங்காகவும் அர்விந்த் கவுரின் (1996) இயக்கத்தின் கீழ் பின்னர் நடித்ததையும் வைத்தே பியுஷ் அதிகம் அறியப்பட்டார்.[1]

ஸ்ரீ்ராம் சென்டர் ரெப் நிறுவனத்துக்காக "காமடி ஆஃப் டெரரை" பியுஷ் மிஷ்ரா இயக்கினார்.[2] ஸ்டார் டிவிக்காக டிக்மான்ஷு துலியாவின் இயக்கத்தில் வந்த ராஜ்தானி என்ற தொலைக்காட்சி தொடரிலும் மிஷ்ரா நடித்துள்ளார்.

திரைப்படங்கள்[தொகு]

1998 இல் வெளிவந்த மணி ரத்னத்தின் படமான தில் சேதான் மிஷ்ராவின் முதல் படமாகும். இருந்தும் தொடர்ந்து நாடக வாய்ப்புக்காக டெல்லியிலே தங்கினார். 2001 ஆம் ஆண்டு படமான ராஜ்குமார் சந்தோஷியின் "த லெஜண்ட் ஆஃப் பகத் சிங்கில்" வசனங்கள் எழுதிய போதுதான் அவர் முதன்முதலாக நாடக ஆசிரியரில் இருந்து திரைக்கதை ஆசிரியராக மாறினார்.

திரைப்பட விவரங்கள்[தொகு]

நடிகர்[தொகு]

  • சர்தார் (1993)(கவுரவத் தோற்றம்)
  • தில் சே (1998)
  • சாமுராய் (தமிழ்) (2002)
  • மக்பூல் (2003)
  • பட்டர்பிளை (2003)
  • சாலா பந்தர்! 2003)
  • ஏக் தின் 24 காண்டே (2003)
  • மாத்ருபூமி (2003)
  • தீவார் (2004)
  • சூப்பர் (தெலுங்கு) (2005)
  • 1971 (2007)
  • ஜூம் பராபர் ஜூம் (2007)
  • குலால் (2009)

பாடல்வரிகள்[தொகு]

  • தில் பே மாத் லே யார்!! (2000)
  • பிளாக் பிரைடே (2004)
  • ஆஜா நச்லே (2007)
  • டஷன் (2008)
  • குலால் (2009)

திரைக்கதை மற்றும் கதைவசனம்[தொகு]

  • த லெஜண்ட் ஆஃப் பகத் சிங் (2002) - கதைவசனம்
  • யாஹன் (2005) - திரைக்கதை, கதைவசனம்
  • 1971 (2007) - திரைக்கதை

பாடகர்[தொகு]

  • ஆரம்ப் ஹே பிரசந்த் குலால்-2009)
  • யாரா மவுலா (குலால்-2009)
  • துனியா (குலால்-2009)
  • ஜப் ஷேஹர் ஹமாரா (குலால்-2009)
  • (துனியா) விமல் ஷர்மா(குலால் 2009)

உசாத்துணை[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பியுஷ்_மிஷ்ரா&oldid=3758349" இருந்து மீள்விக்கப்பட்டது