உள்ளடக்கத்துக்குச் செல்

சியாமிய கருப்பு வெள்ளை மைனா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சியாமிய கருப்பு வெள்ளை மைனா
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
இசுடுருனிடே
பேரினம்:
கிராகுபிகா
இனம்:
கி. பிளவெரி
இருசொற் பெயரீடு
கிராகுபிகா பிளவெரி
(சார்ப்பி, 1897)

சியாமிய கருப்பு வெள்ளை மைனா (Siamese pied myna-கிராகுபிகா பிளவெரி) என்பது இசுடுர்னிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மைனா சிற்றினம் ஆகும். இதன் இறகுகள் கருப்பு வெள்ளை நிறத்திலும், கழுத்து கருப்பு நிறப் பட்டையுடன் காணப்படும். இது மியான்மர் மற்றும் சீனா முதல் தாய்லாந்து, லாவோஸ் மற்றும் கம்போடியா வரை காணப்படுகிறது. இது முன்பு கருப்பு வெள்ளை மைனா துணையினமாகக் கருதப்பட்டது. இது இப்போது மூன்று இனங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.[1] இது இந்தியக் கருப்பு வெள்ளை மைனா (கி. கான்ட்ரா) மற்றும் சாவகம் கருப்பு வெள்ளை மைனா (கி. ஜல்லா) சிற்றினங்களிலிருந்து இதன் நெற்றியில் காணப்படும் வெள்ளைக் கோடுகள் மூலம் வேறுபடுத்தி அறியலாம். மேலும் கி. காண்ட்ராவுடன் ஒப்பிடும்போது கண்ணைச் சுற்றியுள்ள சிறகுகளற்ற சிவப்பு-ஆரஞ்சு முகத் தோல், கி. ஜல்லாவுடன் ஒப்பிடும்போது மிகக் குறைவு.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Species Updates – IOC World Bird List" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 28 May 2021.
  2. Baveja, Pratibha; Garg, Kritika M.; Chattopadhyay, Balaji; Sadanandan, Keren R.; Prawiradilaga, Dewi M.; Yuda, Pramana; Lee, Jessica G. H.; Rheindt, Frank E. (2021). "Using historical genome-wide DNA to unravel the confused taxonomy in a songbird lineage that is extinct in the wild" (in en). Evolutionary Applications 14 (3): 698–709. doi:10.1111/eva.13149. பன்னாட்டுத் தர தொடர் எண்:1752-4571. பப்மெட்:33767745.